Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டமார்".. அதிமுக + பாஜக உறவு உடையுதா? எடப்பாடி மீது சீறிய பாஜக லீடர்.. பின்னாடியே வந்த செங்கோட்டையன்

அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற கலக்கம் சூழ்ந்து காணப்படுகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ள நிலையில்.. மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறிவரும் நிலையில், அந்த கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. அத்துடன், அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பாஜக ஐடி விங் தலைவராக இருந்த, நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நேற்று இணைந்துள்ளார்... அத்துடன், இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றிவரும் அண்ணாமலையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அளிப்பதாகவும், '420 மலை' என்றும் கடுமையாக விமர்சித்துவிட்டு போயுள்ளார்..

சொந்த கூட்டணி கட்சி என்றும் பாராமல், பாஜகவுக்கே செக் வைத்து கிலியை கிளப்பி விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. நிர்மல்குமாரை தன்பக்கம் எடப்பாடி இழுப்பதன்மூலம், "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, பாஜகவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டு வருகிறது.

 20%

20%

அதேபோல, காயத்ரி ரகுராம் முதல் ஒவ்வொரு நிர்வாகியும் பாஜகவில் இருந்து விலகி வரும் சூழலில், இன்னொரு நிர்வாகியும் விலகியுள்ளதுடன், கடந்த 2019-ல் இருந்து பாஜகவின் கட்டமைப்பில், இப்போது 20% கூட இல்லை என்றும் நிர்மல்குமார் தெரிவித்துள்ளது, பாஜக சீனியர்களுக்கு கலக்கத்தை தந்துவந்தது.. இந்த அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.. மாநில தலைவர் பொறுப்பேற்றபோது 500 தலைவர்களை உருவாக்குவதாக சொன்ன, அண்ணாமலை இதுவரை எத்தனை பேரை உருவாக்கியுள்ளார்?

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

தன்னைத் தவிர வேறு யாருக்கும் மீடியா வெளிச்சம் வரக் கூடாது என பாஜகவினரை டிவி விவாதங்களுக்கு அனுப்புவதில்லை. தன்னை நேர்மையானவர் எனக் கூறிக் கொள்ளும் அண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார். பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு எந்த பொறுப்பும் அண்ணாமலை கொடுக்கவில்லை. பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனை அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு மனிதனாகக் கூட மதிப்பதில்லை. தான் வந்த பிறகு எல்லாம் செய்தது போல் அண்ணாமலை பேசுவதாகவும், சொந்தக் கட்சியில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களை வேவு பார்ப்பது அண்ணாமலையின் வேலை என்றும் புட்டு புட்டு வைத்துவிட்டு போயுள்ளார்..

 66,0000

66,0000

நேற்றும், இன்றும் அடுத்தடுத்த பாஜக நிர்வாகிகள், அண்ணாமலை மீதான புகார்களை அடுக்கவும், இதற்கு பதிலடி தந்துள்ளார், பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி,.. இவர் அண்ணாமலையின் நண்பருமாவார்.. கட்சிக்குள் பூசல்கள் கிளம்ப அதிமுகதான் காரணம் என்று சொல்லி, பாஜக தரப்பில் போர்க்கொடிகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.. கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது என்றும், 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது என்றும் அமர்பிரசாத் விமர்சித்துள்ளார்.

தாமரைகள்

தாமரைகள்

4 ஆண்டுகாலம் ஏமாற்று பேர்வழிகளாக வலம் வந்தவர்களின் கதைகள் எல்லாம் ஊரறிந்த கதை என்று எடப்பாடி பழனிசாமி குறித்து அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம் செய்துள்ளதையும் அதிமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. ஆனால், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர்பிரசாத், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்திருப்பதால் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா? என்ற என்ற கேள்வி எழுந்துள்ளது... இந்த முறை எப்படியும் 20 சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்றும் அதில் 10 தாமரைகளையாவது மலர வைத்துவிட வேண்டும் என்றும் பாஜக தரப்பு உறுதியாக இருந்து வருகிறது..

 தினகரன்

தினகரன்

இந்த ஒரு விஷயத்துக்காகவே இடைத்தேர்தல் விஷயத்தில் எடப்பாடி தரப்புக்கு வளைந்து கொடுத்து சென்றதாகவும், ஓபிஎஸ் + தினகரன் தரப்பு மூலமும் வழிவிட சொன்னதாகவும் தகவல்கள் கசிந்தன. எம்பி தேர்தலை மட்டுமே மனதில் வைத்து, அனைத்தையும் தமிழக பாஜக பொறுத்து கொண்டு செல்லும் நிலையில்தான், இடைத்தேர்தல் பணிமனை விவகாரம் வெடித்து கிளம்பியது.. பேனரில் பிரதமர் மோடி, அமித்ஷா, உட்பட பாஜக கூட்டணி கட்சிகளின் பெயர்கள் ஒன்று இல்லை என டெல்லி மேலிடத்துக்கும் புகார்கள் கிளம்பியது.. இதையும் தமிழக பாஜக பெரிதுபடுத்தவில்லை..

 கூட்டும் எரிச்சல்

கூட்டும் எரிச்சல்

பாஜக நிர்வாகிகள் இல்லாமலேயே பிரச்சாரங்களை எடப்பாடி தரப்பு மேற்கொண்டதுடன், அண்ணாமலை பிரச்சாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் எடப்பாடி அறிவிப்பு வெளியிட்டார்.. இதையும் தமிழக பாஜக பெரிதுபடுத்தவில்லை.. ஆனாலும், நேற்றைய தினம், நிர்மல்குமாரை எடப்பாடி அரவணைத்ததுதான் பாஜகவுக்கு எரிச்சலையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். நிர்மல் குமாரை கட்சியில் இணைந்துகொண்டது சரி இல்லை என்றும் வெளிப்படையாகவே எதிர்ப்பை இன்றைய தினம் பதிவு செய்துள்ளது.. ஆனால், அதிமுக தரப்பிலோ இதற்கு வேறுவகையான பதிலடிகளை தருகிறார்கள்..

ராதாரவி

ராதாரவி

அன்று இதே அதிமுகவில் இருந்து, நயினார் நாகேந்திரனைதான், அவர்கள் கட்சிக்கு அழைத்து சென்றார்களே, நாங்கள் ஏதாவது எதிர்ப்பு பதிவு செய்தோமா? நடிகர் ராதாரவி உள்ளிட்ட எத்தனையோ பேரை அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு அழைத்து சென்றபோதும், ஏதாவது எதிர்ப்புகளை தெரிவித்தோமா? இப்போது மட்டும் பழியை சுமத்துவது என்ன நியாயம்? என்ற கேள்விகளை எழுப்புகிறார்களாம்.. இந்த சூழலில்தான், செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்துள்ளார்..

 செக் செங்கோட்டையன்

செக் செங்கோட்டையன்

அதில், "பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக 2024 தேர்தல் சமயத்தில்தான், முடிவு செய்யப்படும் என்றும், அதிமுகவை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் இயக்கமாக உள்ளது, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் தலைவராக இருந்து வருகிறார்" என்று கூறியிருந்ததும் மீண்டும் பாஜகவை சீண்டி பார்ப்பதாகவே உள்ளதாம்.. ஆக மொத்தம், இந்த 2 நாட்களாக நடந்து வரும் சம்பவங்களை எல்லாம் பார்த்தால், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளதாம்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+