Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரணி தாசில்தார் டூ ஈரோடு விஏஓ.. மலைக்க வைத்த தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி, ஊழியர்களின் லஞ்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்ச பணத்தில் அதிகாரிகள் சொத்து வாங்கி குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர்.. இதில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அடக்கம்.. பொதுவெளியிலேயே லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு சிக்கி கொள்ளும் பெண் அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.. இந்நிலையில், தமிழக அரசு துறையில் தாண்டவமாடும் லஞ்ச லாவண்யங்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி, அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாக லஞ்சம் வாங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. 2023-24ல் 155 பேர் லஞ்சம் வாங்கியிருந்த நிலையில், அந்த வழக்குகளை போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

Tahsildar VAO revenue department

அரசு ஊழியர்கள், அதிகாரிகள்

2023-24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீதுதான் அதிகபட்சமாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

அதாவது, வருவாய்த்துறைக்கு அடுத்ததாக, மின்சார வாரியம் மீது 26 வழக்குகள், ஊரக வளர்ச்சித்துறை - 22, உள்ளாட்சி அமைப்புகள் - 21 வழக்குகள், சர்வே - 18, போலீஸ் - 10, பத்திரப்பதிவு - 8, சமூகநலத்துறை - 4 வணிகவரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை - 2, தொழிலாளர் நலத்துறை - 3 வழக்குகள் பதிவாகி, இவை தொடர்பான விசாரணையும் நடப்பதாக சில மாதங்களுக்கு முன்பு புள்ளிவிவரங்கள் வெளியாகியிருந்தன.

உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளம், நெடுஞ்சாலை, மின்சார வாரியம், காவல்துறை, தீயணைப்பு என பல்வேறு துறைகளில் லஞ்ச புகார்கள் கிளம்பினாலும், . இவைகள் அனைத்திலுமே டாப்பில் உள்ளது உள்ளன.. வருவாய்த்துறை பதிவுத்துறைதான் என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வருவாய்த்துறை டாப்

எனினும்கூட, தினமும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டேயிருக்கிறார்கள்.. இந்நிலையில், தமிழகத்தில், கடந்த 2021 முதல் 2025 மார்ச் வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விவரப்படி, அரசுப்பணி செய்ய லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில், வருவாய் துறை, மின்வாரியம் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. .

அதில், "கடந்த 5 வருடங்களில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியலில் முதல் இடத்தில் வருவாய்த்துறை உள்ளது. சர்வே துறையில், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம், 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்துறை, பத்திரப்பதிவு

மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் முதல் போர்மேன் வரை, 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உள்ளாட்சிகளில் குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக, கிளார்க் முதல் கிராம பஞ்சாயத்து உதவியாளர் வரை, 32 பேர் கைதாகி உள்ளனர். 4வது இடத்தில் பத்திரப்பதிவு துறை உள்ளது.

நிலமதிப்பை குறைத்து பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக சார் - பதிவாளர், உதவியாளர் என, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், காவல் துறையில் 3 பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறையில் தலா 2 பேர் கைதாகி உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+