Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"க்ளீன் போல்ட்".. அதிமுக + பாமக + தேமுதிக + காங் + அந்த 2 கட்சியும்.. எடப்பாடிக்கு திமுக உதவி?: பா.கி

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வியூகம் குறித்து பா.கி. கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக அல்லாத கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைக்க நேர்ந்தால், நிச்சயம் அது உதவும் என்றும், திமுக அரசு மீதான அதிருப்தியும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பா.கி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பேசியிருந்தார்.

இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று கூறியிருந்தார்.

குஷி

குஷி

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, மூத்த பத்திரிகையாளர் பா.கி. நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் வெளிப்படுத்தி உள்ள கருத்துக்கள்தான் இவை:

 2 சம்பவம்

2 சம்பவம்

"எடப்பாடி பேசியதை, பாஜகவின் எதிர்ப்பு நிலை என்று சொல்ல முடியாது.. பாஜகவின் அழுத்தத்திற்கு இரையாகாத நிலை என்று வேண்டுமானால் சொல்லலாம்.. காரணம், கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே இந்த எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்துவிட்டார்.. ஆனால் அப்போது மிகவும் மென்மையாகவே தன்னுடைய உறுதியை காட்டினார்.. அந்த சமயத்தில், தேர்தலின்போது, தமிழக பாஜகவுக்கு 60 சீட் வேண்டும் என்று கேட்டார்கள்.. அதேபோல பாஜக சொல்லும் நபர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லி கொண்டே இருந்தார்கள்..

 லாஸ்ட் மினிட்

லாஸ்ட் மினிட்

ஆனால், அதுக்கெல்லாம் பதிலே பேசாத, எடப்பாடி பழனிசாமி, கடைசி நேரத்தில் 20 சீட்டை மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கி தந்துவிட்டு, தன் செயலில் தன் நிலைப்பாட்டை காட்டிவிட்டார்.. அதேபோல, தேர்தல் சமயத்தில் சென்னை வந்திருந்த அமித்ஷா, சசிகலா, மற்றும் தினகரனுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்படி சொன்னபோதும்கூட, அதற்கும் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்துவிட்டு, வெளியே வந்த எடப்பாடி, தன்னுடைய உறுதிப்பாட்டை காட்டினார்.. "எந்த காலத்திலும், சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை" என்று திட்டவட்டமாக அறிவித்து தன்னுடைய நிலைப்பாட்டை மறுபடியும் நிரூபித்தார்.

 டரியல் ப்ளான்

டரியல் ப்ளான்

ஆனால், பாஜகவை எதிர்க்கவில்லை.. இப்போதும்கூட அவர் பாஜகவை எதிர்க்கவில்லை, ஆனால், அமித்ஷாவை சந்திக்க அவசியம் இல்லை என்று சொல்லி, மேலும் தன்னுடைய உறுதிப்பாட்டை காட்டி உள்ளார்.. இதுக்கு காரணம், சமீபகாலமாக கட்சி பிளவுபட்டுள்ளதும், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பாஜக இருப்பதும்தான்.. மெஜாரிட்டி ஆதரவாளர்கள் தன்பக்கம் இருப்பதாலும், தமிழக சட்டசபையில் பெரும்பாலான பலம் தனக்கு உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தலில் 3 பேர் தன் சார்பாக இருப்பதாலும், எடப்பாடி தன் ஆளுமையை பதிவு செய்ய முனைகிறார்.. தன் நிலைமையை இப்படி பேசி, உறுதிபடுத்தி கொள்கிறார்.. அதற்கான அறிகுறியாகத்தான் அமித்ஷா சந்திப்பு குறித்து பேசியதை பார்க்கிறேன்.

 லேசில் விடாது

லேசில் விடாது

அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸுடன் சேர்த்து ஏர்போர்ட்டில் நிற்க வைத்துவிட்ட கோபத்தையும், இப்படி மறைமுகமாக காட்டி உள்ளார்.. கடந்த முறை சட்டசபை தேர்தலின் தோல்விக்கு காரணமே பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் எடப்பாடி தலைமையிலான அணியினர் கருதுகிறார்கள்.. அதனால் தனித்து நிற்போம் என்ற நிலைப்பாட்டை உள்ளாட்சி தேர்தலிலேயே எடப்பாடி தரப்பில் எடுத்து விட்டார்கள்.. கூட்டணி என்பது அப்போதே பிரிந்துவிட்டது... அதிமுக தோல்விக்கு காரணம் என்ன என்றும் எல்லாரும் அதிமுகவில் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள்.. இருந்தபோதிலும், பாஜக லேசில் விடாது.. டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் எல்லாரையும் ஒன்று சேர்க்க கடைசிவரை முயற்சிப்பார்கள்..

 டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

மெகா கூட்டணி என்று எடப்பாடி சொல்லி உள்ளதும் ஒரு கணக்குதான்.. கடந்த சட்டமன்ற தேர்தலில், பாமகவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய நிலைமையை உருவாக்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், தற்காலிக நிலைப்பாடு என்று சொல்லி, அதற்கு எதிரான மாற்று கருத்து சொல்லி குழப்பியவர் ஓபிஎஸ்.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று பாமக முடிவெடுக்கும்.. விசிக திமுக கூட்டணியில் இருக்குமா? இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால், கம்யூனிஸ்ட்கள், சில வருத்தங்களில் திமுகவில் இருப்பதாக தெரியவருகிறது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

காங்கிரஸ் கட்சியின் கேஎஸ் அழகிரி, திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்பார்.. ஆனால், அந்த அளவுக்கு திமுகவில் தருவார்களா தெரியவில்லை.. எனவே, அதிமுக தலைமையிலான பாமக + தேமுதிக + கம்யூனிஸ்ட்கள் + காங்கிரஸ் என பாஜக நீங்கலாக கூட்டணி உருவானால், தமிழக மக்கள் ஆதரவு தர வாய்ப்பு உள்ளது.. அதேசமயம், திமுக அரசு மீதான அதிருப்திகளை, இந்த கூட்டணி பயன்படுத்தி கொள்ளவும் முன்வரும்.. அது வெற்றியையும் கொடுக்கும்.. ஆனால், பாஜக 3வது அணி அமைத்தால், அது நிச்சயம் சரிவராது.. எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு வாய்ப்பு என்பது கொஞ்சமும் இல்லை..

கலைஞர்

கலைஞர்

எடப்பாடிக்கு உதவ போவதே திமுக அரசு மீதான அதிருப்திகள்தான்.. இப்படித்தான் கலைஞர் இருந்தபோது, திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி வந்தது.. காமராஜர் அப்போது உயிருடன் இருந்தார்.. ஆனால், காங்கிரஸ் பக்கம் போக வேண்டிய வாக்குகள் எல்லாம் அதிமுக பக்கம் போய்விட்டது.. அதேபோல, எத்தனையோ முறை தமிழகத்துக்கு ராஜீவ் காந்தி வந்து சென்றார்.. சட்டசபை தேர்தலையொட்டி வாக்குகளையும் சேகரித்தார்.. ஆனாலும், அதிமுகவுக்குதான் வாக்குகளை அப்போது பெற்றது. அந்தவகையில், எதுவும் அரசியலில் நடக்கலாம் என்ற நியதி உள்ளதால், திமுகவின் அதிருப்தி வாக்குகள், எடப்பாடி தலைமையிலான கூட்டணிக்கு உதவலாம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+