எல்லாம் அவங்கதான்னு நம்பினாரே.. எடப்பாடியை கைவிடும் "அண்ணன்கள்".. திரண்டு வந்த தலைகள்?
சென்னை: அதிமுகவில் செங்கோட்டையன் - மணியானவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். இவர்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளனர். அதனால் எடப்பாடிக்கு எதிராக இவர்கள் ஒரு குடை கீழ் சேருகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா 2024 தேர்தல் முடிந்த நிலையில் அதிமுகவில் லேசாக அதிருப்தி குரல்கள் எழும்ப தொடங்கி உள்ளன. தேர்தல் முடிவுகள் வந்ததும் அதிமுகவில் பூகம்பம் வெடிக்கலாம் என்று செய்திகள் வருகின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல்கள் எழும்ப வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பேட்டி: இந்த மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுகவில் செங்கோட்டையன் - எடப்பாடி இடையே கோல்டு வார் ஏற்பட்டு உள்ளது. பனிப்போர் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவில் எடப்பாடியை விட சீனியர் செங்கோட்டையன். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் அரசியல் செய்தவர் செங்கோட்டையன். அப்போது சிலுவம்பாளையம் கிளை செயலாளர் எடப்பாடி. அப்போதே செங்கோட்டையன் எம்எல்ஏவாக இருந்தவர்.
ஜெயலலிதாவை பாதுகாத்தவர் செங்கோட்டையன். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது அவரை பாதுகாத்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா கோபமான நபர். ஆனால் அவரே அன்பாக பார்க்க கூடியவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை அவ்வளவு நம்பியவர் ஜெயலலிதா. லோக்சபா , சட்டசபை தேர்தல்களில் ஜெயலலிதாவிற்கு எல்லாமுமாகவே இருந்தவர் செங்கோட்டையன். எடப்பாடி அரசியல் எல்லாம் ஒன்றுமே இல்லை.
ஆனால் திருப்பூர், ஈரோடு வேட்பாளரை தேர்வு கூட எடப்பாடி செங்கோட்டையனிடம் ஆலோசனை கேட்கவில்லை. லோக்சபா தேர்தல் தொடர்பாக எதையும் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் இதனால் செட்டாகவில்லை. அதேபோல் அங்குள்ள கருப்பண்ணன் உடனும் செங்கோட்டையனுக்கு செட்டாகவில்லை. கருப்பண்ணன் எடப்பாடிக்கு நெருக்கம். உறவுக்காரர்.
இதே நிலைமைதான் தங்கமணிக்கும். கேவி ராமலிங்கம் இதேபோல் அதிருப்தியில் உள்ளார். இப்படி செங்கோட்டையன் - மணியானவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். இவர்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளனர். அதனால் எடப்பாடிக்கு எதிராக இவர்கள் ஒரு குடை கீழ் சேருகிறார்கள். செங்கோட்டையன் கீழ் இவர்கள் சேருகிறார்கள். அதேபோல் வேலுமணி மீது எடப்பாடி கோபத்தில் உள்ளார். காரணம் எடப்பாடி பழனிச்சாமி வேலுமணி சரியாக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறார்.
திமுகவை எதிர்த்து, பாஜகவை எதிர்த்து வேலுமணி சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் உள்ளது. எடப்பாடி அப்படி நினைக்கிறார். வேட்பாளர் நாயுடு என்பதால் எடப்பாடி அதிருப்தியில் உள்ளார். வேலுமணி சொல்லித்தான் அவரை எடப்பாடி தேர்வு செய்தார். இதை எடப்பாடி விரும்பவில்லை. அங்கே வேலுமணி வேலையே செய்யவில்லை என்ற புகார் உள்ளது. கடைசி மூன்று நாள் மட்டும் இல்லை.. தொடக்கத்தில் இருந்தே வேலை செய்யவில்லை என்று புகார் உள்ளது. எடப்பாடி பழனிசாமி இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
செங்கோட்டையன் தலைமையில் இவர்கள் எல்லாம் ஒன்றாக கூட போகிறார்கள். கொங்கு மண்டல லீடருக்கும் - டெல்லிக்கு - ஒரு சாமியாருக்கு இடையில் தொடர்பு உள்ளது. வேலுமணி, தங்கமணி, கேவி ராமலிங்கம் எல்லோரும் செங்கோட்டையனுக்கு எதிராக திரும்ப உள்ளனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க வாய்ப்புகள் உள்ளன.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications