Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமா "குத்திய" ஆளுநர்.. ஆரம்பிச்சதே திமுகதானே.. பேசாமல் ஆட்சியை கலையுங்களேன்.. கோடீஸ்வரன் நறுக்

ஆளுநர் ரவி, திமுக இரு தரப்பிலுமே தவறுகள் உள்ளது என்கிறார் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக Vs பாஜக, அல்லது திமுக Vs அதிமுக என்றே அரசியல் களம் இருக்க வேண்டும்.. இதுதான் ஜனநாயகம். ஆனால், திமுக Vs கவர்னர் என்று மட்டும் சண்டை இருக்கவே கூடாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்.

அரசு தயாரித்த அறிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் வாசிக்காததும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டன உரையின்போது ஆளுநர் அவையை விட்டு திடீரென வெளியேறியதும், இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக டிடிவி தினகரன், போன்றோரும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.. இதில் டிடிவி தினகரன் கண்டனமானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது..

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

காரணம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த அதேசமயம், திமுக அரசின் மீதான தவறையும் சுட்டிக்காட்டியிருந்தார்.. அதாவது 2 தரப்பையுமே தினகரன் விமர்சித்திருந்தார். அதேபோல, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை தர முடியாமல், நடந்த சம்பவங்கள் நெருடலாக பார்க்கப்பட்டு, பாஜக தரப்பிலும் பேட்டிகள் தரப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டியை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், திமுக - ஆளுநர் என இரு தரப்பையுமே விமர்சித்து பேசியுள்ளார். கோடீஸ்வரன் நமக்கு தந்த பேட்டியின் சுருக்கம்தான் இது:

 ரப்பர் ஸ்டாம்ப்

ரப்பர் ஸ்டாம்ப்

"சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் சட்டசபைக்கு உள்ளே இருக்கிறது.. ஆனால், சுப்ரீம்கோர்ட்டே ஆளுநர் விவகாரத்திலும், தேர்தல் ஆணையம் விவகாரத்திலும் தலையிடாது. ஏனென்றால் இது ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் யாருக்கு என்ன கடமை இருக்கிறதோ, அந்த கடமையுடன் நிறுத்தி கொள்வதுதான் ஜனநாயகத்தக்கு அழகு. சட்டசபை நிகழ்வில் இதை தொடர்புபடுத்தி பார்த்தால், அரசு கொடுப்பதை, வாங்கி படிப்பதுதான் ஆளுநரின் வேலை. ஆனால் ஆளுநர் மாற்றி படித்துவிட்டார். அப்படியானால், ஆளுநர் உரையை, ராஜ்பவனிலேயே உட்கார்ந்து தயார் செய்ய வேண்டியதுதானே?

 வழக்காடு மொழி

வழக்காடு மொழி

எதுக்காக இத்தனை வருடங்களாக, மாநில அரசுக்கு விவரங்களை தந்து, அறிக்கையாக தயார் செய்ய சொல்ல வேண்டும்? பேருக்குதான் அது ஆளுநர் உரை. அது ஆளுநருக்கு கொடுக்ககூடிய ஒரு மரியாதை. அவ்வளவுதான் அந்த மரியாதையை பாதுகாப்பதும், பேணி காப்பதும் ராஜ்பவனின் கடமை. உங்க இஷ்டத்துக்கு மாத்தி படிச்சிட்டீங்க, அவங்க நீங்க பேசினது செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு அதான் பொருள். இதெல்லாம் யாருக்கு தெரியுமா நடக்கும்? சட்டசபையில் அநாகரீகமான சொல், உண்மைக்கு புறம்பான சொல், கேலி பேசுவது, பிரிவினைவாதம், வழக்காடு மொழியிலேயே இல்லாத சொற்கள், இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தினால் மட்டுமே அவைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். அல்லது குற்றச்சாட்டு வைத்தால் அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்.

 கோவம் ஜெயலலிதா

கோவம் ஜெயலலிதா

ஆனால் முதல்முறையாக, ஆளுநர் பேசியதையே அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஒரு கவர்னருக்கு இதெல்லாம் தேவையா? அடுத்து வெளிநடப்பு வேற. சும்மா இருந்த முதலமைச்சரை நீங்கதானே தூண்டி விட்டீங்க. அம்மையார் ஜெயலலிதா அளவுக்கு, யாரையும் எதிர்க்கும் கோபம் கொண்ட மனிதராக முதல்வர் ஸ்டாலின் கிடையாது. அம்மையார் ஜெயலலிதா இருந்திருந்தால், இந்நேரம், இந்த கதையே வேற மாதிரி ஆகியிருக்கும். திமுக கொடுத்த அறிக்கையை, ஆளுநர் படிச்சிட்டு போயிருந்தால் பிரச்சனையே கிடையாது. ஒட்டி, பிரித்து நீங்க அதை மாற்றும்போது, அவங்க மொத்தமா அந்த பேச்சை தூக்கிட்டாங்க.

 செயின் அறுப்பு

செயின் அறுப்பு

சட்டம் ஒழுங்கு சரியில்லாத வார்த்தையை ஆளுநர் மாற்றி படித்தது எப்படி சரியாகும்? ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரிஇல்லை என்றால், தினமும் குண்டுவெடிப்பு நடப்பதாக அர்த்தம்.. அல்லது தினமும் கொலை, கொள்ளை பலாத்காரம் நடப்பதாக அர்த்தம். அல்லது டெல்லியில் நடந்ததுபோல், ஜம்மு காஷ்மீரில் நடப்பதுபோல விஷயங்கள் நடந்தால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லலாம்.. 2 விஷயங்களாக சட்டம் ஒழுங்கை பார்க்க வேண்டும். செயின் அறுத்துட்டு ஓடுவது, திருடுவது இதெல்லாம் இருக்கத்தான் செய்யுது. ஆனால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால், அதுக்கு முதல் காரணமே கவர்னர்தான்..

 ஏமாத்துற வேலை

ஏமாத்துற வேலை

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால், ஆட்சியை கலையுங்களேன்.. சும்மா வாய் சொல்லில் ஏமாற்றக்கூடாது. உண்மையிலேயே சத்தியப்பூர்வமாக, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால், கவர்னரின் தலையாய கடமை ஆட்சியை கலைப்பதுதான். அதை செய்ய உங்களுக்கு துணிவு, திராணி, சட்டத்தில் இடமிருக்கு என்றால் அதை முதலில் செய்யுங்கள். யாரை ஏமாத்தற வேலை இது? ஊழல் இருக்குன்னு சொல்வீங்க, ஆனால் ஊழலை எதிர்த்து யாரையுமே தண்டிக்க மாட்டீங்க.. கவர்னரை தேர்ந்தெடுத்தது பாஜக அரசு. இவரும் பாஜகவுக்கு விசுவாசமாகவே இருக்கிறார். அதுக்காக அவர் செய்வதெல்லாம் நியாயம் என்று எடுத்து கொள்ள முடியாது.

 மாமியார் - மருமகள்

மாமியார் - மருமகள்

திமுக மீதும் பிரச்சனைகள் இருக்கு, திமுக மீது விமர்சனங்கள் இருக்கிறது என்றால், இந்த 2 வருடத்தில் பாஜக மட்டும் என்ன செய்துவிட்டது? இன்றும்கூட இன்றைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவங்க எல்லாம் இன்னைக்கு வலம் வர்றாங்களே, இதுக்கு பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது? அப்படியானால், பாஜகவின் வார்த்தை விளையாட்டுதான் எல்லாம்.. மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவது. ஆளுநர் - திமுக தரப்பு சண்டையை பார்த்தால், மாமியார் மருமகள் குடுமி சண்டை மாதிரி நடக்குது. நடக்கிறதையெல்லாம் பார்த்தால், நியாயமான நல்ல அரசியலாக எனக்கு தெரியவில்லை.

கிளிப்பிள்ளை

கிளிப்பிள்ளை

ஆளுநர் செய்தது மட்டுமே தவறு என்று சொல்லவில்லை. திமுக பக்கமும் சில பிரச்சனைகள் உள்ளது.. தமிழகம் என்று சொன்னால் என்ன? இவங்கதானே முதன்முதலில் வார்த்தையை விளையாட்டை வைத்து "ஒன்றியம்" என்று ஆரம்பித்தார்கள்? உடனே இவங்க "தமிழகம்" என்று ஆரம்பித்துவிட்டார்கள். ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார், உடனே பாரத் மாதா கி ஜே என்கிறார்கள். எதையாவது செய்து, அல்ப அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். வாதத்துக்கு வாதம் என்றால் இது நீண்டுகொண்டேதான் போகும். கீ கொடுத்தால் பொம்மை ஆடுமே, அதுமாதிரி மேல இருக்கிறவர்கள் சொல்படி நடக்கிறார் ஆளுநர். இது தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதுதான் நடக்குது. மேற்கு வங்கத்தில், கேரளாவில், பாண்டிச்சேரியில் என்ன நடந்தது?

 கலைஞரின் வாரிசு

கலைஞரின் வாரிசு

மாநிலங்களில் பாஜகவால் ஆள முடியவில்லை என்றால் புறவழியில், ஆளுநரை வைத்து அரசியல் செய்யும். ஆனால் ஆளுநரை வைத்து டிராமா தான் செய்ய முடியும். ஆளுநரை வைத்து, டெண்டரில் கையெழுத்துபோட்டு ஒரு பாலத்தை கட்ட முடியுமா? அதேபோல, திமுக சொல்வதை அப்படியே கிளிபிள்ளை மாதிரி ஆளுநர் சொல்ல வேண்டும் என்றில்லை.. சில விஷயங்களில் இவங்களும் விட்டுக்கொடுத்து போக வேண்டும். திராவிட மாடல், கலைஞர் வாரிசு, குடும்பம் என்றால் உங்களுக்குள்ளேயே பேசிக்குங்க. அதையெல்லாம் கவர்னர் சொல்லணுமா? ஏற்றுக்காள்ளாத கவர்னரிடம் திரும்ப திரும்ப திணித்தால் என்ன செய்வார்? வெட்டிவிட்டுதான் போவார்.

 திமுக Vs பாஜக

திமுக Vs பாஜக

ஆளுநர் தெளிவாக இருக்கிறார். இதுபோல ஏற்கனவே வடகிழக்கு மாநிலத்தில் பிரச்சனைகளை கையாண்டவர். அவருக்கு இது புதுசு கிடையாது. அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. போலீஸ் மாதிரிதான் சிந்திப்பார். அரசியல் நுணுக்கங்களையோ, அல்லது நம்மால் எந்த ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றெல்லாம் அவர் நினைக்க மாட்டார். ஐஏஎஸ் அதிகாரி சிந்திப்பதற்கும், ஐபிஎஸ் அதிகாரி சிந்திப்பதற்குமே வித்தியாசம் இருக்கும். தன்னுடைய நிலைப்பாட்டில் ஆளுநர் தெளிவாக இருக்கிறார். வெளிப்படையான மோதலுக்கும் தயாராகிவிட்டார். ஆனால், திமுக Vs கவர்னர் என்று சண்டை இருக்கவே கூடாது. திமுக Vs பாஜக, அல்லது திமுக Vs அதிமுக என்றே களம் இருக்க வேண்டும்.. இதுதான் ஜனநாயகம்.

குத்தணும்

குத்தணும்

ஜனாதிபதி என்பது ரப்பர் ஸ்டாம்ப், பிரதமர் சொன்னால் ஜனாதிபதி ஸ்டாம்ப் குத்தணும்.. முதல்வர் சொன்னால் ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் குத்தணும். ஆனால், நீங்க சொன்னால் குத்தமாட்டோம், எங்களின் முதலாளிகள் சொன்னால்தான் குத்துவோம் என்கிறார்கள். மசோதாக்களில் கையெழுத்து போடவில்லையானால், கையெழுத்து போட வைக்க அரசுதான் நடவடிக்கை எடுக்கணும்.. அதனால்தான் சொல்கிறேன், கட்சி ரீதியாக இவர்களுக்குள் சண்டை போட்டு கொள்ளட்டும். ஆனால், இந்த விஷயத்தில், குறுக்கே ஜனதிபதியோ, அல்லது கவர்னரோ அரசியல் செய்வது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கு உகந்ததும் கிடையாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+