Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் அனுமதியா? காவல்துறை தந்த விளக்கம்.. ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயிலின் உக்கிரம் தணிக்க மெரினா கடற்கரை வரும் மக்களை நேர கட்டுப்பாட்டு இன்றி அனுமதித்தால்
சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது என காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்ததோடு, மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டது.

சென்னை மெரினா கடற்கரைக்கு காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் அதிகமான மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் இரவு 10 மணிக்கு பிறகு மெரினா கடற்கரையில் இருக்கும் மக்களை போலீசார் அப்புறப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

chennai marina beach police tamil nadu high court

இரவு நேரத்தில் மெரினா கடற்கரையில் நடக்கும் தவறுகளை தடுக்கவே போலீசார் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாக சொல்வது உண்டு. இந்நிலையில் தான் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கோடை வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பம் தணிக்க மக்கள் மெரினா கடற்கரைக்கு வருகின்றனர். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக்கூடாது எனக்கூறி காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துகின்றனர்.

கான்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில் உயர்ந்த கட்டிடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தென்றல் காற்று நகருக்குள் வீச முடியாத நிலை இருக்கிறது. மக்கள் காற்று வாங்க மெரினா கடற்கரைக்கு செல்கின்றனர்.
கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால் கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேலும் அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறையினருக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவல்துறை தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியராஜ், ‛‛இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 54 பேர் மெரினா கடற்கரையில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இரவு நேரங்களில் கடற்கரை வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நேர கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்க முடியாது'' என தெரிவித்தார்.

மேலும் ‛‛கடல் ஆமைகள் இரவு நேரங்களில் கடற்கரைக்கு வரும். இதனால் அவற்றிக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் சென்னை மாநகர காவல் சட்டம் 41 படி பொது இடங்களில் கூடுவதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தற்போது கோடை காலம் நிறைவடைந்து விட்டது நிலையில் இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+