ஆதாரம் இருந்தும்.. எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்த வேலுமணி விரைவில் சிறை செல்வார்! அறப்போர் இயக்கம்
சென்னை: அறப்போர் இயக்கத்தின் மீது பொய் வழக்குகள் தொடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர் செய்த ஊழல்களுக்காக சிறைக்கு செல்லும் நாள் நெருங்கிக் கொண்டே வருகிறது என அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை, சென்னை, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காலை முதலே சோதனை நடைபெறுகிறது. கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரத்தில் உள்ள எஸ் பி வேலுமணியின் வீட்டிற்கு காலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சென்றனர்.

5 அதிகாரிகள்
டிஎஸ்பி மதியழகன் தலைமையில் 5 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு ஆண்டு வரை உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ் பி வேலுமணி. இவரும் இவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் செந்தில் அன்ட் கோ நிறுவனத்தின் 100 சதவீத பங்குதாரர்கள் ஆவார்கள்.

சொத்துகள் எவ்வளவு
இந்த கால கட்டத்தில் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் சேர்த்து 33.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்ததாகவே வேலுமணி கணக்கு காட்டியிருந்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 58.23 கோடி முறைகேடாக ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3,928 சதவீதம் அதிகம்
அதாவது வருமானத்தை விட 3,928 சதவீதம் அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் கருப்பு பணத்தை அவர் மாற்றியதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த மோசடிகள் குறித்து ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்தான் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளது.

எஸ் பி வேலுமணி சிறைக்கு செல்ல நாள்
5 ஆண்டில் 58.23 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு என்ற தலைப்பில் அறப்போர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி ஊழல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய காரணத்திற்காக அறப்போர் இயக்கம் மீது பல பொய் வழக்குகள் தொடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர் செய்த ஊழல்களுக்காக சிறைக்கு செல்லும் நாள் நெருங்கிக் கொண்டே வருகிறது என தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications