• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விஐபி" யார் .. எடப்பாடிக்கு "டெல்லி" மீது வந்த பாசம்.. "கட்டிப்பிடித்த" விவகாரம்.. அப்போ திமுக?

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி வரை பாசம் நீண்டுள்ளது.. இதற்கு பின்னணியில் உள்ளவர் யார்? என்ன நடக்கிறது அதிமுக கூட்டணியில் என்ற தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

எத்தனையோ விதமான நெளிவு சுளிவுகளை தாண்டிதான், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்று வருகிறது.

அதேசமயம், பாஜகவை சீண்டுவதன் பேரில், மிகப்பெரிய தர்மசங்கடம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. இந்தி மொழியானது சூத்திரர்களுக்கு மட்டுமே என்று திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் அன்று பேசியது சர்ச்சையை கிளப்பியது.

பிளான் பி.. பொதுக்குழு திட்டத்தில் அதிரடி மாற்றம்? ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?- எடப்பாடி டீம் பரபர! பிளான் பி.. பொதுக்குழு திட்டத்தில் அதிரடி மாற்றம்? ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?- எடப்பாடி டீம் பரபர!

 ஹிந்தி - மாநிலங்கள்

ஹிந்தி - மாநிலங்கள்

"இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களில் தாய்மொழியாக மட்டுமே உள்ளது.. மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் வளர்ந்த மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தி தாய்மொழியாக இல்லை... வளராத மாநிலங்கள் என்றால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். இங்குதான் இந்தி மொழி என்பது தாய்மொழியாக உள்ளது" என்று பேசியிருந்தார்.

 திணறல் - திருப்பம்

திணறல் - திருப்பம்

இது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே வடமாநிலங்களில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் சிக்கலை தந்துவிட்டதாக தெரிகிறது.. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கெல்லாம் வடமாநில காங்கிரஸ்தான் பதில்களை சொல்ல வேண்டி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. போதாக்குறைக்கு பாஜக, இந்த பிரச்னையை காங்கிரஸ் பக்கம் திருப்பி விடும் வேலையை பார்த்துவிடுவதால், காங்கிரஸ் மேலும் திணறலுக்கு ஆளாகி உள்ளது.

 ஒரே போட்டோ

ஒரே போட்டோ

ஏற்கனவே, பேரறிவாளனை கட்டிப்பிடித்த விவகாரத்தினால் தமிழக காங்கிரஸ் நொந்து போயுள்ள நிலையில், வடமாநில ஆட்சியை ஒவ்வொன்றாக இழந்து வரும் காங்கிரஸ், தற்போதைய திமுகவின் இந்தி எதிர்ப்பு பேச்சால் விழிபிதுங்கி போயுள்ளதாம்.. பேரறிவாளன் விவகாரம் ராகுலுக்கே கடுப்பை தந்துவிட்டதாக தெரிகிறது.. அதேசமயம், தமிழகத்தில் வரும் எம்பி தேர்தலில் போட்டியிடவும் ராகுல் ஆர்வம் காட்டி வருகிறார்.. எனினும், பல்வேறு அதிருப்தி காரணங்களால், திமுக தங்களை கழற்றிவிட்டால், மாற்று என்ன செய்வது என்ற யோசனையும் ராகுலுக்கு எழாமல் இல்லை.

 விஐபி அட்வைஸ்

விஐபி அட்வைஸ்

அதனாலேயே அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக சில தினங்களாகவே செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. மேலும் எடப்பாடியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.. காங்கிரஸை பொறுத்தவரை, அதிமுகவுடனும் கூட்டணி வைத்த கட்சிதான்.. பலமுறை கூட்டணி வைத்து தேர்தலையும் சந்தித்துள்ளது.. வெற்றியும் பெற்றுள்ளது.. அதனால், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தவிர்க்க முடியாத கட்சி என்பதால், கைக்குள் போட்டுக் கொள்ளுமாறு, ராகுலுக்கு அந்த நெருக்கமான "விஐபி" அட்வைஸ் தந்துள்ளாராம்.

 ஓபிஎஸ் - சீட் எண்ணிக்கை

ஓபிஎஸ் - சீட் எண்ணிக்கை

இந்த பக்கம் அதிமுகவை எடுத்துக் கொண்டால், பூசல்கள் நிறைந்து வழிகிறது.. எப்படியும், ஓபிஎஸ்ஸுக்கே மேலிட சப்போர்ட் கிடைக்கும் என்று எடப்பாடியும் உறுதியாக நம்புகிறார்.. மேலும், பாஜகவுடனும் கூட்டணி வைக்க விருப்பம் இல்லாமல் உள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை சட்டசபை தேர்தலின்போதே, பாஜகவுக்கு எடுத்த எடுப்பில் எல்லாம் சீட் தரவில்லை.. கூட்டணி பேச்சுவார்த்தையும் இழுபறியாகத்தான் நடந்தது.. பாஜக கேட்ட சீட் எண்ணிக்கையையும் எடப்பாடி தரவில்லை.. உள்ளாட்சி தேர்தலின்போது அந்த கட்சியை கழட்டியே விட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

 நொறுங்கிய கனவு

நொறுங்கிய கனவு

பாஜகவே இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதிமுக என்ன சொன்னாலும் கேட்கும் என்ற நினைப்பு நொறுங்கியே போனது.. வரும் எம்பி தேர்தலில் மீண்டும் அதிமுக தோளிலேயே சவாரி செய்து, கூட்டணியை சந்திக்கும் சூழல் இருந்தாலும், தனித்து களமிறங்கவும் பாஜக இப்போதே முனைப்பு காட்டி வருவதை மறுக்க முடியாது.. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, இன்னொரு முறை பாஜகவுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட நேரிடும் என்பதை உணர்ந்துள்ளார்.. கடந்த எம்பி தேர்தலின்போதும், இப்படித்தான் நடந்தது.

Recommended Video

  ADMK-வின் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் - OPS *Politics
  விஐபி

  விஐபி

  அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், திமுக அபார வெற்றி பெற்றது என்று வெளிப்படையாகவே சில அதிமுக சீனியர்கள் பேசினார்கள்.. அதே தவறை இந்த முறை செய்யக்கூடாது என்பதில் எடப்பாடி முடிவாக இருப்பதாக தெரிகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் மிரட்டலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்றும் நினைக்கிறார்.. அதனாலேயே காங்கிரசுடன் கூட்டணி வைக்க, எடப்பாடி கணக்கு போடுவதாக தெரிகிறது. ஆக மொத்தம், ராகுலுக்கும் - எடப்பாடிக்கும் நெருக்கமான அந்த விஐபிதான் முக்கிய அட்வைஸ்களை தந்து வருகிறார் என்கிறார்கள்

  English summary
  Are Congress leaders ready to ally with AIADMK and What will happen to the DMK alliance எடப்பாடி பழனிசாமி ராகுல் காந்தியுடம் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X