Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கருப்பு தாடி" உருவத்தை அகற்ற வேண்டும்.. கனல் கண்ணனே, வாழ்த்துக்கள்.. முட்டுத்தந்த இந்து தமிழர் கட்சி

கனல் கண்ணனுக்கு இந்து தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "யூ2 புரூட்டஸ் மைனர் விஜய் போன்றவர்களுக்கு கருத்துச்சுதந்திரம் இருக்கும்போது, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுள் இல்லை என்று சொல்லக்கூடியவர்களின் கருப்பு தாடி உருவத்தை அகற்ற வேண்டும் என்று கனல்கண்ணன் பேசியது எந்த வகையில் தவறு?" என்று இந்து தமிழர் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.

Recommended Video

    கனல் கண்ணன் அப்படி என்ன பெரியார் பற்றி பேசினார்?

    ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் கடவுள் இல்லை என்று சொல்பவரின் சிலை இருக்கிறது, அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் இந்து முன்னணி கூட்டத்தில பேசியிருந்தார்.

    அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர்மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணியும் தீவிரமாகி உள்ளது..

     ராம ரவிக்குமார்

    ராம ரவிக்குமார்

    எனினும், கனல் கண்ணன் எந்நேரமும் கைதாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மற்றொருபுறம், கனல் கண்ணனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு தந்து வருகின்றனர்.. கனல் கண்ணன் பேசியது அவரது பேச்சுரிமை என்றும் சொல்லி வருகின்றனர். அந்தவகையில், இந்து தமிழர் கட்சியும் கனல் கண்ணனுக்கு ஆதரவு தந்துள்ளது.. அக்கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் கனல் கண்ணனுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    பீரங்கிகள்

    பீரங்கிகள்

    அந்த அறிக்கையில் உள்ளதாவது: "தில்லை நடராசரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கியை வாயில் வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே நன்னாள் என்று பேசிய அயோக்கியர்களை கண்டிக்காத கைது செய்யாத காவல்துறை, நடராஜ பெருமான் குறித்து அவதூறாக பேசி இதுவரை கைது செய்யப்படாத யூ2 புரூட்டஸ் மைனர் விஜய் போன்றவர்களுக்கு கருத்துச்சுதந்திரம் இருக்கும்போது, இறை நம்பிக்கையோடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மனம் புண்படும்படியாக கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுள் இல்லை என்று சொல்லக்கூடியவர்களின் கருப்பு தாடி உருவத்தை அகற்ற வேண்டும் என்று கனல்கண்ணன் பேசியது எந்த வகையில் தவறு?

     தார்பூசி அழிப்பர்

    தார்பூசி அழிப்பர்

    இவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா? மசூதி முன்பாக, சர்ச் முன்பாக ஈவேரா சிலைகளை வைக்காத திராவிட சித்தாந்தவாதிகள் இந்து கோயில்களுக்கு முன்பாக மட்டும் ஈவேரா சிலைகளை நிறுவி கடவுள் மறுப்பு வாசகங்களை நிறுவியதால்தான் சர்ச்சை தொடர்கிறது. கடவுள் மறுப்பு கல்வெட்டு வாசகங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லை எனில் இறைமறுப்பு வாசகங்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் தமிழகத்தில் நடத்திட இந்துசமயம் தயாரானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கனல்கண்ணன் அனல் கிளப்பி விட்டுள்ளார், வாழ்த்துக்கள் கனல் கண்ணன் அவர்களே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

     அனலடிக்கும் கனல்

    அனலடிக்கும் கனல்

    மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தமிழகத்தில் திராவிடம், பெரியாரியம் போன்ற கருத்துகளுக்கு எதிராக பாஜக இந்து இயக்கங்கள் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன... அதிலும் அம்பேத்கர், பெரியார் சிலைகள் உடைக்கப்படும், திடீர் திடீரென கலர் மாற்றப்படுவதும் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.. இந்த சர்ச்சைகள் சில சமயம் வன்முறைகளாகவும் வெடித்து விடுகிறது.. அந்த வகையில் கனல் கண்ணன் பேசிய 4 நாட்கள் ஆன நிலையிலும், சர்ச்சையின் கொந்தளிப்பு அடங்காமல் அனலடித்து கொண்டிருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+