எப்படி பேசலாம்? ஆளுநரை பார்த்துவிட்டு "வார்த்தையை" விட்ட ரஜினி! செம அப்செட்! மீண்டும் டெல்லி ட்ரிப்?
சென்னை: ஆளுநர் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்திய நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் டெல்லிக்கு செல்ல இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியை நேரில் சந்தித்து பேசினார். அரசியலுக்கு வர போவதில்லை.. என்னை மன்னித்துவிடுங்கள். என்னை நம்பி இருந்தவர்களுக்கு நன்றி.
நான் அரசியலுக்கு வருவதாக கூறி இனியும் உங்களுக்கு பொய்யான நம்பிக்கை கொடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றவர்தான் நடிகர் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் திடீரென ஆளுநர் ரவியை சந்தித்தது பெரிய சர்ச்சையானது.
ஆனால் வெளியே வந்த ரஜினிகாந்த் நான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவாக சொன்னார்.

என்ன சொன்னார்?
ஆனால் இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் வாய் தவறி வேறு ஒரு விஷயத்தையும் சொன்னார். ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு ஆளுநர் ரவிக்கு பிடித்து இருக்கிறது. . தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

சந்திப்பு
இந்த சந்திப்பில் நாங்கள் அரசியல் பேசினோம் என்று ரஜினி சொன்னதை பாஜக தரப்பு வட்டாரங்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் பேசியதை பற்றி ரஜினி இப்படி க்ளூ கொடுத்து இருக்க கூடாது. ஆளுநர் மாளிகை என்பது அரசியல் சாராத இடம். இதில் ஆளுநர் அரசியல் ரீதியாக சந்திப்புகளை நடத்த கூடாது. அதனால் ரஜினி அரசியல் பேசினோம் என்று சொன்னது தவறு என்று பாஜகவினர் சிலர் கருதுகிறார்களாம்.

ரஜினி பேச்சு சர்ச்சை
ரஜினியின் பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு தேவையில்லாத இடத்தை கொடுத்துவிட்டது. விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் ரஜினியின் இந்த பேச்சை விமர்சனம் செய்து வருகின்றன. ஆளுநர் மாளிகையில் அரசியலா என்று கேள்வி எழுப்பி வருகின்றன. ரஜினி பிரஸ் மீட்டில் உளறியதுதான் இதற்கு காரணம் என்று பாஜகவில் சில தலைவர்கள் கருதுவதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி இப்படி வெளிப்படையாக பேசி இருக்க கூடாது என்று பாஜகவினர் கருதுகிறார்களாம். இதில் ரஜினி மீது சிலர் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் மீண்டும் டெல்லிக்கு செல்ல இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பாஜக தலைவர்களுடன் நல்ல உறவை மீண்டும் ஏற்படுத்தும் விதமாக ரஜினிகாந்த் டெல்லிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த முறை டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இந்த விழாக்களில் கலந்து கொள்ள ரஜினி டெல்லி செல்வார். இதில் மோடியை ரஜினி சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications