Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ச் இன்ச்சா சிதறுதே? 1 கல்லில் 3 மாங்கா வீழ்த்தும் ஸ்டாலின்.. அவருமா? இப்பவே திமுகவில் உதறல்.. பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வேலையில், திமுக இப்போதே இறங்கிவிட்டதாக தெரிகிறது..!!

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில், இளைஞர்கள் அணியை சேர்ந்த சிலருக்கு வாய்ப்புகளை தர நினைத்திருந்தாராம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், சில சீனியர்கள் முதல்வர் ஸ்டானிடமே நேரடியாக பேசி, அதுவும் சென்ட்டிமென்ட்டாக பேசி, எப்படியோ சீட்டை பெற்றுவிட்டார்களாம்.

Are these 3 Big Strategies by CM MK Stalin and Vibrant activities of Udhayanidhi Stalin are gaining attention in Tamil Nadu

தொகுதிகள்: சீட்டை பெற்றுக் கொண்டார்களேதவிர, இவர்களில் நிறைய பேர் தொகுதிகளில் சரியாக இறங்கி வேலை பார்க்கவில்லையாம்.. இதுகுறித்த ரிப்போர்ட்களும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதுபோன்றதொரு ரிப்போர்ட் உதயநிதியின் டேபிளுக்கும் சென்றுள்ளது.. மொத்தத்தில், களத்தில் ஒழுங்காக வேலை பார்க்காதவர்கள், சுணக்கமாக இருந்தவர்கள், மாற்று கட்சியினருக்கு கரிசனம் காட்டியவர்கள் என தனித்தனி புகார் லிஸ்ட் தயாராகியிருக்கிறதாம். எந்த தொகுதியில் சரியாக ரிசல்ட் வரவில்லையோ, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இதில் மன்னிப்பு என்பதே யாருக்கும் கிடையாது என்று ஏற்கனவே ஸ்டாலின் கறாராக சொல்லிவிட்டாராம்.

நிர்வாகிகள்: இரண்டாவதாக, சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் தலைதூக்கி உள்ளதுடன், ஒருங்கிணைந்து யாரும் செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் சென்றவண்ணம் உள்ளன..

குறிப்பாக, தென்காசி மாவட்டம், நெல்லை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் இதுபோன்ற பிரச்சனை தலைதூக்கியவாறே உள்ளது.. இப்படியொரு புகார்கள் அறிவாலயத்துக்கு ஏற்கனவே சென்ற நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு, இதில் முதல்வர தரப்பு நேரடியாகவே தலையிட்டிருந்தது..

அறிவுரை: எந்த மாவட்டங்களில் நிறைய பிரச்சனைகள் உள்ளதோ, அங்கேயிருந்து சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகவே சென்னைக்கு வரவழைத்து, அறிவுரை சொல்லியதுடன், நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், உட்பூசல்கள் ஆங்காங்கே இன்னமும் வெடித்து வருகிறதாம். எனவே, புதிய மாவட்ட செயலாளர்கள் குறித்த நியமனத்தையும் கையிலெடுக்க போகிறதாம் திமுக மேலிடம்.

அந்தவகையில், 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நடைமுறையை, மொத்த தொகுதிகளிலும் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. எங்கெல்லாம் ஒருங்கிணைப்பு இல்லையோ, அந்த மாவட்டங்களில் 2 சட்டசபை தொகுதிக்கெற்ப மாவட்டங்களை பிரிக்கவும் யோசித்து வருகிறதாம்..

மாவட்ட செயலாளர்கள்: மூன்றாவதாக, இளைஞரணியிலிருந்து, மாவட்ட செயலாளர்கள் சிலர் நியமிக்கப்போகிறார்களாம்.. 2026 சட்டசபை தேர்தலில், மெஜாரிட்டி வெற்றி பெறவேண்டுமானால், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம் என்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும்விதமாக, இப்படியொரு முடிவை உதயநிதி தரப்பு முதல்வரிடம் வலியுறுத்த போகிறதாம்.

ஆக, செயல்படாத அமைச்சர்களின் பதவி பறிப்பு + ஒரே இடத்தில் குவிந்துள்ள மாவட்ட செயலாளர்கள் அதிகாரத்தை பரவலாக்குவது + இளைஞர்களுக்கு வாய்ப்பு என ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்க திமுக தயாராகி வருகிறதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+