உளவுத்துறை ரிப்போர்ட்! 30 இடங்களில் "சிக்ஸர்".. ஆஹா.. ஏக குஷியில் ஸ்டாலின்! அதிர்ந்து பார்த்த அதிமுக
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பும் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளை முடிவு செய்துவிட்டதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி அந்த இடங்களில் தேர்தல் பணிகளையும் அக்கட்சி தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 28ம் தேதி திமுக சார்பாக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட அணி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். திமுக அணிகளின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கடந்த வாரம் இந்த ஆலோசனையை நடத்தினார் ஸ்டாலின். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் நமக்கு முதல் எதிரி.
அதிமுக இல்லை. ஜெயிப்பதற்காக பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எச்சரிக்கை செய்தார். பாஜகவை தோற்கடிக்க திமுக நிர்வாகிகள் தற்போதே தயாராக வேண்டும். அணிகளில் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதிக் கொண்டு இருக்காமல் களப்பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள். வாக்குச்சாவடி அளவில் நாம் பணிகளை செய்ய வேண்டும். பூத் கமிட்டிகள் மீது கவனம் செலுத்துங்கள், என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 30 இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்திருக்கிறது. இதற்காக பூத் கமிட்டியை வலுப்படுத்த ஆளும் திமுக தரப்பு தீவிரமாக முயன்று வருகிறதாம். திமுக சார்பாக சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட இதே உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டது. அதிமுகவை தவிர்த்து எந்த ஒரு கட்சிக்கும் பூத் கமிட்டி வலிமையாக இல்லை. அதிமுக ஒன்றுபட்டிருந்தால் மட்டுமே திமுகவை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களின் பூத் கமிட்டி வலிமையாக இருக்கும். ஆனால் அதிமுகவில் இப்போது பிளவு இருப்பதால் அவர்களின் பூத் கமிட்டியும் பலவீனமாகத்தான் இருக்கிறது. பூத் கமிட்டியில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு உள்ளது.

திமுக கூட்டணி
அந்த வகையில், திமுக கூட்டணி 39 இடத்திலும் வெற்றிப்பெறக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிமாக இருக்கிறது. அதனால், வெற்றிபெறக் கூடிய இடங்களையும் கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்து விடாமல், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை குறைத்து திமுக மட்டுமே 30 இடங்களில் போட்டியிடலாம் ; 30-லும் வெற்றிபெறும் என்று மாநில உளவுத்துறை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ரிப்போர்ட்டை தந்துள்ளது. அதனாலேயே, இந்த முறை 30 இடங்களுக்கு குறைவில்லாமல் போட்டியிடலாம் என முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். அதாவது 30 இடங்களில் போட்டியிடுங்கள்.. அப்படி போட்டியிட்டால் இதில் எல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெற்றிபெறலாம் என்ற ரிப்போர்ட் முதல்வருக்கு சென்றுள்ளதாம்.

லிஸ்ட்
அதோடு இந்த தொகுதிகள் என்னென்ன என்ற லிஸ்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்று இருக்கிறதாம். சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு மூத்த அமைச்சர்கள் சிலருடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஸ்டாலின் விவாதித்திருக்கிறார். அப்போது, உளவுத்துறையின் ரிப்போர்ட்டை எடுத்துச் சொல்லி, அந்த ரிப்போர்ட் படிதான் கள நிலவரம் இருக்கிறதா ? உங்களின் யோசனை என்ன ? 30 இடங்களில் நாம் நின்றுவிட்டு மற்ற இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கலாமா? என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். உளவுத்துறையின் ரிப்போர்ட்டை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே சீனியர் மந்திரிகளின் கருத்தும் இருந்துள்ளது. இதனால், திமுக போட்டியிடுவது 30 இடங்கள் என்பதில் தற்போதைய சூழலில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின் என்கிறது திமுக மேலிட தொடர்புகள்.

கேள்வி
உளவுத்துறையின் ரிப்போர்ட்டை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே சீனியர் மந்திரிகளின் கருத்தும் இருந்துள்ளது. அதாவது அந்த 30 இடங்களில் நாம் வலிமையாதான் இருக்கிறோம். சில இடங்களில் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் தேர்தல் வேலைகளை செய்தால் நாம் அங்கே வெற்றிபெற முடியும். மற்ற இடங்களை வேண்டுமென்றால் கூட்டணிக்கு கொடுக்கலாம் என்று பதில் அளித்து இருக்கிறார்களாம். இதனால், திமுக போட்டியிடுவது 30 இடங்கள் என்பதில் தற்போதைய சூழலில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின் என்கிறது திமுக மேலிட தொடர்புகள்.












Click it and Unblock the Notifications