நார்த் இந்தியன்ஸ் கொரோனாவை பரப்புறாங்களா? மா.சு கருத்து.. கொதித்த வடஇந்தியர்கள்.. சீறிய உபி அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பது பற்றி அமைச்சர் மா சுப்பிரமணியம் அளித்த பேட்டிக்கு உத்தர பிரதேச பாஜக அமைச்சர் ஜிதின் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் ஐஐடி, அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை விஐடி கொரோனா கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இங்கு மட்டும் 163 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,474 ஆக அதிகரித்துள்ளது.

சுப்பிரமணியம் பேட்டி
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பேட்டி அளித்தார். அதில், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாக உள்ளது. இறப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக ஐஐடி, அண்ணா பல்கலை, சக்தி சாய் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து கூடி வருகிறது. அதற்கான காரணம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

வடஇந்தியர்கள் '
குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. அப்படி இருக்கும் போது வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கு வரும் போது, அவர்களின் மூலம் ஒட்டுமொத்தமாக தொற்று பரவ தொடங்கி உள்ளது. இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்தோம். கொரோனா தொற்று பற்றி ஆய்வு செய்ய நேற்று விஐடி கல்லூரிக்கு சென்றோம்.

மாணவர்களுக்கு அறிவுரை
அங்கு உள்ள மாணவர்கள் எல்லோருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்தோம். அவர்கள் எல்லோரும் கவனமாக கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால் ஏஎன்ஐ உள்ளிட்ட ஊடகங்களில் இவரின் பேச்சை மொழி பெயர்க்கும் போது.. வடஇந்திய மாணவர்கள் தமிழ்நாட்டில் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று பழி சொல்லும் விதமாக செய்தி தவறாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

வடஇந்தியர்கள் கொதிப்பு
இந்த நிலையில் வடஇந்தியர்கள் பலர்.. தமிழ்நாடு அமைச்சர் தங்களை அவமானப்படுத்திவிட்டதாக தவறாக கருதிக்கொண்டு, விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். தமிழ்நாடு அமைச்சர் இப்படி பேசி இருக்க கூடாது. இது தவறான கருத்து. அவர் தனது கருத்தை வாபஸ் வாங்க வேண்டும். வடஇந்தியர்களை அவமானப்படுத்துவது போல இது இருக்கிறது என்று வடஇந்திய நெட்டிசன்கள் பலர் இந்த செய்திக்கு கீழ் கோபமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கோபம்
உத்தர பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் ஜிதின் பிரசாத் தமிழ்நாடு அமைச்சரின் கருத்தை தவறாக புரிந்து கொண்டு கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். அதில்,நோய்கள், பெருந்தொற்றுகளுக்கு மாநில எல்லைகள், நாடு எல்லைகள் போன்ற விஷயங்கள் எல்லாம் தெரியாது. தமிழ்நாடு அமைச்சர் சொல்லி இருப்பது, மிகவும் பொறுப்பற்ற, இகழ்ச்சியான கருத்து. வடஇந்தியர்களை அவமதிக்கும் வகையில் அவர் பேசி உள்ளார் என்று விமர்சனம் வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications