Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சதுரங்க வேட்டை".. பேப்பருடன் எடப்பாடி.. அதிரடி ஸ்டாலின்.. மாஸ் சீமான்.. விஜயகாந்த் வேற.. ஒரே "புயல்"

ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 முனைப்போட்டிகள் களத்தில் குதித்துள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி முழு வீச்சில் தயாராகி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வர உள்ளநிலையில், எடப்பாடி பழனிசாமியும் கையில் ஒரு பெரிய லிஸ்ட்டுடன் வரப்போகிறாராம்.

தமிழகத்தின் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது ஈரோடு கிழக்கு தொகுதி.. திராவிட இயக்கத்தின் பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாகும்..

ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், தொகுதி சீரமைப்பின்போது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என கடந்த 2008-ல் பிரிக்கப்பட்டது.. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது.

 ஸ்பெஷல்

ஸ்பெஷல்

அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த தொகுதியில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார்..ஒருங்கிணைந்த ஈரோடாக இருந்தபோது, அதிமுக, திமுக இரு கட்சிகளுமே இங்கு சம அளவில்தான் தேர்தல்களில் வெற்றி பெற்றுவந்தன.. ஆனால், தொகுதி சீரமைப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இப்போது இந்த தொகுதிக்கு முதல்முறையாக இடைத்தேர்தல் நடப்பதால், தொகுதிக்குள் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும்.

 4 முனைப்போட்டி

4 முனைப்போட்டி

அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்து, சந்திக்கக்கூடிய முதல் இடைத்தேர்தல் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. "இடைக்கால பொதுச்செயலாளராக" உருவெடுத்து, நீதிமன்றம் வரை போராடி, இரட்டை இலையையும் பெற்றுக் கொண்டு, கூட்டணிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் களமிறங்குவதால், எடப்பாடி பழனிசாமிக்கு இது மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.. எப்படியும் 5 முனைப்போட்டி அல்லது 6 முனைப்போட்டி உருவாகலாம் என்று கணித்து வந்த நேரத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

 அனல் தொகுதி

அனல் தொகுதி

தொகுதிக்குள் பிரச்சாரம் அனலடிக்க துவங்கி உள்ளது.. பிரதான கட்சிகளுடன், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் தொகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.. 27ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே மறுபடியும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அக்கட்சி நிறுத்தி இருக்கிறது.திமுக கூட்டணி கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது...

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

அதிமுக சார்பாக யார் போட்டியிடுவது என்ற பெரிய குழப்பம் இத்தனை நாளும் நிலவி வந்தது.. ஓபிஎஸ் ஒருபக்கம் தினமும் கூடி, ஆலோசனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.. இலை முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவும், பாஜக கேட்டுக் கொண்டதாலும், தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார்... எனவே, எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகியுள்ளார்.. இரட்டை இலை சின்னத்துடன் மகிழ்ச்சியுடன் களமிறங்கி உள்ளார் தென்னரசு.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இதனிடையே, அமமுகவும் தேர்தல் களத்தில் குதித்தது.. ஈரோடு கிழக்கில் நானே போட்டியிடலாம் என்று நினைக்கிறேன் என்று டிடிவி தினகரன் வெளிப்படையாகவே சொன்னார்.. பிறகு வேட்பாளரையும் அறிவித்தார்.. ஆனால், தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று சொல்லி, நேற்றைய தினம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக தினகரன் அறிவித்தார்... ஆனால், இதற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. பாஜகவும், ஓபிஎஸ்ஸும் அதிமுகவை ஆதரித்துள்ள நிலையில், தினகரனின் இந்த முடிவு பொருத்தி பார்க்கப்பட்டு வருகிறது..

 ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

பாஜகவை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக, ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. மாநில தலைவர் டெல்லிக்கும் சென்றுவிட்டு வந்தார்.. அங்கிருந்தும் சில தலைவர்கள் சென்னை வந்து போனார்கள்.. அப்போதும் குழப்பத்துக்கு விடைகிடைக்காத நிலையே நிலவியது.. அதிமுகவை ஒன்றிணைத்து இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்ற பாஜகவின் முயற்சி தோல்வியிலும் முடிந்தது.. பாஜகவின் முடிவை நோக்கியே சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என 3 பேருமே காத்து கிடந்தனர்.. இவர்களை தவிர, புதிய தமிழகம் ஏசி சண்முகம், ஜான்பாண்டியன் போன்றோரும், பாஜக முடிவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர்..

 இலக்கணம்

இலக்கணம்

இதில் தினகரன், ஓபிஎஸ் போன்றோர் கடும் அதிருப்திக்குள்ளானார்.. இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜ தரப்பும் சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அவர்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.. இதன் காரணமாகவே, தினகரன் தன்னுடைய கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. அதேபோல, இந்த இடைத் தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்து விட்டது.. இந்த முறை மட்டுமல்ல, எந்த முறையுமே இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி இன்று அறிவித்துள்ளார்..

 தேமுதிக + நாம் தமிழர்

தேமுதிக + நாம் தமிழர்

மநீம காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தந்தள்ளது.. தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்தநாளே தேமுதிக தனித்து போட்டியிடுவதாக சொல்லி, தன்னுடைய வேட்பாளரையும் அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி, அசத்திவிட்டது.. ஆக, முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர்... தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.திமுக கூட்டணி + அதிமுக கூட்டணி + தேமுதிக + நாம் தமிழர் + என தற்போது 4 முனை போட்டியாக மாறி உள்ளது.

உதயசூரியன்

உதயசூரியன்

வழக்கமாக தேர்தல் என்றாலே உதயசூரியன் + இரட்டை இலை சின்னம்தான் பிரதானமாக நேருக்கு நேர் மோதும்.. ஆனால் இந்த முறை இரட்டை இலையும் , கை சின்னமும் மோதுவதால், புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இதில், ஆச்சரியம் என்னவென்றால், கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கும் முன்பேயே, திமுக சார்பில் கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கினர்.. அதிமுகவும் 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களை நியமித்து, ஜரூராக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.. நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலிலும் தனக்கான முத்திரையை பதிக்கவே செய்யும்.. அதுவும் இந்த முறை காங்கிரசுடன் நேரடியாக மோதுவதால், சாதகமான களம் சீமானுக்கு அமைந்துள்ளது..

மையப்புயல்

மையப்புயல்

ஈரோடு கிழக்கு தொகுதியே கலகலவென படுபிஸியாக காணப்படுகிறது.. 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரத்துக்கு வரப்போகிறாராம்.. 19 இடங்களில் பிரச்சாரமும் செய்ய போகிறாராம்.. அமைச்சர் உதயநிதியும் பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் பிரச்சாரம் செய்ய வருகிறார்.. அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார திட்டங்களை வகுத்து வருகின்றனர்... திமுகவை விமர்சித்து பிரச்சாரம் செய்ய, ஒரு பெரிய லிஸ்ட்டோடு வரப்போறாராம் எடப்பாடி பழனிசாமி. ஆக மொத்தம், தமிழ்நாடு அரசியல் களமே ஈரோடு கிழக்கு தொகுதியை மையப்படுத்தியே சுழன்று சுழன்று கனன்று கொண்டிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+