1 வாரம்தான்.. நாள் குறித்த ஸ்டாலின்.. உள்ளே வரப்போகும் "நியூ பேஸ்".. படபடக்கும் அமைச்சரவை.. பின்னணி!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் வெளிநாடு செல்லும் முதல்வர் அதற்கு முன் அமைச்சரவை கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இதற்கு முன்பாக நேற்று அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பாக விரைவில் அமைச்சரவை மாற்றம் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆன நிலையில் அரசு மீது பாசிட்டிவ் விமர்சனம்தான் உள்ளது. பல விஷயங்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளது. பெண்களுக்கு பேருந்து இலவசம், காலை உணவு, இல்லம் தேடி கல்வி, கல்லூரி பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பது என்று பல விஷயங்கள் அரசுக்கு பெருமை தேடி கொடுத்து உள்ளது.
ஸ்டாலினின் பர்சனல் இமேஜ் இதனால் உயர்ந்து உள்ளது. இந்த நிலையில்தான் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். திமுக பைல்ஸ் என்று அவர் விவரங்களை வெளியிட்டார். மெட்ரோ பணிகளில் முதல்வர் ஸ்டாலின் முறைகேடு செய்துவிட்டதாக கூறி உள்ளார். இது எல்லாம் அரசுக்கு கொஞ்சம் விமர்சனம்.
கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அமைச்சர் பிடிஆர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வருவாய் பற்றாக்குறையை போக்கி இருக்கிறார். பிடிஆர் ஒரு அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மற்ற பல அமைச்சர்கள் இருக்கிற இடமே தெரியவில்லை. அமைச்சர்கள் பலர் இருக்கிற இடமே தெரியாமல் உள்ளது. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் உள்ளது. கயல்விழி மீது கடுமையான புகார்கள் உள்ளன.
அமைச்சர் ஆவடி நாசர் மீது கடுமையான புகார்கள் உள்ளன. அதேபோல் அமைச்சர் பொன்முடி மக்களை நடத்தும் விதம் மோசமாக உள்ளது. அவர் மக்களிடம் பேச தெரியாமல் பேசி வருகிறார். அதனால் அவர் மீது அதிருப்தி உள்ளது. இன்னும் சில அமைச்சர்கள் மீதும் புகார்கள் உள்ளன.
இதில் சிலர் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். சில சீனியர் அமைச்சர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. முக்கியமாக துரைமுருகன் அமைச்சரவை சரியாக செயல்படவில்லை. ஆனாலும் சீனியர் என்பதால் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே என் நேரு போன்றவர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். அதனால் அவர்களை மாற்ற மாட்டார்கள். கயல்விழியை தூக்கிவிட்டு தமிழரசியை மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.
அமைச்சர்கள் செயல்பட வேண்டும். செயல்பாட்டின் அடிப்படையில் அமைச்சர்கள் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். 2 வருடத்தில் ஜெயலலிதா எல்லாம் 30 முறை கூட மந்திரிகளை மாற்றி இருக்கிறார். அப்படி மாற்ற வேண்டியது இல்லை. ஆனால் கொஞ்சம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும்.
திமுகவில் சில நல்ல இளைஞர்கள் இருக்கிறார்கள். டிஆர் பி ராஜா, காஞ்சிபுரத்தில் எழிலரசன் இருக்கிறார். இது போன்ற இளைஞர்களை அமைச்சரவைக்குள் கொண்டு வர வேண்டும். இவர்களை உள்ளே கொண்டு வர ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார். அடுத்த 1 வாரத்திற்குள் இந்த மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன் இந்த மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications