"ஓவர் ஓவர்".. திமுக மீது டார்கெட்?.. டெல்லி வரை புகார்.. பின்னாடியே எடப்பாடியும்..!
அமைச்சர் மூர்த்தி மகன் திருமணத்தை பிரச்சனையாக கிளப்ப பாஜக யோசித்து வருகிறதாம்
சென்னை: பாஜக + எடப்பாடி பழனிசாமி இருவரும் திமுகவை ஒரே விஷயத்தில் குறிவைத்து வருவதால், ஆளும் தரப்புக்கு புது தலைவலி வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல நல்ல திட்டங்கள், புது புது அறிவிப்புகள், ஆச்சரியப்படக்கூடிய செயல்பாடுகள், போன்றவைகளை வைத்து மக்களிடம் நெருங்குவது ஒரு வகையான அரசியல்.
ஆனால், குற்றங்களை கூறியும், புகார்களை முன்வைத்தும், எந்நேரமும் டேமேஜ் செய்தே அரசியல் செய்வது இன்னொரு வகை.. இந்தவகையான அரசியலைதான் பாஜக செய்து வருகிறது. இதற்கு போதுமான பலன்களும் அக்கட்சிக்கு கிடைத்தும் வருகின்றன.

டெக்னிக்
அந்தவகையில், தமிழகத்திலும் இதே டெக்னிக்கை கையில் எடுத்தது.. திமுகவையும் டேமேஜ் செய்துகொண்டிருக்கிறது.. வழக்கமாக அதிமுக செய்யும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை, தமிழக பாஜக அதிகப்படுத்தி கொண்டிருக்கிறது.. மேலும் ஊழல் செய்யும் அமைச்சர்கள், ஊழல் துறைகளை, செய்தியாளர்களிடம் லிஸ்ட் போட்டும் வெளிப்படுத்தி வருகிறது.. இப்போது மற்றொரு துருப்புச்சீட்டு பாஜகவுக்கு கிடைத்துள்ளது.. அதுதான், அமைச்சர் மூர்த்தியின் வீட்டு திருமண விழா.

மொய்கள்
பிரமாண்ட செட்கள் முதல் அசைவ விருந்து வரை சோஷியல் மீடியாவில் பேசப்பட்டது. மொய் வசூல் செய்யவே, தனியார் நிறுவனத்திடம் ஹைடெக் கவுண்டர்கள் ஒதுக்கப்பட்டு, தகுதி அடிப்படையில் மொய்யும் நிர்ணயம் செய்திருப்பதாக தெரிகிறது.. இந்த திருமணத்திற்கு ரூ. 100 கோடிக்கு மேல் செலவானதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.. ஆனால், அமைச்சரோ இந்த குற்றச்சாட்டை மறுக்கிறார்.. என் மகன் திருமணத்தின்போது பொதுமக்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டதா? கல்யாணத்துக்கு அந்த அளவுக்கெல்லாம் செலவாகவில்லை.. எல்லாம் வதந்தி என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.. எனினும், பாஜக இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.

தோண்ட.. தோண்ட..
கடந்த 2021ம் சட்டசபை தேர்தலின்போது, தன்னுடைய தேர்தல் கணக்கை மூர்த்தி காட்டியிருந்தாராம்.. அதில், குறிப்பிட்ட அளவுக்கு சொத்து மதிப்பையும் குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆதாரத்தை தோண்டி எடுத்துள்ளதாம் பாஜக தரப்பு.. ஒரே வருஷத்தில் அதுவும் முதல்முறை அமைச்சராக இருக்கும் மூர்த்திக்கு, இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்ற கேள்வியை எழுப்ப போகிறதாம்.. அதேபோல, இந்த திருமண ஏற்பாடுகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே நடந்து வந்துள்ளதாக சொல்கிறார்கள்..

மொய் கவுண்ட்டர்கள்
அன்றைய தினம் முதல், திருமணத்தில் மொய் கவுண்ட்டர்கள் வரை எல்லாவற்றையும் ஆதாரத்துடன் சேகரிக்க ஒரு டீமையும் பாஜக இறக்கி விடப்பட்டுள்ளதாம்.. இவை அத்தனையையும் டெல்லி மேலிடம்வரை அனுப்பியும் வைக்க போகிறார்களாம். இதுபோலவே, எடப்பாடிபழனிசாமி தரப்பும், இதே விவகாரத்தை திமுக பக்கம் திருப்பிவிட்டு, தர்மசங்கடத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறதாம்.. சமீபகாலமாகவே, தன்னுடைய ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டுகள், கைதுகள் நடந்து வரும் நிலையில், இந்த ஆடம்பர திருமண விஷயத்தை, லேசில் விட்டுவிடக்கூடாது என்று எடப்பாடி டீம் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளதாம்..

டரியல் பிளான்
இது தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதிலும் மும்முரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இப்படி ஒரு விஷயத்தை பாஜக கிளற போகிறது என்ற தகவல் கசிந்துவிட்டதால்தான், முந்திக்கொண்டு, விஜயபாஸ்கர் & வேலுமணி வீடுகளில் ரெய்டு கட்டவிழ்த்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. எனினும், ஆடம்பர திருமணத்தை நடத்திய மூர்த்திக்கு இது ஒரு எதிர்பாராத தலைவலியாக உருவெடுத்துள்ளது.. இவ்வளவு ஆடம்பரங்களை செய்து திருமணத்தை நடத்த காரணமே, தெற்கில் உள்ள தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்குதானாம்..

ஸ்கெட்ச்
அதாவது மதுரை என்றாலே மூர்த்தி என்ற பெயர் திமுக மேலிடத்திற்கு தெரியவேண்டும், தென்மண்டலம் முழுக்க அவை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள் மதுரைவாசிகள்.. ஆனால், எடப்பாடி ஒருபக்கம், பாஜக மறுபக்கம் என ஸ்கெட்ச் போடும் அளவுக்கு வந்துவிட்டோமே என்று நொந்து போய் உள்ளாராம்.. அதேசமயம், தங்கள் தரப்பில் அனைத்துக்கும் சரியான கணக்கையே வைத்துள்ளோம்.. யார் என்மீது களங்கம் சுமத்தினாலும், முறையான கணக்கு தங்களிடம் உள்ளது, முறைகேடு இதில் எதுவுமில்லை.. எதற்கும் அஞ்சமாட்டேன் என்று கெத்தாக சொல்கிறாராம் மூர்த்தி.. என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்...
-
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா? -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி











Click it and Unblock the Notifications