பச்சை கொடி காட்டியாச்சா? அதிமுக மாஜி அமைச்சர்களை அடுத்தடுத்து குறிவைத்த "டெல்லி"! சிக்கலில் 3 தலைகள்
சென்னை: கடந்த 2 வாரத்தில் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து டெல்லி மூலம் குறி வைக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனை நாட்களாக கும்ப கர்ணன் போல தூங்கிக்கொண்டு இருந்த குட்கா வழக்கை "லவுட் மியூசிக்" போட்டு தட்டி எழுப்பி உள்ளது சிபிஐ. இதில் ஏற்கனவே 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டது.
தற்போது மீண்டும் இதில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

குட்கா வழக்கு
12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதில் ஏற்கனவே வருமான வரித்துறை சார்பாக ரெய்டு நடத்தப்பட்டுவிட்டது. இந்த ரெய்டு அடிப்படையில்தான் தற்போது சிபிஐ சார்பாக வழக்கு பதிவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விஜயபாஸ்கர்
முன்னாள் டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீதும் வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு காரணமாக மீண்டும் விஜயபாஸ்கர் சிபிஐ விசாரணை வளையத்திற்கு வந்துள்ளார். விரைவில் இவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்யப்பட்டதற்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அப்போதைய காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக 2017ல் புகார் எழுந்தது.

இரண்டு பேர்
இதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடக்கிறது. ஆனால் டெல்லியின் விசாரணை வளையத்தில் இந்த ஒரு மாஜி அமைச்சர் மட்டும் இல்லை. மேலும் 2 பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எஸ்பி வேலுமணி. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர் மற்றும் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்தனர். 2 நாட்களாக இவரின் வீட்டில் சோதனை செய்தனர்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் மற்றும் நண்பர்தான் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார். பல முக்கியமான ஆவணங்கள் இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் வழக்கு பதியப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் வருமான வரித்துறை வேலுமணி நண்பரை குறி வைத்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

செய்யாதுரை
இது போக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சார்பாக சோதனை செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தி - செய்யாதுரை இருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. செய்யாதுரையின் ஆடிட்டர்தான் காமராஜ் நடத்தும் நிறுவனத்திற்கும் ஆடிட்டர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி குறி
இரண்டு பேருக்கும் ஒரே ஆடிட்டர். அவர் மயிலாப்பூரை சேர்ந்தவர். இதன் காரணமாக மாஜி அமைச்சர் காமராஜும் வருமானவரித்துறை மூலம் சோதனை செய்யப்பட்டார். இப்படி அடுத்தடுத்து வேலுமணி ஆதரவாளர், எடப்பாடிக்கு நெருக்கமானவர், காமராஜ், விஜயபாஸ்கர் என்று அதிமுக மாஜி அமைச்சர்கள் டெல்லி மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது? ரெய்டுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தது யார்? அதிமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறதா என்று பல கேள்விகளை இந்த தொடர் சம்பவங்கள் எழுப்பி உள்ளன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications