தபாலில் வீடு தேடி வரும் டிரைவிங் லைசென்ஸ்.. ஆன்லைன் ஓட்டுநர் உரிமத்தில் 4 ஹைலைட்ஸ் இதுதான்.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிரைவிங் லைசென்ஸில் உள்ள 4 ஹைலைட் என்னென்ன தெரியுமா? வீடு தேடி லைசென்ஸ் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஓட்டுநர் உரிமம் என்று சொல்லக்கூடிய டிரைவிங் லைசென்ஸ்களை, வாகன ஓட்டிகள் அனைவருமே பெற்றிருக்க வேண்டும்.. இந்த டிரைவிங் லைசென்ஸை ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது..

Are these 4 Major High lights in the Driving Licence Online facility and How to get Postal Home delivery Licence

பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

4 ஹைலைட்ஸ்: டிரைவிங் லைசென்ஸில், ஆன்லைனில் உள்ள 4 ஹைலைட் விஷயம் என்ன தெரியுமா? டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்வதுடன், லைசென்ஸில் முகவரி மாற்றம் செய்யலாம்.. அதேபோல, தொலைந்து போன உங்கள் லைசென்ஸை டூப்ளிகேட் பெற்றுக் கொள்ளலாம். LLR எனப்படும் Learners Licence எடுக்கவும் இந்த இணையதள வசதி மிகுந்த உபயோகமாக இருக்கிறது. இந்த 4 வசதிகளுக்கும் "Contactless Service Operation" என்று சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இனிமேல் டிரைவிங் லைசென்ஸ், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே தபாலில் வந்து தரப்போகும் வசதியையும் அரசு செய்து தந்துள்ளது.. இதனால் விண்ணப்பதாரர், வண்டியை ஓட்டிக்காட்டி தேர்ச்சி அறிவித்த பிறகு, ஓட்டுனர் உரிமம் பெற வேண்டியதில்லை.. இதற்காக அலையவும் தேவையில்லை.. வீட்டுக்கே லைசென்ஸ் வந்துசேர்ந்துவிடும்.

ஓட்டுநர் உரிமம்: இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வழக்கமான ஓட்டுனர் உரிம கட்டணமான ரூ.520 உடன், தபால் செலவுக்காக ரூ.50 கட்டணமாக செலுத்தினால் போதும். ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உரிமம், பதிவுச்சான்றிதழும் (ஆர்சி புக்) தபால் மூலமே உங்களுக்கு கிடைத்துவிடும்.

ஒருவேளை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முகவரி தவறாக இருந்தாலோ, அல்லது விண்ணப்பதாரர் வீட்டில் இல்லையென்றாலோ, ஆர்டிஓ ஆபீசுக்கே அந்த டிரைவிங் லைசென்ஸ் திரும்பி வந்துவிடும்.. அதற்கு பிறகு, விண்ணப்பதாரர் ஆர்டிஓ ஆபீசுக்கு சென்று, சரியான விலாசத்தை தபால் உறையை அலுவலகத்தில் தந்தால், மறுபடியும் வீட்டுக்கு தபால் மூலம் டிரைவிங் லைசென்ஸ் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆன்லைன் வசதி: ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்வது போலவே, உங்களது ஓட்டுநர் உரிமத்தில் திருத்தங்கள் ஏதாவது இருந்தாலும் அதனையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம். இந்த திருத்தம் செய்வதற்கு, ஆதார் அட்டை, 10 அல்லது 12 வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட்டின் நகல், பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இருந்தாலே போதும்.

அதேபோல, உங்கள் பெயரை ஓட்டுநர் உரிமத்தில் மாற்ற விரும்பினால், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்டின் நகல், ஒரு தேசிய செய்தித்தாள் அல்லது செய்தித்தாளில் விளம்பரத்தின் நகல், முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி பப்ளிக் மூலம் சான்றளிக்கப்பட்ட வாக்குமூலம் போன்ற ஆவணங்கள் அவசியம்.

செல்போன் நம்பர்: இதேபோல, டிரைவிங் லைசென்ஸில் உங்களது செல்போன் நம்பரை மாற்ற வேண்டும் என்றாலும், கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

- https://parivahan.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் drivers/learners license என்ற பகுதியில் நுழைய வேண்டும்

- முகப்பு பக்கத்தில், உங்களுடைய மாநிலம் பெயர் குறிப்பிட வேண்டும்.

- பிறகு, Others என்ற பகுதியை கிளிக் செய்தால், Mobile Number Update என்ற பகுதி திறக்கப்படும்.

- தரப்பட்டிருக்கும் 3 ஆப்ஷனில், உங்களுடைய License எந்த License பிரிவை சேர்ந்தது என்பதை பதிவிட வேண்டும்.

- பிறகு, "License Issue Date, Driving License Number, Date of Birth" போன்ற விவரங்களை பிழையில்லாமல் பதிவிட்டு, "Submit" என்பதை கொடுத்துவிட வேண்டும்

- இப்போது ஸ்கிரீனில் தெரியும், உங்களது தரவுகளை சரிபார்த்து, "Proceed" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- இறுதியாக, உங்களுடைய புதிய போன் நம்பரையும், ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற காரணத்தையும் தெரிவித்துவிட்டு, "Proceed" ஆப் தரவேண்டும்.

- இப்போது, புதிய நம்பருடைய செல்போனுக்கு OTP வரும். அதை பதிவிட்டு "Verify" ஆப்ஷனை கிளிக் செய்தால், OTP Verify செய்யப்பட்டு உங்களுடைய புதிய செல்போன் நம்பர் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+