இந்த பக்கம் ஆளுநருக்கு! அந்த பக்கம் டெல்லிக்கு! ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினின் வலுவான மெசேஜ்!
சென்னை: இன்று சென்னையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாடு மூலம் முதல்வர் ஸ்டாலின் ஒரே நேரத்தில் மத்திய அரசுக்கும், ஆளுநர் ஆர். என் ரவிக்கும் எதிராக வலுவான மெசேஜ் அனுப்பி உள்ளார்.
ஆளுநர் ரவி - தமிழ்நாடு திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் எழும்ப தொடங்கி உள்ளது. ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள், தமிழ்நாடு வரலாறுக்கு எதிராக அவர் சொல்லும் கருத்துக்கள் சில திமுகவை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளது.
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவியை நேரடியாக எதிர்க்கும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு இன்று நடத்தியது. கடந்த மே மாதம் ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த தனிப்பட்ட மாநாட்டை விரும்பவில்லை.
இந்த மாநாட்டில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடிக்கு இது தொடர்பான அழைப்பு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

சர்ச்சை
இது பெரிய அளவில் சர்ச்சையானது. தமிழ்நாடு அரசும் இதை கடுமையாக எதிர்த்து இருந்தது. இதையடுத்து ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதாவது ஆளுநரை இந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு முதல்வரை வேந்தராக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை. இதனால் நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் இருக்கிறது.

பதிலடி
இந்த நிலையில்தான் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசு மூலம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஆளுநருக்கு போட்டியாக இதை தமிழ்நாடு அரசு நடத்தியது. அண்ணா பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும் இதில் கலந்து கொண்டனர். மொத்தம் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்

ஆளுநர் பதிலடி
ஒரு பக்கம் இந்த கூட்டம் மூலம் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது போலவே மத்திய அரசுக்கும் இதில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் இதுவரை எங்களிடம் எழுத்துப்பூர்வமாக சொல்லவில்லை. எழுத்துபூர்வமாக இதுவரை கருத்து எதையும் சமர்ப்பிக்கவில்லை. தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக்கொள்கையை புரிந்து கொள்ள துவங்கி உள்ளது என்று கூறி இருந்தார்.

முதல்வர் பேச்சு
இந்த நிலையில்தான் இன்று கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது. நீட் மட்டுமல்ல, புதிய தேசிய கல்விக்கொள்கையையும் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டிற்கு என்று தனி கல்விக்கொள்ளை உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் நிறைய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டது. அதோடு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கல்லூரி சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால் நமக்கென்று புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பதிலடி
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் இதுவரை எங்களிடம் எழுத்துப்பூர்வமாக சொல்லவில்லை என்று கூறிய மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று முதல்வர் ஸ்டாலின் அதற்கு எதிராக துணை வேந்தர்களிடம் பேசினார். அதே சமயம் மத்திய அமைச்சர் சொன்னது போல அல்லாமல் தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக்கொள்கை குறித்து எழுத்துபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து பேசி உள்ளது. பிரதமர் மோடியை ஜூன் 2021ல் சந்தித்த போதே முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கையை வாபஸ் வாங்க வேண்டும் என்று எழுத்துபூர்வமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications