விழப்போகும் "ஹாட்ரிக்" விக்கெட்! "மோப்பம்" பிடித்த டெல்லி பாஜக! திமுகவிற்கு அமில சோதனை! 3 எம்பியாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி எம்பிக்களை பாஜக குறி வைத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது. இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தரும் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார்.

அதோடு தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும். திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்த நிலையில் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் எம்பிக்களை தட்டி தூக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன.

பாஜக வலை

பாஜக வலை

வேறு கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்து எம்பியானவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிட்ட வெற்றி கட்சி எம்பிக்கள் ஆகியோரை வலை போட்டு தூக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். ஏற்கனவே பாஜகவின் வலையில் திமுகவை சேர்ந்த முக்கியமான கொங்கு மண்டலா எம்பி ஒருவர் சிக்கி உள்ளார். மாற்று கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்து இவர் எம்பி ஆனார். ஆனால் சமீப நாட்களாக கட்சிக்குள் இவருக்கு மதிப்பில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமான மாநகராட்சி நிகழ்ச்சிகளில் இவருக்கு அழைப்பு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

 டென்சன்

டென்சன்

இதன் காரணமாக உட்கட்சி நிர்வாகிகள் மீதே அந்த எம்பி கோபத்தில் இருக்கிறாராம். அவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பாஜக பக்கம் ஒதுங்கும் திட்டத்தில் அவர் இருக்கிறாராம். பாஜக வலையில் இவர் சிக்கியுள்ள நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சி எம்பி இன்னொருவரையும் வளைத்து வைத்திருக்கிறதாம் பாஜக. கூட்டணி கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சூரியன் சின்னத்தில் ஜெயித்திருப்பதால் அந்த எம்பி திமுக எம்.பி. என்ற கணக்கில் தான் வருகிறார்.

திமுக மோதல்

திமுக மோதல்

ஆனால், மாவட்ட திமுகவினரோ, திமுக எம்.பி.கணக்கில் வந்தாலும் "அவரை" மாற்று கட்சி என்றே பார்க்கின்றனர். இதனால் திமுகவுக்கும் அந்த கூட்டணி கட்சி எம்பிக்கும் உறவுகள் அப்படி ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. மேலும், நாமக்கல் மாவட்டத்து ராஜ்யசபா எம்.பி.யான ராஜேஷ்குமார் உட்பட மற்ற திமுக எம்பிகளுக்கு இ இருக்கும் முக்கியத்துவம் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் தனக்கு கிடைப்பது இல்லை என்றும் "அந்த" கூட்டணி கட்சி எம்பி புலம்பி வருகிறார். திமுகவுடன் மட்டுமின்றி தனது சொந்த கட்சி தலைவருடனும் அந்த அம்பிக்கு முரண்பாடுகள் அதிகரித்து வருகிறதாம்

 மோப்பம்

மோப்பம்

இதனை மோப்பம் பிடித்த பாஜக இவரையும் வளைத்து விட்டது. அதேபோல, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிப்பெற்ற ஐ.ஜே.க. கட்சி தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து, திமுக எம்.பி.யாக கருதப்படுபவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் ஐ.ஜே.க. கட்சி கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ஆனால், திமுக எம்.பி. பதவியை இவர் ராஜினாமா செய்யாமல் திமுக எம்.பி.யாக தொடர்ந்து இயங்கி வருகிறார். திமுக எம்.பி.யாக இருந்தாலும் திமுக தலைவர்கள் யாரும் இவரை மதிப்பதில்லை.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

திமுக தலைமையும் இவரை புறக்கணித்தே வருகிறது. இதனால் இவரும் அறிவாலயத்தின் மீது ஏக வருத்தத்தில் இருக்கிறார். இவரையும் ஏற்கனவே வளைத்து வைத்திருக்கிறது பாஜக தலைமை. இப்படி திமுக எம்.பி.க்களுக்குள் ஊடுறுவி வருகிறது டெல்லி. இந்த நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கெல்லாம் மீண்டும் சீட் வழங்கப்போவதில்லை என்று திமுக முடிவு செய்துள்ளது. இவர்களை கழற்றிவிடும் முடிவில் திமுக இருக்கிறதாம்.

சீட் கிடைக்கும்

சீட் கிடைக்கும்

அதேபோல இந்த எம்.பிக்களும் மீண்டும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால், இன்னும் பதவி இருக்கப் போகும் ஒன்னரை வருடத்தில் தங்களுக்குத் தேவையானதை டெல்லியின் ஆதரவில் சாதித்துக் கொள்ளலாம் என்ற முடிவிலேயே பாஜகவின் தூண்டிலில் சிக்கியிருக்கிறார்கள். தேவைப்படுகிற நேரத்தில் திமுகவுக்கு எதிராக இவர்களை அதிரடியாகப் பேச வைக்க திட்டமிட்டுள்ளது பாஜக என்கிற தகவல்கள் கிடைக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+