இஸ்லாமியர்களை கவர் பண்ணுங்க.. எடப்பாடிக்கு ஆர்டர் போட்ட அமித் ஷா.. எல்லாமே பிளானிங்.. அப்போ திமுக?
சென்னை: இஸ்லாமியர்களை எடப்பாடி பழனிச்சாமி குழப்புகிறார். இதன் மூலம் திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்., இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு செய்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சரமாரி விமர்சனங்களை வைத்துவிட்டு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். அண்ணாமலையின் பேச்சு அதிமுக மூத்த தலைவர்களை விமர்சனம் செய்யும் விதமாக உள்ளது . அவர் சொல்லும் கருத்துக்களை அதிமுக தொண்டர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. அதிமுக தொண்டர்களை மதிக்கும் விதமாக பாஜகஉடன் கூட்டணியை முறித்துக்கொள்கிறோம்.
அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என்று அதிமுக அறிவித்தது. அதோடு இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2026 லோக்சபா தேர்தலிலும் கூட்டணி இல்லை. இது அதிமுகவின் கூட்டணி முடிவு இல்லை. தொண்டர்களின் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேட்டி: இந்த முடிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஒன்றாக இருந்தால் மட்டும் கொங்கு மற்றும் தென் மண்டலத்தில் வெற்றிபெற முடியும். கொங்கு மண்டலத்தில் திமுகவும் வலுவாகவே உள்ளது, திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக ஒன்றாக இருக்க வேண்டும்., இல்லையென்றால் வாக்குகள் சிதறும். அதனால் பாஜக தொண்டர்கள் பலர் அப்செட்டில் இருக்கின்றனர். கூட்டணி முறிந்தால் சிக்கல் என்று அப்செட்டில் உள்ளனர். அதனால்தான் அண்ணாமலை யாத்திரையிலும் பெரிதாக ஆர்வம் இன்றி உள்ளனர். தொண்டர்கள் உற்சாகம் இன்றி உள்ளனர்.
( சீனியர் எண்ணத்தில்.. வெந்நீரை ஊற்றிய அண்ணாமலை.. யாத்திரைக்கு போனால் ஷாக்.. அலறிய )
இரண்டு கட்சியிலும் நிர்வாகிகள் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். இவர்கள் தனி தனியாக கூட்டணி அமைத்தாலும் வெற்றிபெறும் அளவிற்கு கூட்டணி இருக்காது. அதிமுக தனியாக கூட்டணி அமைத்தாலும் அது வெற்றிபெறும் கூட்டணியாக இருக்காது. பாஜகவிற்கு அதேதான். அவர்கள் பாமக, தொடங்கி பலருடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி கிடைக்காது. முக்கியமாக ஏசி சண்முகம் எல்லாம் வந்தாலும் கூட இவர்கள் கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்புகள் இல்லை. தனியாக கூட்டணி அமைத்தால் இன்னொரு பக்கம் அதிமுக 4வது இடத்திற்கு கூட செல்லும்.
அதை நான் முன்பே சொல்லி இருந்தேன். லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படும். அதிமுகவிற்கு நான்காவது இடம் ஏற்படும். அதிமுக வேண்டாம் என்று அண்ணாமலை சொல்கிறாரா.. திராவிட கட்சிகள் வேண்டாம் என்று ஒரு இமேஜை உருவாக்க அவர் நினைக்கிறாரா? ஒரு லீடர் போல தன்னை காட்டிக்கொள்ள அவர் நினைக்கிறார்.. அவரின் வார் ரூம் இமேஜெய் உருவாக்க இப்படி நினைக்கிறாரா என்று தெரியவில்லை. அண்ணாமலைக்கு இதனால் இமேஜ் எல்லாம் வளரவில்லை.

பிளான்: பாஜக பெரிதாக வளரவில்லை. அண்ணாமலையின் பேட்டிகள், பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொல்லும் பொய்களால் பாஜக வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது. இதனால் பாஜக வளரும் என்று கூற முடியாது, இப்போது அதிமுக - பாஜக அடித்துக்கொள்ளவது இல்லை. மாறி மாறி இவர்கள் பேசிக்கொள்வது இல்லை. இதனால் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி திட்டமிட்டு இயங்குகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் இஸ்லாமியர்களை எடப்பாடி பழனிச்சாமி குழப்புகிறார். இதன் மூலம் திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்.,
இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு செய்கிறாரா.. போய் குழப்பத்தை ஏற்படுத்துங்கள்.. இஸ்லாமியர்களை குழப்பங்கள்.. திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கூட அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கூறி இருக்கலாம். அமித் ஷா சொல்லி எடப்பாடி பழனிசாமி இப்படி செய்து இருக்கலாம். இப்போது கூட்டணி முறிந்தது இன்னொரு பக்கம் தற்காலிகம் போல தெரிகிறது. எதிர்காலத்தில் இது மாறலாம். அவர்கள் கூட்டணி கூட வைக்கலாம். அண்ணாமலை உண்மையிலேயே கூட்டணி உடைத்தது உறுதி என்றால் அதை சிலர் ஆதரிக்கின்றனர். பலர் எதிர்க்கின்றனர். அண்ணாமலையின் முடிவை பலர் ஆதரிக்கவில்லை. லோக்சபா தேர்தலில் தனியாக நிற்பது சரியாக இருக்காது, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications