சைக்கிள் பஞ்ச்சர்.. பாஜகவை நம்பிய ஜி.கே. வாசன்.. இதுக்கு எடப்பாடி பழனிசாமி கிட்டயே போயிருக்கலாமோ?
சென்னை: பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸின் வாக்கு எண்ணிக்கை நிலைமை பரிதாபகரமாக உள்ளது.. ஒரு இடத்திலும் தமாகா முன்னிலை பெறவில்லை.
தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளின் தலைவர்களின் நேரடி நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றவர் ஜிகே வாசன்.. குறிப்பாக, பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர்.

பாஜக தலைவர்கள்: அதனால்தான், கடந்த தேர்தல்களின்போது, 3 முறை எம்பி சீட்டுக்களை வாசனுக்கு வலிய தர முன்வந்தது மேலி, பாஜக. இந்த முறையும் இதே கோரிக்கையை பாஜக தலைவர்கள் முன்வைக்கவும், வாசன் நிஜமாகவே குழம்பி போனார். காரணம், அதிமுக - பாஜக கூட்டணி முறிவை, அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
அதிமுக, பாஜக என இரு தரப்பு தலைமையையும் சமாதானம் செய்யும் முயற்சியையும் பலமுறை மேற்கொண்டும், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், வாசனையே அதிர செய்துவிட்டது. இதனால், யார் பக்கம் கூட்டணி வைப்பது என்று தெரியாமல் வாசன், நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி: எனினும், எடப்பாடி பழனிசாமி "அதிமுக மட்டும் நீங்கள் மட்டும் வந்துவிடுங்கள்" என்று வாசனுக்கு பலமுறை அழைப்பு விடுத்து கொண்டேயிருந்தாராம்.
இதனால், அதிமுகவுடன் வாசன் கூட்டணி வைப்பார் என்று கணிக்கப்பட்ட நிலையில் படக்கென பாஜக பக்கம் தாவிவிட்டார்.. மற்ற கூட்டணி கூட்டணி கட்சியினரும் இதே குழப்பத்தில் இருந்த நிலையில், பாஜகவிலும் யாருமே அதுவரை ஆதரவு தராமல் இருந்தனர்.. ஆனால், எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வராத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முதல் கட்சியாக பாஜகவுடன் கூட்டணியை அறிவித்து, அதிமுகவுக்கு ஷாக் தந்தது.
தலைகீழ்: பாஜக பக்கம் தாவியதுமே, காங்கிரஸ், திமுகவை கடுமையாக விமர்சிக்க துவங்கினார் வாசன்.. ஆனால், தமாகாவிலோ நிலைமையே தலைகீழாகவிட்டது. பாஜகவை காலம் காலமாக கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் தமாகா, பாஜகவுடனேயே இணைந்து கொள்வதா? என்று தமாகா நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்தனர்..
மூத்த தலைவர் மூப்பனாரின் மகனின் இந்த அதிரடியால், அக்கட்சின் தலைமை நிலைய செயலாளர் டி.என். அசோகன் என்பவர் தன்னுடைய பதவியை ராஜினாமே செய்துவிட்டு போய்விட்டார்.. மற்றொருபக்கம் இளைஞரணி யுவராஜ் ஓடோடி சென்று எடப்பாடியை சந்தித்துவிட்டார். எதற்காக அன்று சந்திக்க போனார் என்று இதுவரை தெரியவில்லை.
அசராத வாசன்: எனினும் வாசன் அசரவில்லை.. அடுத்ததாக பாஜகவிடம் தொகுதி பேரத்தில் இறங்கினார்.. வழக்கமாக தமாகாவுக்கு அதிமுகவில் 1 சீட் தருவார்கள்.. அந்த 1 சீட்டிலும் ஈஸியாக வெற்றி பெற்றுவிடும் தமாகா..
ஆனால், இந்த முறை தங்களுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று வாசன் அடம்பிடித்தார். முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான ஓபிஎஸ்ஸுக்கே 1 சீட் மட்டுமே பாஜக தந்தது.. அதேபோல, வாக்கு வங்கியை வலுவாக வைத்திருக்கும் அமமுகவுக்கும் 1 சீட் மட்டுமே பாஜக தந்தது. ஆனால், வாசனுக்கு மட்டும் 3 சீட்களை ஒதுக்கியது.
பிரச்சாரம்: ஈரோடு (பி.விஜயகுமார்), ஸ்ரீபெரும்புதூர் (வேணுகோபால்), தூத்துக்குடி(விஜயசீலன் ) என 3 இடங்களிலும் வேட்பாளர்களை இறக்கி பிரச்சாரத்தையும் மேற்கொண்டார் வாசன்.
கூட்டணி கட்சிக்கு தொகுதியை தந்ததாலோ என்னவோ, பாஜக மேலிட தலைவர்கள் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் தமாகவுக்கு பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை.. இதோ இன்றையதினம் 3 வேட்பாளர்களுமே மண்ணை கவ்வி வருகிறார்கள்..ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.. ஒருவேளை அதிமுகவுடன் தமாகா கைகோர்த்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
ஷாக் அதிமுக: இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எக்ஸிட் போலில் சொன்னதைவிட, பாஜக தமிழகத்தில் இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று நேற்றுமுன்தினம்கூட ஜிகே வாசன் நம்பிக்கையுடன் கருத்து கூறியிருந்தார்.. அதுமட்டுமல்லல தமிழகத்தில் பாஜக கூட்டணி செய்த தேர்தல் பணிக்கு தமிழக மக்கள் நல்ல அங்கீகாரம் கொடுப்பார்கள் என்றும், அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறி, அதிமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சியை அள்ளி போட்டிருந்தார் வாசன்..
"நாட்டின் நலன் கருதி பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் நீடிக்கும்" என்று வாசன் சொல்லியிருந்ததன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு












Click it and Unblock the Notifications