என்ன இவ்வளவு கோடியா.. சத்தமே இன்றி.. முதல்வரின் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய அரசன் சோப்.. நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அரசன் சோப் நிறுவனம் சார்பாக சத்தமே இன்றி நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. யாருமே எதிர்பார்க்காத தொகையை இந்த நிறுவனம் நிவாரணமாக அளித்துள்ளது.

அரசன் சோப் நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த சோப் நிறுவனம் ஆகும். கோவையில் செயல்படும் பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனம் மூலம் இந்த சோப் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கோவையை சேர்ந்த அருண் சிங் என்பவர் மூலம் இந்த பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு அரசன் சோப் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சிறந்த பிஸ்னஸ் மாடல்களில் ஒன்றாக அரசன் சோப் இப்போதும் உள்ளது.

சின்ன கம்பெனி

சின்ன கம்பெனி

சிறிய அளவில் தொடங்கப்பட்ட அரசன் சோப் தற்போது மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. அதோடு தமிழகம் முழுக்க விற்பனை செய்யப்படும் முன்னணி துணி துவைக்கும் சோப்களில் ஒன்றாக அரசன் சோப் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனம் நிதி வழங்கி உள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

நேற்று பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனம் சார்பாக தமிழக அரசுக்கு 1.5 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. சத்தமே இன்றி பண பரிவர்த்தனை மூலம் இந்த நிதி நேரடியாக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனத்தினர் யாரும் நேரில் சென்று கூட சந்திக்கவில்லை.

விளம்பரம்

விளம்பரம்

லட்சங்களில் உதவி செய்யும் நபர்கள் கூட முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து பணம் கொடுக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆனால் பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனம் சத்தமே இல்லாமல் அமைதியாக இவ்வளவு பெரிய தொகையை உதவியாக கொடுத்துள்ளது.

வாவ்

வாவ்

இந்த நிலையில் தற்போது அரசன் சோப்பை தயாரிக்கும் பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். தமிழக நிறுவனங்களை இதற்குத்தான் ஆதரிக்க வேண்டும். மக்களுக்கு ஒன்று என்றதும் இவர்கள்தான் உதவி செய்கிறார்கள். தமிழக நிறுவனங்கள், தொழில் முனைவோர்களை நாம்தான் ஊக்குவிக்க வேண்டும் என்று பலரும் அரசின் சோப் நிறுவனத்தை பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+