"கைமாறுதா" கணக்கு? ஸ்டாலின்கிட்ட புட்டு புட்டு வெச்சிட்டாரே.. உளவுதுறைக்கு போன மெசேஜ்.. ஸ்மார்ட் மூவ்
சென்னை: பல்வேறு பரபரப்புகளில் திமுக சிக்கி இருந்தாலும், சில சாதகமான விஷயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.. இதுகுறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.
ஆளுநர் விவகாரத்தை தொடர்ந்து அடுத்தடுத்த புயல்கள் திமுகவில் வீசிக் கொண்டிருக்கிறது.. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.. இலாகா இல்லாத அமைச்சராகவும் உள்ளார்.
அதேபோல, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனைகள் மேற்கொண்டிருந்தனர்.. அத்துடன் அவர்கள் வீட்டில் இந்திய, வெளிநாட்டு பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பொன்முடி: அதனால், அமைச்சர் பொன்முடியையும், அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யையும் அமலாக்கத் துறையினர் விசாரித்து முடித்துள்ள நிலையில், அவர்களும் கைது செய்யப்படுவார்களோ? என்ற சந்தேகம் தமிழக அரசுக்கு எழுந்து வருகிறது.. இவர்களை தவிர, மேலும் சில அமைச்சர்களும் அமலாக்கத் துறையின் சோதனை வட்டத்தில் சிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறையின் பிடி இறுகி வருகிறது.
இப்படி திமுகவுக்குள் பரபரப்புகள் வட்டமடித்துவரும்நிலையில், சில அதிரடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் பொறுப்புகள் இனி அதிகமாகலாம் என்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை வேட்டி சட்டை யூனிபார்ம்களை கடந்து, கேஷூவலான அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி.. எளிமையான பேச்சு, அதேசமயம், எதிர்க்கட்சிகளை எரிச்சலூட்டும் பேட்டிகளை தந்து கலங்கடித்து வருகிறார்.
வாரிசு அரசியல்: அந்தவகையில், "வாரிசு அரசியல்" என்ற விமர்சனங்களை நொறுக்கிதள்ளிவிட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடன், மற்றும் அவரது அப்பாவின் செல்லப்பிராணித் துறையான சிறப்புத் திட்ட அமலாக்கம் போன்ற பல இலாகாக்களை தன்வசம் பெற்றுள்ளார்.. இதில் இளைஞர் அணியின் தலைவராக அவரின் செயல்பாடு கட்சிக்குள் "பாசிட்டிவ்" வைபரேஷனையே" தந்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், நடக்க போகும் மக்களவை தேர்தலில், இளைஞர் அணியில் இருந்து தீவிரமாக "உழைக்கக்கூடிய " பலர், வேட்பாளர் லிஸ்ட்டில் இடம்பெறலாம் என்கிறார்கள்.
தேர்தல்கள்: அதுமட்டுமல்ல, 2024 எம்பி தேர்தல் வரப்போகிறது. பிறகு, உடனே 2026-ல் சட்டமன்ற தேர்தலுக்கான மும்முரமும் ஆரம்பித்துவிடும். ஆனால், இந்த தேர்தல்களெல்லாம் உதயநிதியை மையப்படுத்திய நடக்க போவதாக சொல்கிறார்கள். மற்றொருபுறம், "உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்" என்ற கோரிக்கை குரலும் திமுக மேலிடம் வரை சென்றபடியேதான் உள்ளதாம்.
எனினும், உதயநிதிக்கு சில கூடுதல் பொறுப்புகள் தரப்போவதாக சில மாதங்களாகவே செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அதாவது, எப்போதுமே, தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக அதிகாரிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார்.. பிறகு தன்னுடைய செயலாளர்கள் மூலமும் ஒவ்வொரு துறையையும் கண்காணித்தும் வருகிறார்.
"முதல்வரின் செயலாளர்கள் முக்கிய அப்டேட்களை வழங்கும்போது உதயநிதியிடமும் கலந்து பேச சொல்வதாக கூறுகிறார்களாம். அதேபோல, குறிஞ்சி இல்லத்தில் அதிகாரிகளுடனான சந்திப்பையும் உதயநிதி அடிக்கடி நடத்துகிறாராம்.. முதல்வரை சந்திக்க யார் வந்தாலும், அவர்களும் உதயநிதியிடமும் கலந்து பேசுகிறார்களாம்.. அதேபோல முக்கிய ஆலோசனைகளில் உதயநிதியும் பங்கேற்கிறார்" என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் எத்தனையோ தகவல்கள் வலம்வந்தபடியே உள்ளன.
இப்போதும் ஒரு செய்தி பரபரத்து கொண்டிருக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நிர்வாக ரீதியான பணிகளில் தீவிரம் செலுத்தி வந்ததோடு, நிர்வாகத்தில் சில குளறுபடிகளையும் ஆய்வு செய்துள்ளாராம்.. அதில், உளவுத்துறையின் செயல்பாடு சரியில்லை என்று முதல்வர் ஸ்டாலினிடம் புட்டு புட்டு வைத்தாராம்.
உளவுத்துறை: அதைகேட்டதும் உதயநிதியின் வளர்ச்சியை பார்த்து முதல்வர் பிரமித்துபோனாராம்.. பிறகு, உளவுத்துறை பணிகளிலும் தனிகவனம் செலுத்தும்படியும் முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறாராம்.. அந்தவகையில், உளவுத்துறையும் உதயநிதி கண்காணிப்பில் வந்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதையடுத்து உளவுத்துறையே உஷாராகி உள்ளதாம்.. இனி பம்பரமாக சுற்றி சுழன்று வேலை பார்ப்பதுடன், குளறுபடிகள் எதுவும் உளவுத்துறையில் இருக்காது என்றும் நம்பப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications