Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் 14 முஸ்லீம் எம்எல்ஏக்கள்! ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கிறதா கூட்டணிகள்! ஜவாஹிருல்லா பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள், கூடுதல் தொகுதிகளை கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விளக்கம் அளித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் 18-வது ஆண்டு விழா, அதன் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. மண்ணடியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இவ்விழாவில், ஜவாஹிருல்லா கட்சி கொடியை ஏற்றிவைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன.

dmk jawahirullah mk stalin

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, கடந்த 18 ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்காக மனிதநேய மக்கள் கட்சி அயராது பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். மாநிலம் பல பேரிடர்களைச் சந்தித்த காலங்களில், களத்தில் இறங்கி மீட்புப் பணிகளிலும், நலத்திட்ட உதவிகளிலும் கட்சி முன்நின்றுள்ளது. இப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

பெரிய கட்சிகளுக்கு இணையாக அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு கோரி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது குறித்து ஜவாஹிருல்லா விளக்கினார். பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்திலும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களில், மக்கள் தொகை விகிதாச்சாரப்படி குறைந்தது 14 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது, கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்கள் அயராது உழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வரும் தேர்தலில் திமுக, மனிதநேய மக்கள் கட்சிக்கு முக்கியத்துவம் அளித்து ஐந்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளில் உள்ள சிறுபான்மை சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இதுவரை நடந்த தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கட்சி தனது முடிவை அறிவிக்கும். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெற்று போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார்.

கூட்டணிக்குள்ளேயே எந்த நெருக்கடியும் இல்லை என்று ஜவாஹிருல்லா தெளிவுபடுத்தினார். தேர்தல் நேரத்தில் இது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுவது வழக்கமானதே. பாஜகவின் அழுத்தங்களையே திறம்பட எதிர்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதையும் சுமூகமாகத் தீர்த்து ஒரு வெற்றிக் கூட்டணியை அமைப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்திற்காக எந்த தியாகமும் செய்யாமல், திரைப்பட நடிப்பை மட்டுமே தொழிலாகக் கொண்டு ஒருவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஜவாஹிருல்லா மறைமுகமாக சாடினார். இவர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஒருபோதும் போராடியதில்லை. வெற்றுத் தத்துவங்களை மட்டுமே பேசி, ஊழலை ஒழிப்பேன் என்கிறார். ஆனால், அவருக்கு வரி பாக்கிக்காக விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டைத் தலைநிமிரச் செய்ய மாட்டார்கள் என்று அவர் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், பிரதமர் மோடி ஓடி ஒளிவது மிகவும் கேவலமான செயல் என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார். அவர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதாகவும், பாஜகவின் சார்பில் மோசமான பொய்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் பிரதமர் மோடியைத் தாக்க முயன்றார் என்று சொல்வது அப்பட்டமான பொய் என்றும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தைக் கண்டு அஞ்சுகிறார்.

கூடுதல் தொகுதி கேட்பது திமுக கூட்டணிக்கு நெருக்கடியா என்ற கேள்விக்கு, "இது வழக்கமான ஒன்றுதான். அனைத்து நெருக்கடிகளையும் முதல்வர் ஸ்டாலின் சுமூகமாகத் தீர்த்து வைப்பார்" என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+