Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரெடிட் கார்டு உங்ககிட்ட இருக்கா? அப்ப 2 விஷயத்தை மட்டும் செய்யாதீங்க.. கேன்சல் செய்தால் இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.. அதேசமயம், கிரெடிட் கார்டு வேண்டாம் என்றால், அதை எப்படி கேன்சல் செய்ய வேண்டும் தெரியுமா?

பணபரிவர்த்தனை என்பது தற்போது ஈஸியாகிவிட்டது.. கையில் நாம் பணமே வைத்திருக்க தேவையில்லை.. இதற்கு உதவக்கூடிய ஒரு வழிவகைதான், கிரெடிட் கார்டு..

இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பதால், உங்கள் பட்ஜெட்டுக்கு மேல் நீங்கள் கொள்முதல் செய்யமுடியும்.. அதே நேரத்தில் மாதாந்திர அடிப்படையில் முழு/பகுதி பணத்தை திருப்பி செலுத்தவும் முடியும்..

Are these Credit Card Advantages and Do you know what to do to cancel a Credit Card

அறிவிப்புகள்: குறுகிய அறிவிப்பில், பணம் கடன் வாங்க மற்றும் அதைத் தவணைகளில் திருப்பி செலுத்த (தேவைப்பட்டால்) அனுமதிக்கும் ஒரு வசதியாகும்.. கையில் அதிகம் பணம் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.. இதற்காக தரப்படும் கடனட்டையை பாதுகாப்பா வைத்திருக்க வேண்டும்... கடனட்டையின் பின்புறம் CVV (Card Verification Value) எண் இருக்கும். இந்த நம்பரை யாரிடமும் சொல்லக்கூடாது.. நண்பர்களுக்கும் கொடுக்கக்கூடாது

இந்த கிரெடிட் கார்டு சமீபகாலமாகவே பிரபலமாகி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.. உங்கள் வங்கியில் போதுமான இருப்பு இல்லாவிட்டாலும்கூட, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.. இது ஒரு வகையான கடன் ஆகும்...

தள்ளுபடிகள்: ஆனால், இதை நீங்கள் பின்னாளில் கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும்.. இதற்கான சலுகை காலமும் உண்டு.. சலுகை காலத்தில் செலவழித்த தொகையை நீங்கள் திருப்பி செலுத்தினால், அந்த தொகைக்கு வங்கி உங்களிடம் எந்த வட்டியையும் வசூலிக்காது... ஷாப்பிங் செய்தாலும்கூட, நிறைய சலுகைகள், வெகுமதிகள், தள்ளுபடிகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கின்றன.

ஆனால் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.. இல்லாவிட்டால் தேவையில்லாத சிக்கலில், நமக்கே தெரியாமல் நாம் மாட்டிக்கொண்டுவிடுவோம்.

அட்வான்ஸ்: கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்கலாம், ஆனால், அதற்கும் ஒரு லிமிட் உள்ளது.. இருந்தாலும், கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. காரணம், அப்படி பணம் எடுத்தால், அதற்காக நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்... அதுமட்டுமல்ல, கேஷ் அட்வான்சில் வட்டி இல்லாத கடன் காலத்தால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும். மொத்தம் 2 வகையான நிலுவைத்தொகை வசதி (ட்யூ அமவுண்ட்) இதில் உள்ளது..

ஒன்று மொத்தமாக நிலுவைத்தொகை, இன்னொன்று குறைந்தபட்ச நிலுவைத் தொகை... நீங்கள் குறைந்தபட்ச நிலுவை தொகையை மட்டும் செலுத்தினால், உங்கள் கார்டு பிளாக் செய்யப்படாது... ஆனால் நிலுவை தொகைக்கு நீங்கள் அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இந்த வட்டி மொத்த தொகைக்கும் பொருந்தும். அதனால், கிரெடிட் கார் பேமண்ட் அதாவது கட்டணம்...செலுத்தும்போது எப்போதும் மொத்த நிலுவைத் தொகையை செலுத்திவிட வேண்டும்.

பலவீனம்: கிரெடிட் கார்டு வரம்பில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது.. ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவழிப்பவர்களை நிதி ரீதியாக பலவீனமானவர்களாக வங்கி கணக்கு போடுகிறது.. இது உங்கள் CIBIL ஸ்கோரை சேதப்படுத்தும்... இதனால், எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் சிக்கல் ஏதாவது ஏற்படலாம்.

பல முறை, ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள், ஒரு கார்டை திடீரென மூடி விடுவதுண்டு.. இது கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (கிரெடிட் யுடிலைசேஷன் ரேஷியோ) அதிகரிக்கலாம். காரணம், உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் முன்பு இரண்டு கார்டுகளாக பிரிக்கப்பட்டது.

ஸ்கோர்: ஆனால் ஒரு கார்டு மூடப்பட்ட பிறகு, அது ஒன்றில் இருக்கும். அதிக கடன் பயன்பாட்டு விகிதத்தால்...உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமடைகிறது. அதனால்தான் நீங்கள் கார்டை பயன்படுத்தாமல் இருந்தாலும், அதை செயலில் வைத்திருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டை எப்படி சரியாக உபயோகிப்பது?

1. பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிட வேண்டும்.. தவணைமுறையைத் தேர்வு செய்ய வேண்டாம்.

2. கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள்.

3. நிறைய கார்டுகளை வைத்திருக்க வேண்டாம்.. ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்பதுடன், ஒவ்வொன்றின் பணம் கட்டும் தேதியும் வேறு வேறாகி குழம்பிவிடும்.. அதிகபட்சம் ஒரு ஆட்ஆன் (add-on) கார்ட் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.

4. கஸ்டமர் சர்வீஸுக்கு ஒரு போன் கால் செய்வதன் மூலம், உங்களது லிமிட்டை நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளாம். உங்கள் மாத வருமானத்தில் 50%-க்கு அதிகமாக லிமிட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

5. முடிந்தஅளவுக்கு, பழைய கிரெடிட் கார்டுகளை மாற்றாமல் வைத்துக்கொள்வது ஒரு நீண்ட கடன் வரலாற்றை தெளிவாகக் காட்ட உதவும்.

ஒருவேளை, தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு உங்களுக்கு வேண்டாம் என்று வங்கி கிளையில் எழுதிக்கொடுத்தும், அந்த கார்டை கேன்சல் செய்யாமல் இருப்பார்கள்.. மேலும், ஆண்டு பராமரிப்பு தொகையையும் எடுத்து வருகிறார்கள் என்றால், என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கேன்சலேஷன்: அந்த வங்கியின் வெப்சைட்டுக்கு சென்று கேன்சலேஷன்படிவம் ஞ வாங்கி, ஆன்லைனிலேயே அதை நிரப்பி வழங்கலாம். எதற்காக கேன்சல் செய்கிறீர்கள் என்ற விபரம் அதில் கேட்கப்படும். பிறகு, அடுத்த 3 நாட்களுக்குள், அந்த வங்கியில் இருந்து அழைப்பு வரும்... கேன்சல் செய்தவர் நீங்கள்தானா? என்று உறுதி செய்யப்படும். 7 நாட்களுக்குள் கேன்சல் செய்யப்பட்டுவிடும்.

அல்லது அந்த வங்கியின் கட்டணமில்லா தொலைபேசியை அழைத்தும், கேன்சல் கோரிக்கை நீங்கள் வைக்கலாம். ஒருவேளை உங்களிடம் பிரதான கிரெடிட் அட்டையோடு, கூடுதல் அட்டையாக 'ஆட் ஆன்' அட்டை இருக்குமானால், இதில் எதை கேன்சல் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்.

இ-மெயில்: கிரெடிட் கார்டில் எந்தக் கடனும் மிச்சம் இருக்கக்கூடாது. அப்படி இருக்கும்போதுதான், கார்டு கேன்சல் கோரிக்கையை வைக்க முடியும். கார்டு கேன்சல் செய்யப்பட்ட விபரம், அந்த அட்டையை நீங்கள் வாங்கும்போது கொடுத்த செல்போன் நம்பர், இ - மெயிலில் தெரிவிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+