பஞ்சு பஞ்சா போயிடுச்சே.. கிளம்பி வந்த "2 புள்ளிகள்".. படார்னு சொல்லிட்டாரே எடப்பாடி.. "தலைமை" மாறுதோ
எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் மாநில தலைமையை மாற்றக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது
சென்னை: எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்ய பாஜக மேலிடம், பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை கையில் எடுத்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், பாஜக மேலிடத்துக்கே ஒரு முக்கிய கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளாராம்.. இதையடுத்து தமிழக பாஜக வெலவெலத்து போயுள்ளதாம்.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று நாமக்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.. இந்த பேச்சு உடனடியாக டெல்லிவரை பாஸ் செய்யப்பட்டுவிட்டதாகவும், இதனால் எடப்பாடிக்கான நெருக்கடிகள் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.
எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி குறித்தும், கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம் என்று எடப்பாடி சொன்னது குறித்தும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அப்போதே செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

ரியாக்ஷன்
அதற்கு அண்ணாமலை "எடப்பாடி பேட்டியில் என்ன சொன்னார் என்று 2 முறை திரும்ப திரும்ப செய்தியாளர்களை கேட்டார்.. கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்றதுமே, சிறிது நேரம் யோசித்துவிட்டு, அதற்கு பிறகுதான் அண்ணாமலை ரியாக்ட் செய்தார்.. "விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம்' என்று மட்டும் பதிலளித்துவிட்டு நகர்ந்து சென்றார்.. அதிமுக பாஜகயில் கூட்டணி விரிசல் என்பதைவிட, எடப்பாடி + அண்ணாமலை இடையேயான விரிசலும் அப்போதே தென்பட துவங்கிவிட்டதாகவே தெரிகிறது. இதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி டீல் உள்ளவர்கள், பாஜகவை வெளிப்படையாகவே விமர்சிக்க துவங்கினர்..

தூக்கி தூக்கி
கூட்டணியில் இருந்து பாஜக விலகி செல்லலாம் என்று கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன், முன்னாள் எம்பி கோ.ஹரி உள்ளிட்டோர் ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர்.. பாப்புலர் முத்தையா நெல்லையில் பேசும்போது, "கூட்டணியில் இருந்து பாஜக விலகினால், ரொம்ப நல்லது.. உங்களை தூக்கி சுமந்துதான் நாங்கள் மோசமாகி போனோம்.. அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாம் நம்முடைய வாக்குகளை இழந்துவிட்டோம்.. அதனால், பாஜக நம்மை விட்டு சென்றுவிட்டால், நமக்கான வாக்குகளும் பிரிய வாய்ப்பில்லை.. அதிமுக தயவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என நினைத்து வரும் அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது என்றார்..

ரேங்க்கிங்
அதேபோல, அருண்மொழித்தேவன் கடலூரில் பேசும்போது, "அண்ணாமலை திடீரென பாஜக மாநில தலைவர் ஆகிவிட்டார். அவரைபார்த்தாலே அமாவாசை சத்யராஜ் ஞாபகம்தான் வருது.. பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்று சொன்னால், அதற்கு மறுப்பு சொல்லுங்கள், அதைவிட்டுவிட்டு, 2ம் கட்ட, 3ம் கட்ட என்று ரேங்க் போடுவதற்கு இந்த அண்ணாமலை யார்? என்று கேட்டிருந்தார்.. திருவள்ளூர் மாவட்டத்தில் கோ. ஹரி பேசும்போது, "எந்தக் காலத்திலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது... 4 தொகுதிகளை வென்ற பாஜக தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது... வெறும் 4 எம்எல்ஏ அதுவும், அதிமுக போட்ட பிச்சை.. தினமும் மீடியாவில் தன்னுடைய பெயர் வரவேண்டும் என்பதற்காக, அண்ணாமலை எதை எதையோ பேசி வருகிறார்" என்றார்.

தூதுவர்கள்
அதாவது பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதையும் தாண்டி, அண்ணாமலையை எடப்பாடி தரப்பினர் விமர்சிப்பதுதான் இந்த விஷயத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு முக்கிய தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட்டணி குறித்து, 2 மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளனர். சசிகலா, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் குறித்து இவர்கள் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்ய சில நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு வந்தார்களாம்.. 2 தூதுவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியும்கூட, எடப்பாடி கறாராக நோ சொல்லிவிட்டாராம்..

நிசப்தம்
பெருமளவு கட்சியும், நிர்வாகிகளும் தன் பக்கம் உள்ளபோது, தன்னை மட்டுமே கட்சியின் தலைமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும், ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடமில்லை என்பதையும், தினகரன் இல்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என்பதையும், மீண்டும் ஒருமுறை தன் நிலைப்பாட்டை அழுத்தமாக சொல்லிவிட்டாராம் எடப்பாடி. அதுமட்டுமல்ல, ஆலோசனை நடத்த வந்த பாஜக மேலிட தலைவர்களிடம், முதலில் தமிழகத்தில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள்.. மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோரை தலைவராக போடுங்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குறித்து பேசக்கூடாது... அப்படி செய்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அப்போது நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது...

பறந்த புகார்
ஏற்கனவே பாஜகவுக்குள்ளேயே இதே கோரிக்கைதான் கடந்த சில மாதங்களாகவே மேலிடம் வரை பறந்து கொண்டிருக்கிறது.. சீனியர்கள் சிலரும், இதே புகாரை டெல்லி வரை கொண்டு சென்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வைத்திருக்கிறாராம்.. எனினும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நேரடி நம்பிக்கையை பெற்றவர் அண்ணாமலை.. குறிப்பாக அமித்ஷாவின் 100 சதவீத நம்பிக்கையை பெற்றவர் அண்ணாமலை.. மேலிடத்தின் ஆசீர்வாதம் பெற்றவர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் பிரதமருடன் காரில் ஒரு மணி நேரம் பயணித்தவர்.. உச்சபட்ச கவுரம் இது..

குட்புக்
அதனால்தான், இப்போதுவரை அவர்களது குட்புக்கில் இடம்பெற்று வருகிறார்.. அப்படி ஒரு பெருமிதம் அண்ணாமலைக்கு கிடைத்துள்ள நிலையில், அவரை மாற்றும்படி முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் எடுபடுமா? என்று தெரியவில்லை.. அதேநேரத்தில், இந்த ஒரு வருடத்தில் தமிழக பாஜகவை, எதையாவது செய்து நிமிர வைத்த பெருமை அண்ணாமலை என்ற தனி சக்திக்கு உள்ளது என்பதையும் பாஜக மேலிடம் அலசிப்பார்க்காமல் இருக்காது.. எனினும், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை எடுபடுமா? தெரியவில்லை.. பார்ப்போம்...!!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications