"டேய்.. டேய்".. டிரைவரை அடிக்க பாய்ந்தாராம் எடப்பாடி.. காருக்குள்ளே பாத்தால் "அவர்".. சீனியர் புகார்
கார் டிரைவர் எடப்பாடி அடிக்க பாய்ந்ததாக புகழேந்தி பரபரப்பு பேட்டி தந்துள்ளார்
சென்னை: மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, 2 முக்கிய விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் புகழேந்தி, கொடநாடு, மற்றும் ஊழல் புகார்கள் குறித்தும் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 2 வருடங்களாகவே, கொடநாடு வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் புகழேந்தி..
அதிமுகவினர் மீது ஊழல் புகார்களில் ஆதாரம் இருக்கும்போது எதற்காக இதுவரை யாரையும் கைது செய்யாமல் வெளியில் விட்டுவைத்துள்ளீர்கள்? என்று திமுக அரசையும் விடாமல் கேட்டு வருகிறார்.
விரைவில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என்பதுதான் எல்லோருக்கும் இருக்கும் கேள்வி என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் மூத்த தலைவர் புகழேந்தி, நேற்றைய தினம், செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது, 2 விதமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம்தான் இது:

பீச் ரோட்டில்
"இன்னைக்கு இவ்வளவு பேசுகிறாரே எடப்பாடி பழனிசாமி, அன்னைக்கு எப்படி இருந்தார் தெரியுமா? ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு 2, 3 கார் டிரைவர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒரு டிரைவர், தலைமை செயலகத்துக்கு எடப்பாடியை காரில் அழைத்து சென்றார். வழக்கமாக எல்லா அமைச்சர்களுமே காலை நேரத்தில் பீச் ரோட்டில்தான் தலைமை செயலகம் செல்வார்கள்.. இல்லாவிட்டால் கிரீன்வேஸ் ரோட்டிலேயும் போவார்கள்.. அன்றைய தினம் பீச் ரோட்டில், தலைமை செயலகத்துக்கு எடப்பாடி சென்று கொண்டிருந்தார்.

டேய்.. டேய்
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை, எடப்பாடி பழனிசாமியின் டிரைவர் ஓவர்டேக் செய்துவிட்டார்.. அதற்கு பிறகுதான் காருக்குள் இருப்பது யார் என்று எடப்பாடி பழனிசாமி கவனித்தார்.. காரில் ஓபிஎஸ் உட்கார்ந்து கொண்டிருந்தார்.. உடனே பதறிப்போன எடப்பாடி பழனிசாமி, "டேய், டேய்" என்று கத்தி கூச்சலிட்டு, தன்னுடைய டிரைவரை அடிக்கவே பாய்ந்துவிட்டார்.. வண்டியை பின்னாடி எடு, பின்னாடி வா, அண்ணன் போகட்டும் என்று சொல்லி, வழிவிட்டவர் எடப்பாடி பழனிசாமியும்.. இப்படித்தான், அன்னைக்கு இருந்தார்..

திமிர் பேராசை
ஓபிஎஸ்ஸை ரோட்டில் பார்த்தால் பயம், கூப்பிட்டால் நடுக்கம்.. இப்போது பணம் வந்த திமிர்.. இப்படியெல்லாம் அவரை பேச வைக்குது.. பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசைப்பட்டு, எங்களுடன் தகராறு செய்து கட்சியை சிதைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.. அது கனவிலும் நடக்காது.. எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்திட்டத்தின்படி, தொண்டர்கள்தான் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்துள்ளனர்.. அந்தவகையில், ஓபிஎஸ் சரியான பாதையில் செல்கிறார்.. இந்த எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி.. மகுடம் சூட்ட முடியாது.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஓபிஎஸ்தான் மகுடம் சூட்ட போகிறார்...

ஸார் உள்ளே போடுங்க
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே.. ஆனால், நிச்சயமாக, அம்மா வகித்த பதவியை நாங்கள் வகிக்க மாட்டோம். ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்கள், யாருக்குமே தெரியாத ரகசியம் அது.. எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள, நான்கைந்து மாவட்ட செயலாளர்கள், எங்ககிட்ட வரப்போறாங்க.. அந்த தகவல் கன்பார்மும் ஆகியிடுச்சு.. எடப்பாடி தரப்பினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில், எங்களிடம் ஆதாரம் இருக்கு என்று அரசு வழக்கறிஞர் உறுதியாக சொல்கிறார்.. அப்பறம் ஏன் சும்மா இருக்க வேண்டும்? இந்த பழனிசாமியை கொஞ்ச நாள் உள்ளே போடுங்க சார்.. எல்லா உண்மையும் வெளியே வரும்.. மக்களுக்கும் உண்மை தெரியட்டும்.. அதிமுகவும் காப்பாற்றப்படும்.. விடியா அரசு என்று திமுகவை சொல்லி கொண்டிருக்கிறாரே, அதுவும் நிறுத்தப்பட்டுவிடும்" என்றார் புகழேந்தி.

ஒன்றரை கோடி
தொடர்ந்து பேசிய புகழேந்தி, "21ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பண்ருட்டியார் தலைமையில் நடைபெறும் என்று ஓபிஎஸ் அறிவித்ததுமே எடப்பாடிக்கு எவ்வளவு பயம்? எவ்வளவு பதட்டம்? இப்படி நாங்கள் அறிவித்தபோதுதான், எங்களிடம் நான்கைந்து மாவட்ட செயலாளர்கள் வருவதாக சொன்னார்கள்.. இங்கே எல்லாமே விதிப்படிதான் நடக்கும்.. இடைக்கால பொதுச்செயலாளர் என்று தேர்வு செய்த பிறகு, தொண்டர்கள் வாக்களித்து, மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.. ஒன்றரை கோடி தொண்டர்கள் வாக்கு செலுத்த வேண்டும்.. யார் யார் தேர்தலில் போட்டியிட போகிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும்.. பிறகு, ஓபிஎஸ்ஸுக்கு எதிராக போட்டியிட போவது யார் என்று தொண்டர்களுக்கு தெரிய வேண்டும்.. அதற்கு பிறகு தான் யார் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படும். அந்த வெற்றியாளர், நிச்சயம் ஓபிஎஸ்தான் என்பதை அடித்து சொல்கிறேன்" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications