Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அசையுது" அஸ்திவாரம்.. குறுக்கே "ஆமை" வேற.. ஆஹா மாறுதே கோலம்.. "வெள்ளைக்கொடி"க்கு மறுபடியும் வேலையா?

அதிமுக - பாஜக கூட்டணி இடையேயான விரிசல் முடிவுக்கு வரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறது? என்ற பரபரப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. இதனால், ரத்தத்தின் ரத்தங்களும் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.

பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, அதிமுக தரப்பில் இருந்தும் எதிர்வினையாற்றப்பட்டு வருகிறது.

மற்றொருபக்கம், அதிருப்தியாளர்கள் தொடர்ந்து பாஜகவில் இருந்து அதிமுக நோக்கி கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.. பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்..

 ஸ்பெஷல் டீம்

ஸ்பெஷல் டீம்

இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்தும் உள்ளனர்.. பாஜகவினரை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஒரு டீம் அமைத்திருப்பதாகவும், அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அதிமுகவுக்கு கொண்டுவருவதே இந்த டீம்தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இதைத்தொடர்ந்தே பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் அம்மு (எ)ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் டி.விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்ததாகவும் சொல்கிறார்கள்.

 சாட்டையடி

சாட்டையடி

இந்த திடீர் மோதல்களுக்கு காரணம், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட நினைக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி... அப்போதுதான், நடக்க போகும் தேர்தல்களில், இதுவரை கையைவிட்டு நழுவிப்போன முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களை பெற முடியும் என்று நம்புகிறாராம்.. மேலும், ஓபிஎஸ், சசிகலாவை கட்சிக்குள் இணைத்து கொள்ளும்படியான பாஜகவின் குடைச்சல்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் நம்புகிறாராம். இதற்காகவே, நிர்மல்குமார் வைத்து, அரசியல் ஆட்டத்தை எடப்பாடி துவக்கி இருக்கிறார் என்கிறார்கள்.

 சீன் மாறுது

சீன் மாறுது

அதற்கேற்றவாறு, நேற்றையதினம் மூத்த தலைவர் செம்மலை ஒரு பேட்டியில், "பாஜக அதிமுக கூட்டணியில் இப்போது கிடையாது. கூட்டணி என்பது அந்தந்த தேர்தல்களுக்கு முன்பாக, அதுவும் ஒருசில மாதங்களுக்கு முன்பாக, கட்சிதலைமைகளால் தலைவர்களால் முடிவெடுக்கக் கூடிய விஷயம்.. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் பாஜக எங்களுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார்கள்.. அதற்கு பிறகு, உள்ளாட்சி, நகர்ப்புற தேர்தலில் அவர்களும் தனித்து போட்டியிட்டார்கள், கூட்டணி என்பது அப்போதே உடைந்துவிட்டது.. வரப்போகும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி தொடர்கிறதா? தொடரவில்லையா? என்பதை எங்கள் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

 ஷ்யாம் நறுக்

ஷ்யாம் நறுக்

இதையடுத்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுகவில் இல்லாமல் பாஜக தனியே போவதற்கு வாய்ப்பு கிடையாது. பாஜக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. அதனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு. பாஜகவை கழற்றிவிட வேண்டும். பாஜக இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது என்று கூறியிருந்தார்.. திருமாவளவன் இப்படி பேசியதுமே, மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான தராசு ஷ்யாம் ஒரு பேட்டி தந்திருந்தார்.

அச்சாரம்

அச்சாரம்

"திருமாவளவன் அதிமுகவுக்கு சொல்லியிருப்பது ஆலோசனையா? அறிவுரையா? என்பதைவிட "அச்சாரம்" என்றே சொல்லலாம்.. அணி மாறுதல் என் கண்ணுக்கு புலப்படுகிறது.. திமுகவில் இருந்து விலகக்கூடிய சிந்தனை விசிகவுக்கு இருக்கிறது என்றே தெரிகிறது. அதேபோல, பாஜக தங்கள் கூட்டணியில் இல்லாமல் போனால், மேலும் பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் வந்து சேரும் என்கிற எண்ணம் எடப்பாடிக்கும் உண்டு.. அந்தவகையில் தற்போது கூட்டணி மேகங்கள் மாறுகின்றன.. காட்சிகளும் மாறுகின்றன என்று கருத்து கூறியுள்ளார்.. ஆக, அதிமுக - பாஜக கூட்டணி முரண்பாடானது, அடுத்த புதுகூட்டணியை உருவாக்கும் சூழலை உருவாக்கும் அளவுக்கு தாக்கத்தை தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறது.

 ஈர்ப்பு - கண்துடைப்பு

ஈர்ப்பு - கண்துடைப்பு

ஆனால், இதெல்லாம் ஒரு நாடகம் என்கிறார் மூத்த தலைவர் கேசி பழனிசாமி.. அண்ணாமலையும் - எடப்பாடியும் சேர்ந்து நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று விடாமல் சொல்லி வருகிறார்.. அதற்கேற்றபடி, அதிமுக தலைவர்களும், பெரிதாக பாஜகவை தாக்கி பேசாமல் இருப்பதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. காரணம், இதுவரை ஓபிஎஸ் ஆதரவாளர்களை மட்டுமே இழுத்து வந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென தன் ஆதரவாளர்களை இழுக்கும் பணியை தொடங்கியதால், தானும் அதை செய்ய நேரிடும் என்று அண்ணாமலை கடுமையாகவே எச்சரித்திருந்தார்.

 காரசார கேள்வி

காரசார கேள்வி

இந்த எச்சரிக்கை பேச்சுக்கு இதுவரை அதிமுக தரப்பில் யாருமே காட்டமாக பதிலளிக்கவில்லையே? வழக்கமாக காரசாரமாக பேசும் ஜெயக்குமார்கூட நேற்றைய தினம் பட்டும்படாமல்தான் பாஜகவை விமர்சிக்க காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதிமுக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமில் ஈர்க்கப்பட்டுத்தான் பாஜகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காரணம் சொன்னாரே தவிர, எதிர்வினையாற்றுவோம் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலரடி தரவில்லையே ஏன் என்றும் கேள்விகள் எழ துவங்கி உள்ளது.

 ஆமை ஆமை

ஆமை ஆமை

"பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு ஆமை.. அது புகுந்த இடம் விளங்கியதில்லை" என்று சிவி சண்முகம் மாற்றுகூடாரத்தை குறை சொல்கிறாரே தவிர, பாஜக தரப்பை இந்த முறை அதிகம் விமர்சிக்காதது ஏன்? அதிமுக பாஜகவிடம் பம்முகிறதா? பாஜக அதிருப்தியாளர்களை பேசவிட்டு, ஒதுங்கிநின்று ஆழம் பார்க்கிறதா? என்றெல்லாம் அதிமுக தொண்டர்களுக்கே குழப்பம் உள்ளதாக சொல்கிறார்கள்.. பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமரும்வரை, பாஜகவிடம் இருந்து ஒதுங்கியிருப்பதுபோல, ஒரு பிம்பத்தை அதிமுக ஏற்படுத்த முயல்வதாக கேசி பழனிசாமி சொல்வது உண்மையா? என்றும் சலசலப்புகள் துவங்கி உள்ளதாம்.

 கோவில்பட்டி

கோவில்பட்டி

அதெப்படி பாஜகவில் எல்லாருமே திடீரென ஒரே நேரத்தில் கிளம்பி அதிமுகவுக்கு வருகிறார்கள்? பாஜகவில் அதிருப்தி என்றால் திமுக, விசிக, பக்கம் செல்லாமல், கரெக்ட்டாக அதிமுகவை நோக்கியே அவர்கள் படையெடுத்து வர காரணம் என்ன? கோவில்பட்டியில் எடப்பாடியின் உருவபொம்மை எரிக்கப்பட்ட நிலையில், அதே கோவில்பட்டியில் இருந்து கோமதி பெண் நிர்வாகி, கடம்பூர் ராஜூ முன்னிலையில் இணைகிறாரே எப்படி? ஏற்கனவே திட்டமிட்டு பேசி வைத்து செய்கிறார்களா? யதேச்சையாக நடக்கிறதா? போன்ற சந்தேகங்களும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

 வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

ஒருவேளை அதிமுக - பாஜக இடையே நிஜமான மனக்கசப்பு இருந்தாலும்கூட, இரு தரப்பையும் சமாதானப்படுத்த சில தலைவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. பாஜகவை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் உடும்புப்பிடியாக உள்ளதாலும், அதிமுக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்பதையே முழுநோக்கமாக கொண்டுள்ளதால், இந்த விரிசலை இனியும் அதிகப்படுத்தாமல், உடனடியாக ஒன்றுசேர்க்கும் முயற்சியில் நலம்விரும்பிகள் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.. அதிமுக - பாஜக இடையேயான நிஜஅரசியல், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுக்கு பிறகே வெளிச்சத்துக்கு வரும் என்றும் அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் சொல்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+