"மாறுகிறது கோலம்".. அதிமுகவினர் இங்கே வாங்க, வேற வழியில்லை.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி.. திகைத்த பாஜக
தமிழக போக்குவரத்து துறை எஸ் எஸ் சிவசங்கர் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்
சென்னை: பாஜகவை எதிர்க்க வேண்டுமானால், அதிமுகவும் ஒன்றிணைய வேண்டும், அண்ணன் தம்பியாக நினைத்து அதிமுகவினர் திமுகவுக்கு வரலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறைகூவல் விடுத்துள்ளார்.
Recommended Video
சில தினங்களுக்கு முன்பு, மூத்த திமுக தலைவரும், அமைச்சருமான கே.என். நேரு திருச்சியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

தம்பி - அண்ணன்
மேலும், "திமுகவும் அதிமுகவும் அண்ணன் - தம்பி மாதிரி... அதிமுகவுடனான தேர்தல் போட்டியும் அண்ணன் - தம்பி போட்டியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது, சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பாஜகவிடம் போட்டியிட வேண்டியிருக்கிறது" என்று பேசியிருந்தார்.. நேரு பேசின இந்த பேச்சு, பாஜகவை மட்டுமல்லாமல், அதிமுகவையும் திரும்பி பார்க்க வைத்தது.

அண்ணன் தம்பி
இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.. குறிப்பாக, இந்த முறை தேர்தலிலும், பாஜக - அதிமுக மீதான எதிர்வாதத்தை வைத்துதான், தேர்தலை சந்திக்க போகிறீர்களா? அதிமுகவும், திமுகவும் அண்ணன் தம்பிதானா? அப்படியானால், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அண்ணனை தம்பி திட்டலாமா? தம்பியை அண்ணன் திட்டலாமா? சித்தாந்த சண்டையில் திமுக உள்ளபோது, அதிமுகவை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விகளை முன்வைத்தோம்.

திடீர் சேஞ்ச்
அதற்கு அமைச்சர் நமக்கு தந்த பதில் தான் இது: "திமுக கடந்த ஒன்றரை வருடங்களாக ஏராளமான சாதனைகளை செய்துள்ளது.. முதல்வர் ஸ்டாலின் என்னென்ன திட்டங்களை முன்னெடுத்த காரணங்களினால், தற்போது தமிழகத்தில் மாற்றம் வந்துள்ளதை என்பதை வரும் தேர்தலின்போது எடுத்து சொல்வோம்.. அதேபோல இனிவரும் நாட்களில் என்னென்ன மக்களுக்கான திட்டங்களாக கொண்டு செல்ல போகிறோம் என்பதையும் கொண்டு செல்வோம்.. தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டு செல்லும் பணியை திமுக அரசு செய்து வரும்போது, அதை பின்னிருந்து இழுக்கக்கூடிய பணியை பாசிச பாஜக செய்வதையும் அழுத்தமாக எடுத்து சொல்வோம்..

கருணாநிதி
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தேர்தல் என்று வருகிறபோது, திமுக கொள்கை ரீதியாக நிற்கின்ற கட்சி.. ஆனால் அதிமுக நேர்எதிர் என்ற முகத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் நிற்கிற கட்சி.. ஆனால், கொள்கை ரீதியாக திமுக நிலைநிறுத்திய அடிப்படை விஷயங்களை தகர்ப்பதற்கு, அதிமுக முன்வந்ததில்லை. இருமொழி கொள்கையாகட்டும், மதசார்பின்மையாகட்டும், இவைகளை அதிமுக தடை செய்தது கிடையாது.. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சி என்பது, அவர்கள் ஆட்சிக்கு வருகின்றபோதெல்லாம் தடைபடுகிறது..

கலைஞர்
கலைஞர் போட்டுக்கொடுத்த முன்னேற்ற பாதையில் தமிழகம் செல்வதை, அதிமுக தடுத்துக் கொண்டே இருந்தனர்.. ஆனால், பாஜக இணைந்துவிட்டால், நம்முடைய மொழி அழியும், நம்முடைய கலாச்சாரம் அழியும், நம் அடையாளம் அழியும்.. கடைசியில் அவர்களின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே யூனிபார்ம் என்ற கீழ்த்தரமான நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.. எல்லாவற்றையும் சிங்கிள் அஜென்ட்டாவில் கொண்டு வர முயன்றார்கள்.. அதனால்தான் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்பதை உரக்க சொல்ல வேண்டி உள்ளது..

அறைகூவல்
அதிமுகவில் உள்ளவர்களை, திமுகவில் வந்து இணையுங்கள் என்று ஏன் அழைக்கிறோம் என்றால், நீங்கள் திமுகவுக்கு வந்தால்தான், நமக்கான மொழியை கோர முடியும், இனத்தை கோர முடியும்.. பாஜக உள்ளே வந்துவிட்டால், அடிப்படையான மொழிக்கே அழிவுதான்.. அதனால்தான் சொல்கிறோம், அண்ணன் தம்பியாக நினைத்து அதிமுகவினர் இங்கே வாங்க, நாம் சேர்ந்து பாஜகவை எதிர்க்கலாம் என்பதுதான் அதன் அர்த்தம். அதிமுகவுக்கான அறைகூவலாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்" என்றார் அமைச்சர் சிவசங்கர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications