கலைஞர் உரிமைத் தொகை திட்டம்: அடிக்க போகுது ஜாக்பாட்! மேலும் 2.30 லட்சம் பேரா? வெளியான தகவல்கள்
சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்கான நிபந்தனைகளை தளர்த்தி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகியோரை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 2.30 லட்சம் பேர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மாதம் தோறும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் திமுக, தனது தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த பிறகு, மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே,கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகிறார்கள். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் இருக்க கூடாது. ஒரு ஆண்டிற்கு வீ்ட்டு உபயோக மின்பயன்பாடு 3,600 யூனிட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.
கடந்த மாதத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, மகளிர் உரிமைத்தொகைக்கான நிபந்தனைகளை தளர்த்தி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகியோரை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்... இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வரும் 14 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டு வரும் 15 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனவே, இந்த திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது கவனிக்கத்தக்கது. அதாவது தற்போது உள்ள வருமான உச்ச வரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக நிர்ணயிக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறதாம்.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நடப்பு ஆண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதியை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த நிதியின் கீழ் சுமார் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 மகளிருக்கு நிதி அளிக்க முடியும். தற்போது அதைவிட குறைவான நிதியே வழங்கப்படுகிறது. வருமான உச்ச வரம்பை உயர்த்தினால் கூடுதல் பெண்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications