"ஆல் இஸ் நாட் வெல்".. அண்ணாமலை மட்டும் வாழ்த்து சொல்லாத எடப்பாடி.. பற்றிய தீ.. சுக்கு நூறாகிடுச்சே!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்லாத விஷயம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
அதிமுக - அண்ணாமலை இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும்.

எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.
கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர். அண்ணாமலையை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.
அமித் ஷா சமாதானம்: இந்த மோதலை தணிக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் மீட்டிங் நடந்தது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் இந்த மீட்டிங் நடந்தது.

அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்தார். நாங்கள் மோதிக்கொள்ளவில்லை.. எங்களுக்கு இடையிலான கூட்டணி தொடரும் என்றும் அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.
மோதல்? : ஆனால் அண்ணாமலை - எடப்பாடி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. கடந்த 2ம் தேதி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து சொல்லி இருந்தார்.
அதற்கு மறுநாளுக்கு மறுநாள் 4ம் தேதி அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடினார். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்லவில்லை. அவர் வாழ்த்து சொல்லாததால் அதிமுக தலைவர்களும் யாரும் வாழ்த்து சொல்லவில்லை.
இதனால் எங்கே அதிமுக - அண்ணாமலை இடையே மீண்டும் பிளவு ஏற்பட்டு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி ஏன் அண்ணாமலைக்கு சின்ன வாழ்த்து கூட சொல்லவில்லை என்பது புதிராக உள்ளது. இதனால் அதிமுக - பாஜக இடையே ஆல் ஐஸ் நாட் வெல் என்ற நிலவரம் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications