"சாயும்" பாஜக?.. சூழல் நல்லா இருக்கு.. எடப்பாடிதான் சரி.. ஆனாலும்.. குண்டை தூக்கி போட்ட சி.டி. ரவி
எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் மோதல் குறித்து சிடி ரவி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இரு தரப்பினரிடையே மோதல்கள் வலுத்து வரும் நிலையில், யாருக்கு தங்கள் ஆதரவு என்று பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடியே எடப்பாடி அதிமுகவை கைப்பற்றிவிட்டார் என்றபோதிலும், ஓபிஎஸ் மூலம் அடுத்தடுத்த நாட்களில் குடைச்சல் வந்தால் என்ன செய்வது என்ற கலக்கமும் இருந்து வருகிறது.
ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டு விட்டால் சிக்கலாகும் என்பதையும் எடப்பாடி அறியாமல் இல்லை..

தலைவலி
மற்றொருபக்கம், எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததார்கள் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் வருமான வரி சோதனைகள், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிபிஐ கோரிய அனுமதி உள்ளிட்டவைகள் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.. எனவே, டெல்லி சென்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சி விவகாரங்கள் தொடர்பாக பேச திட்டமிட்டு இருந்தார்.

தாமரைகள்
ஆனால் 5 நாட்கள் பயண திட்டத்தை வெறும் 2 நாட்களில் முடித்துக்கொண்டு திரும்பி விட்டார் எடப்பாடி.. பாஜகவை பொறுத்தவரை, அதிமுகவில் பிளவு என்பதை எப்போதுமே ஏற்கவில்லை.. கட்சி ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே, அதிமுகவின் ஓட்டு வங்கியை அள்ள முடியும் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளது.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இருந்து 15 தாமரைகள் மலர வேண்டும் என்று டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன..

அமித்ஷா
மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று ஹைதராபாத்தில் அமித்ஷாவும் வெளிப்படையாகவே உறுதி தெரிவித்துள்ளார்.. எனவே, அதிமுக மேலிட தலைவர்களை இணைத்து வைக்கவே பாஜக விரும்புவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. அதனால்தான், திரௌபதி முர்மு, ஆதரவு கேட்டு சென்னை வந்தபோதே, ஓபிஎஸ் - எடப்பாடி இருவரையும் பாஜக மேலிடம் அல்லது தமிழக பாஜக சீனியர் தலைவர்கள் சேர்த்து வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது..

எடப்பாடி பழனிசாமி
அப்போது, ஓபிஎஸ், எடப்பாடி தனித்தனியாக மேடையேறி வந்து திரௌபதிக்கு ஆதரவு தந்துவிட்டு போனார்கள்.. இப்போது கட்சி பிளவுபடும் அளவுக்கு வந்துவிட்டதால், இவர்களை ஒன்றுசேர்த்து வைக்க மேலிடம் முயன்றுள்ளது. எனினும், பாஜகவின் இந்த சமரச பேச்சை விரும்பாததால் மோடி, அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பி விட்டார். இப்படிப்பட்ட சூழலில், பாஜக இது பற்றி கருத்து சொல்லி உள்ளது.. அகில இந்திய பாஜக செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி சொன்னதாவது:

திராவிடம்
"தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது...எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமல்ல, அதில் உள்ள ஒவ்வொருவரிடமும் நல்ல நட்புடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்..
அதிமுகவில் இப்போது உள்கட்சி பிரச்சினை நடந்து வருகிறது.. கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், ஓபிஎஸ் துணை முதல்வராகவும் அதிகாரம் மிகுந்த 2வது தலைவராகவும் இருந்தார்..

இந்துத்துவா
தொடர்ந்து அந்த கட்சியை யார் தலைமை தாங்கி வழி நடத்தினாலும் அவர்களுடன் எங்கள் நட்பு தொடரும். கடந்த 50 வருடங்களாகவே, 2 திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.. இப்போது, பாஜகவை பொறுத்தவரை, திராவிடத்தில் அடங்கிய இந்துத்துவா, தேசிய சிந்தனை, தமிழின் பெருமை, வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்து வருகின்றன.. மக்களும் இதைதான் விரும்புகிறார்கள்...

ஸ்ட்டிராங் கட்சி
தமிழகத்தின் இன்றைக்கு நடக்கும் அரசியல் சூழ்நிலையை பார்த்தால், அது பாஜக வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் திமுக பலமடையும்... பாஜகவுக்கு ஆளும் திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்து இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. எப்படி பார்த்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் செயல்பாடுகளால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்" என்றார் ரவி.

எடப்பாடி அறிக்கை
எடப்பாடியை பொறுத்தவரை ஓபிஎஸ் அளவுக்கு, பாஜகவிடம் பணிந்து போகாதவர் என்ற பேச்சு உள்ளது.. இதுபோக, பாஜகவை சில சமயங்களில் காட்டமாகவும் எதிர்த்து விடுகிறார்.. பாஜகவை விமர்சிப்பது, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டிப்பது, என பாஜக மேலிடத்தை சீண்டும் அளவுக்கு நடந்து வருவதும், டெல்லிக்கு எரிச்சலையே தந்ததாக சொல்லப்பட்டது.. இதுபோக, ஓபிஎஸ் மகன்கள், தலைவர்களிடம் எடப்பாடி பற்றி புகார்களை தொடர்ந்து வாசித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.. இவ்வளவு இருந்தும், சி.டி.ரவி, எடப்பாடிக்கு ஆதரவாக பேசியுள்ளதும், புகழ்ந்துள்ளதும், அரசியல் களத்தில் சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications