Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஞ்சலக சேமிப்பு கணக்கு.. "ஜீரோ பேலன்ஸ்".. மகளிருக்கு வங்கி கணக்கை தொடங்க என்னென்ன ஆவணங்கள் அவசியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.. அத்துடன், சிறப்பு முகாம்களையும் நடத்தி புது புது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இன்றும் ஒரு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

அறிவித்தபடியே, இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படுகிறது.. இதையடுத்து, பயனாளிகளின் தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன...

Are these Major Documents required to open a savings account: Kalaignar Magalir Urimai Thogai

கட்டுப்பாடுகள்: குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஒருவர் இந்த உரிமை தொகையை பெறலாம். குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின்நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டோக்கன்கள்: இதையடுத்து, ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் அளித்து, 2 கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நியாய விலைக்கடை பணியாளர்கள், தங்கள் கடைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, விண்ணப்பம் மற்றும் முகாம் நடைபெறும் நாள், நேரம் அடங்கிய டோக்கன் போன்றவற்றை வழங்கினார்கள்.. இதையடுத்து, விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்களும் நாளை மறுநாள் முதல் ஆரம்பமாக போகின்றன.

இந்த உரிமைத்தொகையை பெறுவதற்காக, வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க வங்கிகளை அணுகி வருகிறார்கள்.. காரணம், வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்த பட்ச இருப்புத்தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், கூட்டுறவுத்துறை சலுகை தந்துள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் இல்லாமல், அதாவது "ஜீரோ பேலன்ஸ்" என்ற அடிப்படையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன... சேமிப்பு கணக்கு தொடங்க வரும் பெண்களுக்கு உடனுக்குடன் கூட்டுறவு வங்கிகளில் கணக்கும் தொடங்கப்படுகின்றன.

ஆவணங்கள்: இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். கட்டணமோ, குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று என்று கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி ஆகியோர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளனர்..

அறிவிப்பு: அந்த அறிவிப்பில், மகளிர் உரிமை தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் ('ஜீரோ பேலன்ஸ்') சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், இவ்வங்கியின் 38 கிளைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகள், ஆதார், ரேஷன் கார்டுகள், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு துவங்கலாம், என்று அறிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+