நான் பார்த்து வளர்த்துவிட்டேனே! கோபத்தில் உதயகுமார்! ஓபிஎஸ்ஸை உலுக்க போகும் "அந்த" வீடியோ.. ரிலீஸ்?
சென்னை: எம்எல்ஏ ஐயப்பனை இழுத்துகொண்ட உற்சாகத்தில் இருக்கும் ஓபிஎஸ்சை தாக்கி, வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறார் ஆர்.பி.உதயக்குமார் என்கிறார்கள் அதிமுக மேலிட தொடர்பாளர்கள்.
அதிமுகவில் அடுத்தடுத்து ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன், ஓபிஎஸ் அணிக்குத் தாவியிருக்கிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வென்றதில் இருந்தே அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. பொதுக்குழு வழக்கில் மேல்முறையீட்டு மனுவில் ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெறுவார் என்று அவர் தரப்பு நம்புகிறது.
இதை பயன்படுத்தி எடப்பாடி தரப்பில் உள்ள ஆட்களை ஓ பன்னீர்செல்வம் தரப்பு கொக்கி போட்டு தூக்கி வருகிறது.

ஆர்.பி உதயகுமார்
ஐயப்பன் ஆர்பி உதயகுமாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆர்.பி உதயகுமார் எங்கே சென்றாலும் அங்கே ஐயப்பன் செல்வதும் வழக்கம். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆர். பி உதயகுமார் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஐயப்பன் சென்று வந்தார். ஏன் இவர்கள் இருவரின் சிபாரிசுகள்தான் தென் மண்டலத்தில் எடுப்பட்டது. மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவை விட சமயங்களில் ஐயப்பன் குரலுக்கு அதிக மதிப்பு இருந்தது .

எடப்பாடி
காரணம் ஆர் .பி உதயகுமார். எடப்பாடி பழனிசாமியும் கூட ஐயப்பனை அதிகம் நம்பினார். ஓ பன்னீர்செல்வம் அவ்வப்போது எடப்பாடியுடன் மனஸ்தாபம் ஏற்படும் போதெல்லாம் ஐயப்பன் மற்றும் ஆர்.பி உதயகுமார் ஆகியோர்தான் தேனி சென்று ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்வார்கள். ஒற்றை தலைமை விவாதம் எழுந்த போதும் கூட ஐயப்பன் எடப்பாடி பழனிசாமி சார்பாக அவ்வப்போது ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து சமாதானம் பேசி வந்தார்.

ஐயப்பன்
இந்த நிலையில்தான் ஐயப்பன் திடீரென ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு சென்றுள்ளார். இவர் இப்படி அணி மாறியதை எடப்பாடி மற்றும் ஆர்.பி உதயகுமார் தரப்பு சுத்தமாக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. நான் பார்த்து அவரை வளர்த்துவிட்டேனே.. என்று ஆர்பி உதயகுமார் கோபத்தில் இருக்கிறாராம். ஓபிஎஸ் இல்லை, தென் மண்டலத்தை மொத்தமாக கட்டுப்படுத்தலாம் என்று நினைத்த ஆர்.பி உதயகுமாருக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக வந்து சேர்ந்து உள்ளது. இதன் காரணமாக அவரின் கேம்ப் மொத்தமும் கொஞ்சம் கடுப்பில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தாக்குதல்
இதனால் ஐயப்பனை இழுத்துகொண்ட உற்சாகத்தில் இருக்கும் ஓபிஎஸ்சை தாக்கி, வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறார் ஆர்.பி.உதயக்குமார் என்கிறார்கள் அதிமுக மேலிட தொடர்பாளர்கள். ஓபிஎஸ் பற்றிய சில உண்மைகளை வெளிப்படுத்தும் வீடியோவாக இது இருக்கும் என்கிறார்கள். அதோடு ஐயப்பனை விமர்சனம் செய்யும் வகையிலும் இந்த வீடியோ இருக்கும் என்று ஆர்.பி உதயகுமார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அதிமுகவில் ஓபிஎஸ் தர்ப்பை உலுக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications