Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டோட்டலா சேஞ்ச்".. எடப்பாடியே எதிர்பார்க்கல.. துளைத்தெடுத்த கோர்ட்.. ஓபிஎஸ் சைலண்ட் மூவ்.. அடுத்தது?

எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறதா நீதிமன்ற கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைகோர்ட் கடந்த 2 நாட்களாகவே எழுப்பி வரும் கேள்விகள், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது..!
என்னதான் எடப்பாடி பழனிசாமிக்கு மெஜாரிட்டி ஆதரவுகள் கட்சிக்குள் இருந்தாலும், ஓபிஎஸ் அமைதியாக ஒதுங்கி செல்ல போவதில்லை என்பதால், அவர் மூலம் எந்த விதத்தில் குடைச்சல் வர போகிறது என்ற கலக்கம் எடப்பாடிக்கு இல்லாமல் இல்லை.

Recommended Video

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

    முக்கியமாக, தேர்தல் ஆணையத்தையும், கோர்ட்டையும் ஓபிஎஸ் அளவுக்கு அதிகமாகவே நம்பி இருக்கிறார்.. அதிலும், இலையை முடக்கக்கூடிய வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்..

     இடியாப்ப சிக்கல்

    இடியாப்ப சிக்கல்

    அதேபோல், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான உத்தரவுகளை நீதிமன்றம் இனிமேல் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சில நாட்களாகவே தகவல்கள் வட்டமடிக்கின்றன. அன்றய தினம் இது தொடர்பான வழக்கு நடக்கும்போது, "பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது, பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியும் காலாவதியாகவில்லை என்று எடப்பாடி தரப்பு வாதிட்டது..

    டிஸ்மிஸ்

    டிஸ்மிஸ்

    இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓபிஎஸ் ஹைகோர்ட்டை நாடியும், எடப்பாடிக்கு ஆதரவாகவே உத்தரவு வந்தது. பொதுக்குழுவும் நடத்தப்பட்டது. அதேபோல, கட்சி ஆபீசுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் எடப்பாடிக்கு ஆதரவாகவே கோர்ட் உத்தரவு வந்ததையும் மறுக்க முடியாது. எனினும், பொதுச் செயலாளர் தீர்மானம் கொண்டுவருவதற்கு ஓபிஎஸ் தடை வாங்கினார்.. அதனையடுத்து, ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன...

     ஓபிஎஸ் டீம்

    ஓபிஎஸ் டீம்

    எடப்பாடிக்கான முதல் சிக்கல் இங்குதான் எழுந்தது.. இதையடுத்து, எடப்பாடியின் தற்காலிக பொதுச்செயலாளர் போஸ்டிங் "சட்ட அங்கீகாரம்" வடிவில் நிறைய சந்தேகங்களை ஏற்படுத்த துவங்கிவிட்டது.. இதற்கு பிறகுதான், ஓபிஎஸ் அடுத்த பிரச்சனையை கையில் எடுத்தார். பொதுக்குழு கூட்டம் முறைப்படிதான், நடத்தப்பட்டதா? பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அதிமுகவினர்தானா? பொதுச்செயலாளர் பதவிக்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தது ஓபிஎஸ் டீம்.. பொதுக்குழுவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டையும் நாடினார்..

     கிடுக்கிப்பிடி

    கிடுக்கிப்பிடி

    பிறகு உயர்நீதிமன்றமே தற்போது விசாரித்துகொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக, நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் - எடப்பாடி இரு தரப்பிலுமே தங்கள் தரப்பின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன... என்றாலும், நீதிபதி எழுப்பிய கேள்விகள், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.. "பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்றுக்கொள்வதாக சொல்லித்தானே பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது... நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்று கூறிய நிலையில், அந்த பதவியைக் கலைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

     தமிழ் மகன் உசேன்

    தமிழ் மகன் உசேன்

    ஆனால், மறுபடியும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது ஏன்? இதை விளக்க வேண்டும்.. அதேபோல பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என்றும் விளக்க வேண்டும்.. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் 2 பதவிகள் தேர்தல் செல்லாது என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா? நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் கட்சி விதிப்படி நியமிக்கப்பட்டாரா? என்ற பல கேள்விகள் நேற்றைய தினம் எழுப்பப்பட்டன.

     சுபம்?

    சுபம்?

    அதேபோல, இன்றைய தினமும் இந்த வழக்கு விசாரணை நடந்தது.. அப்போது, மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம், "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 வருடங்கள் இருக்கிறதே? அதற்கு முன்னாடி எப்படி பதவிகாலம் முடிவடையும்? இந்த பதவி நீக்கப்பட்டது எப்படி? என்றும் கேள்விகளை எழுப்பினார்.. இதற்கெல்லாம் முறையாக பதில்கள் எடப்பாடி தரப்பில் அளிக்கப்பட்டாலும், இத்தனை கிடுக்கிப்பிடி கேள்விகளை எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கவில்லை.

     ரத்தத்தின் ரத்தங்கள்

    ரத்தத்தின் ரத்தங்கள்

    நேற்றைய தினமே, "கட்சிப் பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் பின்பற்றப்படவில்லையென்றால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தது, எடப்பாடிக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை எந்த திசையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது... அப்படியே எடப்பாடிக்கு எதிராக உயர்நீதிமன்ற உத்தரவுகள் வந்தாலும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே சொல்கிறார்கள்.. ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு எதிராக உத்தரவுகள் வந்தாலும், அவரும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.. ஆக மொத்தம், அதிமுகவின் பொதுக்குழு சஸ்பென்ஸ் என்னவென்று தெரியாமல் ரத்தத்தின் ரத்தங்கள் விழிபிதுங்கி உள்ளனர்..!

    ஆபீஸ் சாவி

    ஆபீஸ் சாவி

    முன்னதாக, அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில், ஓபிஎஸ் நடத்தையை கவனிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் குறுக்கிட்டு, வழக்குக்கு சம்பந்தமில்லாத அந்த விவகாரம் குறித்து வாதிட வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அறிவுறுத்தியதால், அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த வாதங்களை எடுத்துவைக்க முடியாமல் போய்விட்டது. இதையும் எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க கோரி, கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தீர்ப்பை பெரிதும் நம்பி உள்ளதாம் எடப்பாடி டீம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+