ஜனவரி 1 முதல்.. குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறதா? உண்மை என்ன? மத்திய அரசு தந்த விளக்கம்
சென்னை: 2026 ஜனவரி 1 முதல் பென்சன் உயரும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) சந்தாதாரர்கள், தற்போதைய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதிய வரம்புகளான ரூ. 1,000 மற்றும் ரூ. 7,500-ஐ அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இருப்பினும், இந்தக் கோரிக்கைகள் தற்போதைக்கு நிறைவேற வாய்ப்பில்லை என்று தெரிகிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.

மார்ச் 31, 2019 நிலவரப்படி, ஊழியர்களின் ஓய்வூதிய நிதி (EPS fund) மதிப்பீட்டின்படி, செயல்பாட்டு பற்றாக்குறை (actuarial deficit) இருப்பதாகவும், இதன் பொருள், சந்தாதாரர்களுக்கு தற்போதைய ஓய்வூதியத்தை வழங்குவதற்கு தேவையான வருவாயை ஓய்வூதிய நிதி ஈட்டவில்லை என்பதாகவும் கரந்தலாஜே தெரிவித்தார்.
ஓய்வூதிய திட்டம்
இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக அரசு உயர்த்த பரிசீலித்து வருகிறதா என்று ஊழியர்கள் இடையே கேள்வி நிலவி வந்தது.
கரிந்தலாஜே இதற்கான பதிலில், இபிஎஸ்-95 என்பது.. ஊழியர்களின் ஓய்வூதிய நிதி, (i) முதலாளியின் சம்பளத்தில் 8.33 சதவீத பங்களிப்பு மற்றும் (ii) மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவு மூலம் மாதம் ரூ.15,000/- வரையிலான சம்பளத்தில் 1.16 சதவீத பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டது.
திட்டத்தின் கீழ் அனைத்துப் பலன்களும் இத்தகைய திரண்ட நிதியிலிருந்து வழங்கப்படுகின்றன. இபிஎஸ், 1995-ன் பத்தி 32-ன் கீழ் கட்டளையிடப்பட்டபடி ஆண்டுதோறும் நிதி மதிப்பீடு செய்யப்படுகிறது. 31.03.2019 நிலவரப்படி நிதி மதிப்பீட்டின்படி, ஒரு செயல்பாட்டு பற்றாக்குறை உள்ளது.
நிதி பற்றாக்குறை உள்ளது
பென்சன் தொகை முதலீடு மூலம் போதிய ரிட்டர்ன் கிடைக்கவில்லை. நிதி பற்றாக்குறை உள்ளது . பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்தும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்போதைக்கு குறைந்தபட்ச தொகை உயர்த்தப்படாது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு (EPFO) ஆண்டுதோறும் இபிஎஸ்-க்கு வழங்கப்படும் 1.16 சதவீத சம்பளப் பங்களிப்புக்கு இணையாக, அரசு பட்ஜெட் ஆதரவை வழங்குவதன் மூலம் இபிஎஸ், 1995-ன் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.
இதன் மூலம், இபிஎஸ் போதுமான வருவாயை ஈட்டாததால், தற்போதைய கடமைகளை நிறைவேற்ற அரசு கூடுதல் நிதியை வழங்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்திய அரசு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் - 95 (EPS-95) திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அதிகபட்ச பலன்களை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது. இதற்காக, அந்தந்த நிதிகளின் ஆரோக்கியத்தையும் எதிர்கால பொறுப்புகளையும் கவனத்தில் கொண்டுள்ளது.
இபிஎஸ்-95 என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நன்மை மற்றும் வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டமாகும். அதாவது, ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பும் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி எடுக்கப்பட்டு, அதற்கேற்ப ஓய்வூதியமும் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி வழங்கப்படுகிறது. தற்போதைய கடமைகளைச் சந்திப்பதில் இபிஎஸ்-95 சவால்களை எதிர்கொள்வதால், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையில் உடனடி திருத்தம் இருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கூறி உள்ளார்.
அதனால் ஊடகங்களில் வருவது போல ஜனவரி 1ம் தேதி குறைந்தபட்சம் ஓய்வூதியம் உயர்த்தப்படாது என்று அமைச்சரவை விளக்கம் அளித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications