Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேட்டுச்சா.. அப்ப 3வது அணியா.. கூட்டணியில் "அவர்" கிடையாதா?.. திமுகவையே குறி வைக்கும் டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனின் பேட்டிகள் கூட்டணியை அசைத்து பார்த்து வருகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று மீண்டும் ஒருமுறை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆரூடம் கூறியுள்ளார்.. ஆனால், எந்த தேசிய கட்சி என்று இந்த முறையும் தினகரன் சொல்லவில்லை.

பொதுவாக, ஒரு கட்சியின் நிலைப்பாடு என்பது, அந்தந்த கட்சி தலைவர்கள் மேற்கொள்ள போகும் காய்நகர்த்தல்களில் இருந்துதான் தெரியவரும்.. அத்தகைய காய்நகர்த்தல்களும், வியூகங்களும் சில சமயம் பேட்டிகளின் மூலம் தெரியவருவதும் உண்டு.

அப்படிப்பட்ட பேட்டிகள் சில சமயம், சொந்த கட்சிக்கே பலவீனமாகிப்போவதும் உண்டு... அப்படித்தான் டிடிவி தினகரனும் அமைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

சாணக்கியர்

சாணக்கியர்

தினகரனை பொறுத்தவரை, மிகச்சிறந்த அரசியல் சாணக்கியர்.. பக்காவாக அரசியல் செய்யக்கூடியவர்.. முதிர்ச்சி பக்குவ கூடிய பொறுமையும் தினகரனிடத்தில் உண்டு.. அதனால்தான் அவரை கூல் கேப்டன் என்று தமிழக அரசியலில் அழைக்கிறார்கள்.. ஆனால், இப்படிப்பட்ட தினகரனே அவசரப்பட்டு ஒரு பேட்டியை தந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்... குறிப்பாக, "எடப்பாடி மெகா கூட்டணி பற்றி பேசியதுமே, அந்த மெகா கூட்டணியில் இணைய போவதாக தினகரன் சொல்லி இருக்கக்கூடாது, அப்படி சொன்னது, அமமுகவின் பலவீனத்தையே காட்டுகிறது என்கிறார்கள்.

கனகச்சிதம்

கனகச்சிதம்

அதுமட்டுமல்ல, நாங்கள்தான் மாற்று என்று துணிச்சலாக சொல்லி இருக்க வேண்டும்.. அதுதான் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.. அதைவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி என்று இப்போதுவரை தினகரன் பேசிவருவது, அமமுகவின் பலவீனத்தை காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.. அதேபோல, பாஜகடன் அல்லது காங்கிரஸூடன் கூட்டணி என்று பொத்தாம் பொதுவாக தினகரன் சொல்வதையும் பெரும்பாலும் யாரும் ரசிக்கவில்லையாம்.. அமமுகவுக்கென்று ஒரு நிலைப்பாடு கிடையாதா? யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்ற நிலையில்தான் அக்கட்சி உள்ளதா? இதிலும் தெளிவான பேச்சு இல்லையே என்று விமர்சிக்கிறார்கள்.

யதார்த்தம்

யதார்த்தம்

அதேபோல, தினகரன் மீது பாஜக மேலிடம் அசாத்திய நம்பிக்கையை வைத்திருந்தாலும்கூட, அவரது சமீபத்திய பேட்டிகளை டெல்லி மேலிடமே அவ்வளவாக ரசிக்கவில்லையாம்.. இன்றுகூட, மன்னார்குடியில் தினகரன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இணையமாட்டோம். ஆனால் நான் இன்றும் சொல்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாகத் தன்னை நினைப்பவர்கள் எங்கு இருந்தாலும் ஓர் அணியில் சேர்ந்து கூட்டணிக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். நான் எதார்த்தத்தை உண்மையை சொல்கிறேன்.

 நிரூபணம்

நிரூபணம்

திமுகவை தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என்றால் பெரிய கூட்டணி வைத்துத் தான் செயல்பட வேண்டும். கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி வரமாட்டார் என்று சொல்லுகிறார்கள். நான் பழனிசாமியை சொல்லவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களைத் தான் சொன்னேன். ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை பழனிசாமியே நிரூபிக்கிறார்... எனவே அதைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் இல்லை" என்றார் தினகரன். அப்படியானால், "கூட்டணிக்குள் எடப்பாடி?" என்றால், எடப்பாடியை தவிர்த்துவிட்டு தனியாக ஒரு கூட்டணி இங்கு தயாராகி கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது..

வெயிட் & சீ

வெயிட் & சீ

அதுமட்டுமல்ல, "தேசியக் கட்சிகளோடும் சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும்" என்று தினகரன் இப்போதும் சொல்கிறாரே தவிர, அந்த தேசிய கட்சி பாஜகவா? காங்கிரஸா? என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை.. அதேசமயம், திமுக எதிர்ப்பு என்பதில் டிடிவி தினகரன் இப்போது வரை உறுதியாக இருந்தாலும், தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதிலும் தெளிவாக சொல்லவில்லை.. ஒருவேளை, தமிழகத்தில் அமைய போகும் கூட்டணிக்கு பாஜகவே தலைமையேற்க போகிறதா? கூட்டணி யார் தலைமையில்தான் அமைய போகிறது? கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் என்ன நிலைப்பாட்டை எடுக்க போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+