புனித ஹஜ் பயணம்! தன்னார்வ தொண்டராக செல்ல விருப்பமா? அப்ப நீங்க செய்ய வேண்டியது என்ன?
சென்னை: சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழக சிறுபான்மை நலத்துறை செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கமாகும். இந்த ஆண்டு (ஹஜ் 2023) மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை (சுற்றறிக்கை எண்.6) "www.hajcommittee.gov.in" என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது.
ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தெரிவு செய்வதற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்.6-ல் தெரிந்து கொள்ளலாம். ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு ஊழியர்கள் மட்டும் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்க 13.04.2023-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்:-
செயலர் மற்றும் செயல் அலுவலர்
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு,
ரோஸி டவர், மூன்றாம் தளம்,
எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)
சென்னை-34.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications