காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன்
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட திமுகவில் நடிகர் போஸ் வெங்கட் வாய்ப்பு கேட்டார். தற்போது அந்த தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் ராமசந்திரன் உள்ளார். அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கேட்பதாக கூறப்படும் நிலையில் தான் ''ஸ்டாலின் சொன்னால் அந்த இடத்தில் நாயை நிறுத்தினாலும், நரியை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக்க வேண்டும்'' என்று நடிகர் போஸ் வெங்கட் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நடிகர் போஸ் வெங்கட் திமுகவில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் வரும் சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் மற்றும் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு செய்திருந்தார்.

இதையடுத்து அவர் திமுகவின் நேர்க்காணலில் நேற்று பங்கேற்றார். அப்போது அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரினார். இந்த நேர்க்காணலை முடித்த பிறகு போஸ் வெங்கட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போஸ் வெங்கட் கூறியதாவது:
அறந்தாங்கி சட்டசபை தொகுதிக்கு குறி
''நான் விருகம்பாக்கம், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு இருந்தேன். அறந்தாங்கி நான் பிறந்த ஊர். அதனால் அறந்தாங்கி தொகுதியில் வாய்ப்பு கோரி நேர்க்காணலில் பங்கேற்றேன். கழக விதிப்படி எத்தனை தொகுதிக்கு வேண்டுமானாலும் பணம் கட்டி விருப்பமனு செய்யலாம். ஆனால் இண்டர்வியூவில் ஒரு தொகுதிக்காக தான் பங்கேற்க முடியும். அந்த வகையில் அறந்தாங்கி தொகுதியில் இண்டர்வியூ வந்தேன்.
அறந்தாங்கி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் (காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் எம்எல்ஏவாக)உள்ளது. காங்கிரஸ் வேண்டாம். திமுகவுக்கு கொடுங்கள் என்று கேட்டோம். காங்கிரஸ் கட்சி எங்களின் கூட்டணி கட்சி. அவர்கள் வேண்டாம் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. அங்கு உழைத்தவர்கள் இருக்கிறார்கள்.
திருநாவுக்கரசரின் குடும்பம்
அதிமுகவில் இருந்தபோது திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஒரேயொரு முறை மட்டும் திமுகவின் உதயம் சண்முகம் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதன்பிறகு திருநாவுக்கரசரசின் குடும்ப வாரிசாக அவரது மகன் ஒருமுறை தோல்வியடைந்தார். 2வது முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
50 ஆண்டுகளில் திமுகவில் ஒருவருக்கு எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். அவர் 25 வயதில் உழைக்க தொடங்கி இருப்பார். 75வது வயதில் இறந்து போயிருப்பார். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கும். இந்த தொகுதியில் திருநாவுக்கரசரின் குடும்பம் 6 தேர்தல்களில் களமிறங்கி உள்ளது. திமுக ஒரு தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளது. அதனை நான் எடுத்து கூறியுள்ளோம்.

ஸ்டாலின் சொன்ன பதில்
50 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே திமுக என்பதை எப்படி ஏற்க முடியும். எப்படி கட்சியை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்? என்பதை எடுத்து கூறினேன். அதனை முதல்வர் நோட் செய்து கொண்டார்.
அதேவேளையில் கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது. கூட்டணியை மதிக்க வேண்டும். ரொம்ப பிரஷர் செய்து கேட்டால் தொகுதியை கொடுத்து தானே ஆக வேண்டும் என்று கூறினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்றார்.
அதற்கு நாம் என்ன சொல்ல முடியும். அனைவரும் உழைத்து கடந்த முறை 30,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்களோ அதைபோல் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு நாம் என்ன சொல்வது? ஸ்டாலின் ஆசைப்பட்டால் நாம் செய்ய வேண்டும்.
நாயை கூட ஜெயிக்க வைக்கணும்
என்ன இப்படி நடந்து கொண்டே இருக்கு என்ற எண்ணம் இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் நின்றால் தோற்கடிக்க வேண்டிய எண்ணம் வரவே வராது. ஸ்டாலின் சொன்னால் அந்த இடத்தில் நாயை நிறுத்தினாலும், நரியை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும் என்று அவர் கூறினார்'' என்றார்.
போஸ் வெங்கட்டின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியை நாய் மற்றும் நரியுடன் ஒப்பிட்டு பேசியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..!












Click it and Unblock the Notifications