அரக்கோணம் காஞ்சிபுரம் எக்ஸ்பிரஸ்வே.. நின்ற பணி.. ரூ.633 கோடியில் டெண்டர்.. எப்போது முடியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரக்கோணம் காஞ்சிபுரம் எக்ஸ்பிரஸ்வே பற்றின தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. பெங்களூரு - சென்னை இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில், திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் - காஞ்சிபுரம் இடையிலான சாலைப் பணியை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI இப்போது திடீரென ரத்து செய்துள்ளது. ஏன்? என்ன காரணம்?

பெங்களூரு - சென்னை இடையே அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய எக்ஸ்பிரஸ்வே சுமார் 263 கி.மீ. நீளம் கொண்டது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என 3 மாநிலங்களை இணைக்கும் இந்த சாலை, இப்போதுள்ள சாலைகளைவிட வேகமாக பயணம் செய்ய உதவும் வகையில் அமைக்கப்படுகிறது.

NHAI Bengaluru Chennai Expressway Rs 633 Crore Road Project NHAI 633

இந்த திட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் முடிந்து, இறுதிக்கட்டத்தையும் நெருங்கி விட்டன.. ஆனாலும், அரக்கோணம் - காஞ்சிபுரம் பகுதி மட்டும் நீண்ட நாட்களாக சிக்கலில் இருந்தது.

அரக்கோணம் - காஞ்சிபுரம்

அரக்கோணம் அருகே தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வரை செல்லும் இந்தப் பகுதி சுமார் 25 கி.மீ. நீளம் கொண்டது. இங்கு சாலை அமைக்கும் பணியை டி.பி. ஜெயின் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால் கடந்த 2025 மே மாதத்தில் அந்த நிறுவனம் பணிகளை அடியோடு நிறுத்திவிட்டது... பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள போதுமான நிதி வசதி இல்லை என்றும் காரணம் சொல்லப்பட்டது.

பணியை நிறுத்தப்பட்டபோது, கிட்டத்தட்ட 53 சதவீத பணிகள் முடிந்திருந்தன. அதாவது, மொத்தம் சுமார் 25 கி.மீ. சாலை அமைக்க வேண்டிய நிலையில், சுமார் 11 கி.மீ. மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. எனவே, இந்தப் பகுதியை மட்டும் எப்படி விரைவாக முடிப்பது என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக NHAI மற்றும் ஒப்பந்த நிறுவனத்துக்கு இடையே பிரச்சினையும் ஏற்பட்டது.

பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே

கடைசியில் இந்த விவகாரம் சென்னை ஹைகோர்ட்டுக்கும் சென்றது. நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட 2 மேல்முறையீட்டு வழக்குகளும் முடிவுக்கு வந்த நிலையில், NHAI இப்போது பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

அதுமட்டுமல்ல, பாதியில் நிற்கும் சாலைப் பணிகளை முடிக்க NHAI புதிதாக டெண்டரையும் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க ரூ.633.12 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, அந்த நிறுவனம் 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு அந்த சாலையை பராமரிக்கவும் வேண்டும்.

புதிய டெண்டர்

புதிய டெண்டருக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 28-ம் தேதி வரை நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம். செப்டம்பர் 29-ம் தேதி டெண்டர்கள் திறக்கப்பட உள்ளன. அதாவது, பல மாதங்களாக நின்றுபோன இந்த சாலைப் பணியை மீண்டும் தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது.

மீதமுள்ள வேலை என்பது வெறும் சாலை போடுவது மட்டுமே கிடையாது.. பெரிய பாலங்கள், ரயில்வே மேம்பாலம், சிறிய பாலங்கள், வாகனங்கள் செல்லும் கீழ்ப்பாதைகள் உள்ளிட்ட பல கட்டுமானப் பணிகளும் செய்ய வேண்டியுள்ளது. அதனால்தான் புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட பிறகு பணிகள் முழுமையாக முடிவடைய சில காலம் பிடிக்குமாம்.

எப்போது ரெடியாகும்?

இந்த எக்ஸ்பிரஸ்வே முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால், பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. சல்லுனு வாகனங்களில் வந்துவிட முடியும், நேரமும் மிச்சமாகும்.. எனவேதான், அரக்கோணம் - காஞ்சிபுரம் பகுதி முக்கிய இணைப்பாக இருப்பதால், இந்த பகுதியில் பணிகள் முடிவடைவது முழுத்திட்டத்துக்கும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக நின்றுபோன பணிக்கு இப்போது புதிய டெண்டர் விடப்பட்டிருப்பதால், இந்தச் சாலை எப்போது முழுமையாக தயாராகும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+