பெட்ரோல் பங்க் கிளம்பறீங்களா? ஜீரோவை பார்த்துக்கோங்க.. பெட்ரோல் போடறப்ப இந்த விஷயம் கவனிச்சீங்களா?
சென்னை: பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும்போது, சில முக்கியமான விஷயங்களையும், வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும்நிலையில், பெட்ரோல் பங்குகளில் எரிபொருளையும் குறைத்துவிடுவது சில இடங்களில் நடைபெறுகிறது.. எனவே, பெட்ரோல் பங்குக்கு செல்லும் வாடிக்கையாளர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

- பங்கில் பெட்ரோல் போடும்போது, மீட்டரை முதலில் கவனிக்க வேண்டும்.. "ஜீரோவில்" இருந்து ஆரம்பமாகிறதா என்பதனை கவனிக்க வேண்டும்.. மீட்டர் அளவீடு 0.00 ஆக இருக்க வேண்டும்.
- பெட்ரோல் விலையில் தினமும் மாற்றம் இருக்கும் என்பதால், பெட்ரோல் பங்க் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விலையையும், அங்கிருக்கும் அலுவலகத்தின் முன்பு எழுதிவைக்கப்பட்டுள்ள விலையையும் சரிபார்க்க வேண்டும்.
- பங்கில் அரசு முத்திரையுடன் கூடிய 5 லிட்டர் குடுவையிலும் இதனை சரி பார்க்கலாம்..அதேபோல, பெட்ரோலின் தரத்தையும் சரி பார்க்கலாம்.. பங்கில் உள்ள "பில்டர் பேப்பரில்' பெட்ரோலை ஊற்றும்போது கறை படியாவிட்டால் தரமான பெட்ரோல் என்றே அர்த்தம்.
- ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போட நேரிட்டாலும், சரியான அளவுக்கு பெட்ரோல் கிடைப்பதில்லை. என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது.
- தரம் குறைந்த பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவது மைலேஜ் அளவை குறைத்து விடும் என்பதால், பெட்ரோலின் தரத்தையும் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். பெட்ரோல் போடும்போது, "Density" என ஒரு டிஸ்பிளே இருக்கும். இந்த டிஸ்ப்ளேயில் பெட்ரோல் மற்றும் டீசல் அடர்த்தி அளவு காணப்படும்.. இதை வைத்தே, பெட்ரோல், டீசலின் தர மதிப்பீட்டை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
- மத்திய அரசின் விதிப்படி, பெட்ரோலின் தர மதிப்பீடு 730 முதல் 800 kg per cubic meter வரையில் இருக்க வேண்டும்.. டீசலுக்கு 830 முதல் 900 kg per cubic meter வரையில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அளவில் ‛Density' இருந்தால் அது தரமான பெட்ரோல், டீசல் எனலாம். இதன்மூலம் வாகனங்களின் மைலேஜ் அதிகரிக்க செய்யும்.
- தொடர்ந்து ஒரே நிறுவனத்தின் பெட்ரோலை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.. அல்லது நம்பகமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.. காரணம், அந்த நிறுவனத்தின் பெட்ரோலுக்கு உங்கள் வாகனம் செட் ஆகிவிட்டது என்று அர்த்தம்.. இது இன்ஜினின் ஆயுளை அதிகரிக்க செய்யும்.
- ரிசர்வ் விழுந்துவிட்டாலோ அல்லது பெட்ரோல் குறைவாக இருக்கிறது என்று தெரிந்தாலோ, உடனடியாக டேங்க்கை நிரப்பி கொள்ள வேண்டும். ரிசர்வ் வந்தும்கூட, பெட்ரோல் போடாமல் இருக்கக்கூடாது.
- தரத்தின்படி, பெட்ரோலின் தூய்மை 730 முதல் 800 வரை இருக்க வேண்டும்... டீசல் அடர்த்தி 830 முதல் 900 வரை இருக்க வேண்டும். இயந்திரத்திலேயே பெட்ரோல், டீசல் விலை மற்றும் அளவு எழுதப்பட்டிருக்கும்..
- அடர்த்தி அளவும் அதற்கு கீழேயும் குறிப்பிடப்பட்டிருக்கும்.. அப்படி அடர்த்தி பூர்த்தி செய்யவில்லை என்றால், பெட்ரோல் பங்க் மேனேஜரிடம் விசாரிக்கும் உரிமை உண்டு.
எரிபொருளின் அளவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அளவை சரிபார்க்க நுகர்வோருக்கு உரிமை உண்டு...
- அதேபோல, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ் எரிபொருள் கலப்படத்தை கஸ்டமர்கள் விசாரிக்கலாம்.
- எப்போது பெட்ரோல் போட்டாலும், அதற்கு பில் கேட்டு வாங்க வேண்டும். ஒருவேளை மோசடி ஏதாவது இருந்தாலும், இதில் கண்டுபிடித்துவிட முடியும்
- பெட்ரோல் அல்லது டீசல் நிலையத்தின் மீது சந்தேகம் இருக்கிறது என்றால், நுகர்வோர் சட்ட அளவியல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அல்லது தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915ல் புகார்களை நீங்கள் பதிவு செய்யலாம்.
- எந்த பெட்ரோல் பம்பிலும் எரிபொருளை நிரப்பினால், கட்டணம் ஏதுமின்றி உங்கள் காரின் டயர்களில் காற்றை நிரப்பும் வசதி கிடைக்கும்... இதற்காகவே பணியாளரை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.
- பெட்ரோல் பங்கில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்று.. இதில் பெண்கள், ஆண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருப்பது கட்டாயமாகும்.. இந்த கழிப்பறைகளை, எரிபொருள் வாங்காமல் கூட பயன்படுத்தலாம். இந்த கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதும் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
- பெட்ரோல் பங்குகளில் சுத்தமான குடிநீர் வைத்திருக்க வேண்டும்.. அதேபோல இலவச தொலைபேசி அழைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும்... ஏதேனும் அவசரம் என்றால் அருகில் உள்ள பெட்ரோல்பங்க் சென்று அவசர உதவியை நாடலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications