ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறதா? தமிழக அரசுக்கு ரயில்வே கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ரயில் நிலையங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், மது அருந்துவோர் ரயில்வே விதிமுறைகளை மீறி செயல்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாக தமிழக அரசுக்கு ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள 52 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பேருந்து நிலையத்தின் வாசலிலேயே டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான பார்கள் அதிக அளவில் இருக்கின்றன. பேருந்துகளில் செல்லும் குடிமகன்கள் சும்மா போவது இல்லை.. பேருந்தில் ஏறும் போதே, மதுபானம் அருந்திவிட்டு தான் ஏறுகிறார்கள். அதனால் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் தகராறு ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான பார்களை அகற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது.

Are TASMAC shops near railway stations being closed Railways writes to the TN government

ஆனால் இன்று வரை பல கடைகள் அகற்றப்படாமல் உள்ளது. அதனை டெண்டர் எடுத்தவர்கள் காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு காரணம் என்றால், வருவாய் குறையும் என்ற அரசின் பயமும் ஒரு காரணமாக குற்றம்சாட்டப்படுகிறது. பேருந்து நிலையம் என்று இல்லை.. ரயில் நிலையங்களை ஒட்டியும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் அதிக அளவில் உள்ளன.

தமிழகத்தில் முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதி காணப்படும். அந்தநேரத்தில் ரயில் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, பயணிகளுக்கு இடையூறு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடைபெறுவது அதிகமாக உள்ளது. இதற்கு மதுபானம் அருந்துவிட்டு செல்லும் குடிமகன்கள் சிலர் காரணமாக இருக்கிறார்கள்.

ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட ஆய்வில் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளால் இந்த வகை குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆய்வில், ரயில் நிலையங்களில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்தது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே மண்டல பாதுகாப்பு பிரிவின் கமிஷனர் சார்பில் டாஸ்மாக் இயக்குநருக்கு கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில் 'ரயில் நிலையங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், மது அருந்துவோர் ரயில்வே விதிமுறைகளை மீறி செயல்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து ரயில் நிலையங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. இக்கணக்கெடுப்பின்படி தெற்கு ரயில்வே மண்டலத்திலுள்ள 6 ரயில்வே கோட்டங்களில் மொத்தம் 159 டாஸ்மாக்கடைகளை அகற்றவேண்டும் என கண்டறியப்பட்டது. இதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில், சென்னை கோட்டத்தில் 39 ரயில் நிலையங்களுக்கு அருகில் 52 டாஸ்மாக் கடைகள் இருககிறது. அவற்றை அகற்ற வேண்டும். குறிப்பாக, வியாசர்பாடி, அம்பத்தூர், குரோம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, காட்பாடி, தரமணி, செங்கல்பட்டு, ஆவடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு அருகே தலா ஒரு டாஸ்மாக் கடைகளும், பெரம்பூர், அரக்கோணத்தில் தலா 3 கடைகளும், கொருக்குப்பேட்டையில் 2 என டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வேண்டும் என்று தெற்கு ரயில்வே மண்டல பாதுகாப்பு பிரிவின் கமிஷனர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+