செந்தில் பாலாஜி ரெய்டு.. "இது எனக்கே வைத்த குறி".. ஸ்டாலின் சொன்னது என்ன? அமைச்சர் பதவியில் மாற்றமா?
சென்னை: அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என சீனியர் மந்திரிகள் போர்க்கொடி உயர்த்தவிருக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்றாக.. நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக இந்த ரெய்டுகள் பார்க்கப்படுகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
இப்போதும் கூட கிட்டத்தட்ட 200 இடங்களில் ரெய்டு நடக்கிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
5 நாட்களாக நடந்த சோதனை நேற்றுதான் நிறைவு பெற்றது. இந்த ரெய்டு தொடர்பாக முக்கியமான விவரங்களை விரைவில் வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய அரசின் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனை, திமுகவை நிலைகுலைய வைத்திருக்கிறது.
வெளிநாடு சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், சென்னை திரும்பியதும் அவரை சந்தித்து முறையிட காத்திருக்கிறார்கள் சீனியர் மந்திரிகள். முதல்வருக்கு முக மிக்கியமானவரான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய அரசு குறி வைத்திருப்பதை, தன்னையே குறி வைத்தது போல நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால் வெளிநாட்டில் இருந்த போதும் அவரால் அங்கு நிம்மதியாக உறங்க முடியவில்லை.
பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பலாமா என்று கூட அவர் யோசித்ததாக திமுகவில் சொல்லப்பட்டது. ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தடுத்ததால், திட்டமிட்டபடி பயணத்தை முடித்துவிட்டு 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்.
அமைச்சர்கள் ஆலோசனை: சென்னை வந்ததும் கலைஞரின் நூற்றாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தவிருக்கிறார் ஸ்டாலின். நூற்றாண்டுக்கான ஆலோசனை என்றாலும் அதில் முழுக்க முழுக்க, ரெய்டு குறித்தே விவாதிக்கப்படவிருக்கிறது.
அந்த விவாதத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக வாள் சுழற்ற சீனியர் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, டாஸ்மாக் இலாகாவை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என சீனியர்கள் வலியுறுத்தவிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஸ்டாலினிடம், போக்குவரத்துத்துறை அமைச்சராக கண்ணப்பன் இருந்த போது, அவரது துறையின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அதை வைத்து அவரது அமைச்சர் பதவியை மாற்றினீர்கள்.
அமைச்சர் பி.டி.ஆருக்கு எதிரான ஆடியோ விவகாரத்தில் அவரது இலாகாவும் மாற்றப்பட்டது. ஆவடி நாசருக்கு எதிராக புகார்கள் வந்ததும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினீர்கள். தற்போது, டாஸ்மாக்கை மையமாக வைத்து நான்கு நாட்கள் தொடர் ரெய்டு நடந்திருக்கிறது. அதனால், கட்சி, ஆட்சி இரண்டின் இமேஜும் விமர்சிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய, குறைந்த பட்சம் டாஸ்மாக் அமைச்சரிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குங்கள் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தவிருக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள்.
இந்த நிலையில், இதனையறிந்து, அதனை தடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலினிடம் விரிவாக விளக்கம் தரவிருக்கிறார் செந்தில் பாலாஜி. என்ன முடிவு எடுக்கப்போகிறார் முதல்வர் ? என்பது மில்லியன் டாலர் கேள்வி !
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications