இங்கேயிருந்த கட்சி எங்கே? கழட்டிவிடப்பட்ட கமல்? திமுகவை மலை போல நம்பி.. மய்யத்தில் "முளைத்த" மேட்டர்
சென்னை: கூட்டணி தொடர்பாக, கமல்ஹாசன் எடுத்த முடிவில் அதிர்ந்து போயிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.. கமல் எடுத்த இந்த முடிவை எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் விமர்சித்து கொண்டிருந்தாலும், மய்யத்தினரே இன்னும் அதிலிருந்து மீண்டு வரவில்லையாம். இதுகுறித்த ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
- வரப்போகும் தேர்தலில் நேரடியாக திமுக கூட்டணி என்றில்லாமல், காங்கிரஸின் மூலம் சீட்டை பெறுவோம் என்று நினைத்து கணக்கு போட்டிருந்தார் கமல். இதனாலேயே ராகுலின் நடைபயணத்துக்குகூட நேரடியாகவே டெல்லி சென்று வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டு வந்தார்.. எனினும், 10 சீட்டையும் பெற்றுக் கொண்ட காங்கிரஸ், கமலுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை.

- முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைப்பதால் தனக்குரிய கவுரவம் தருவார்கள் என்று கமல்ஹாசன் எதிர்பார்த்தார்.. ஆனால், அது நடக்கவில்லை.
- திமுக கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் மய்யம் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
- திமுக தரப்பில் பேசியபோது 1 சீட்தான் தருவோம், அதுவும் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததாகவும், அதை கமலால் ஏற்க முடியவில்லை என்றும் செய்திகள் கசிந்தன.
மேல் சபை: இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மேல்-சபை எம்.பி. பதவி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.. வேறுவழியின்றி கமல்ஹாசன் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். தேசத்திற்காக நாமெல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும், தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு என்ற விளக்கத்தையும் கமல் தந்திருந்தார். ஆனாலும், மய்யத்தினர் கொதிப்பு இன்னமும் அடங்கவில்லை.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் அமைச்சர்களின் "டூர் ப்ரோக்கிராமும்" தயாராகி வருகிறது.
ராஜ்ய சபா: இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 1 ராஜ்யசபா சீட் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், அதற்கு பிரதியுபகாரமாக திமுக கூட்டணியை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். தன்னுடைய தேர்தல் சுற்றுப் பயணத்தை வகுக்க, மய்யத்தின் நிர்வாகிகளிடம் கலந்து பேசியிருக்கிறார் கமல். ஆனால், யாருமே இதில் அக்கறை காட்டவில்லையாம்.
மாநில நிர்வாகிகளில் சிலர் மட்டுமே கமலின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினர். இந்த தேதியில், இத்தனை மணிக்கு உங்க தொகுதிக்கு தலைவர் (கமல்) வருகிறார். கட்சிக்காரர்களை திரட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு மற்றும் பயணத்துக்கான அனுமதி வாங்குவது உள்ளிட்டவைகளை கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அப்செட்: ஆனால், மாவட்ட நிர்வாகிகளோ, கட்சி இருந்தால் தானே ; கட்சிக்காரர்களை திரட்டுவது? எங்களால் முடியாது என்று ஒதுங்கிக் கொள்கிறார்களாம்.. பல மாவட்டங்களிலும் மய்யத்தின் ஆட்கள் ஒதுங்குவதால், என்ன செய்வது என புரியாமல், தன்னுடைய தேர்தல் டூர் ப்ரோகிராமை திமுகவிடமே ஒப்படைத்து விடலாமா? என்று கமல் யோசித்து வருகிறாராம்.
மய்யத்தின் நிர்வாகிகள், பின்வாங்க காரணம், ஒத்த ராஜ்யசபா சீட்டுக்காக திமுகவிடம் கட்சியை அடகு வைத்துவிட்டாரே என்கிற கோபம் இன்னமும் அடங்கவில்லையாம்.. அதனால், இந்த தேர்தலில் உலக நாயகனின் ரசிகர்கள், தேர்தல் களத்தை விட்டு விலகிப் போய்க்கொண்டிருக் கிறார்களாம். அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications