Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைமாறுதே "லகான்".. திமிறியெழுந்த எடப்பாடி.. இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாஜகவே எதிர்பார்க்கல போல

3 விதமான வியூகங்களை முன்னெடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய போகிறாராம் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெருங்கி வரும் இடைத்தேர்தலில் 3 முக்கிய காய்நகர்த்தல்களுடன், பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி,.. இதையடுத்து, அதிமுகவின் நகர்வுகள் ஒவ்வொன்றையும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உற்று கவனித்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே, அதிமுகவின் க்ளைமேட்டே மாறியது.. இலை கிடைத்துவிட்டது.. ஓபிஎஸ் ஒதுங்கிவிட்டார்... தினகரன் ஒதுங்கிவிட்டார்.. பாஜக ஆதரவு தந்துவிட்டது. இதுபோக கூட்டணிகளின் பெருவாரியான சப்போர்ட்டும் கிடைத்துவிட்டது.

இதனால், டக்குனு ஒரே நாளில் எடப்பாடியின் கிராப் எகிறிவிட்டது.. ஆதரவும் கூடிவிட்டது.. களநிலவரம் இப்படி சாதகமான சூழலுக்கு வந்த நிலையில், செங்கோட்டையனை வைத்து, தன்னுடைய வியூகத்தை முன்னெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

 3 ப்ளான்கள்

3 ப்ளான்கள்

இதில் 3 விஷயங்கள் கவனமாக கையாளப்பட வேண்டும் என்று உத்தரவுகள் பறந்ததாம். முதலாவதாக, எப்படியும் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை அதிக வாக்குவங்கியை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் கை சின்னத்தை ஜெயிப்பது பெரிய விஷயம் இல்லை என்றும் நினைக்கிறாராம்.. அதனால்தான் தன்னுடைய ஆதராவாளர்களிடம் "ஓட்டுகளை பர்ச்சேஸ் செய்ய நினைப்பவர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்தினால் போதும். நாம் ஜெயித்துவிடலாம், அத்துடன் ஓட்டு சேகரிப்பை நாம் சரியாக செய்தாலே போதும்" என்று நம்பிக்கையை தந்தாராம்.

 கவுண்டர் வாக்கு

கவுண்டர் வாக்கு

கவுண்டர் சமுதாய ஓட்டுக்கள் எடப்பாடிக்கு மெஜாரிட்டி உள்ள நிலையில், அந்த ஓட்டுக்களை தவிர, மற்ற அனைத்து சமுதாய ஓட்டுக்களையும் அதிமுக பக்கம் திருப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளாராம்.. அதிலும், செங்குந்த முதலியார் வாக்குகள் ஈரோடு கிழக்கில் குறிப்பிட்ட அளவுக்கு உள்ளதால், இந்த வாக்குகளையும் அதிமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம்.. இந்த பொறுப்பு மூத்த தலைவர் செங்கோட்டையனிடமும் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இதைதவிர, அமமுக, மநீம கட்சிகள் தற்போது போட்டியிடாத சூழலில், அந்த கட்சி நிர்வாகிகளையும், அதிருப்தியாளர்களையும் அதிமுகவுக்குள் கொண்டுவருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.. அதேபோல, தொகுதியில் ஒவ்வொரு பூத்துக்கும் அதிமுக சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 50 பேரும் ஆளுக்கு 4 அதிமுகவினர் அல்லாதவரின் வாக்குகளை அள்ளி வரவேண்டும் என்றும் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

 முனுசாமி எங்கே

முனுசாமி எங்கே

இதற்கு ஒரே வழி திண்ணை பிரச்சாரம்தான் என்றும், இதனால், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் மட்டுமல்லாமல், பிற சமுதாய வாக்குகளும் கிடைக்கும் என்றும் கணக்கு போடப்பட்டு வருகிறதாம்.. இன்னொரு வியூகமும் எடுக்கப்பட்டுள்ளது.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்ததால்தான், கடந்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியதாக, சிவி சண்முகம் முதல் கேபி முனுசாமி வரை பகிரங்கமாகவே சொல்லி வருகின்றனர்.. அதனால்தான், இந்த முறை, பாஜகவை கழட்டிவிட்டு, தேர்தலை சந்திக்க எடப்பாடி முயன்று வருவதாக சொன்னார்கள்.. அதற்கான முயற்சியும் இந்த இடைத்தேர்தலில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், திடீரென தமிழக பாஜக தலைவர்கள், அதிமுக விவகாரத்தில் என்ட்ரி தந்துவிட்டனர்.

 சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

பிறகு, எடப்பாடிக்கு ஆதரவையும் தந்து, போட்டியிடக்கூடிய தொகுதியையும் எளிதாக்கி தந்துவிட்டதால், பாஜகவை தவிர்க்க முடியாத சூழலுக்கு எடப்பாடி ஆளாகினார்.. எனினும், பாஜக தற்போது கூட்டணியில் இருந்தாலும், எக்காரணம் கொண்டும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் சிதறிவிடக்கூடாது என்பதால்தான், பிரச்சாரங்களில் பெரிதாக பாஜக நிர்வாகிகளை இணைத்து கொள்வதில்லையாம்.,.. அதுமட்டுமல்ல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் இஸ்லாமியர்களை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் தீவிர முயற்சிகள் நடக்கிறதாம். இஸ்லாமியர்கள் மக்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களிடம் நெருங்கி பேசி, தண்ணீர் வாங்கி குடித்து, அவர்களிடம் நெருங்கி பழகி வருகிறார்களாம்.

 பூத் கமிட்டி

பூத் கமிட்டி

இந்த தேர்தலில் எப்படியும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு திமுகவினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனராம்.. இதற்காக அவர்கள் 238 வாக்கு சாவடிக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்துள்ளனர். அதாவது, ஒரு பூத்துக்கு 10 பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் 50 வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.. இதைதான் அதிமுகவும் உற்று கவனிக்கிறது.. எனவேதான், வீடு வீடாக சென்று பிரச்சாரங்களில் கவனம் செலுத்தும்படியும், அதிமுக அல்லாதவர்களையும் குறி வைத்து, வாக்குகளை அள்ள வேண்டு என்றும் எடப்பாடி தரப்பில் உத்தரவு பறந்துள்ளதாம்.

 பாதிக்கு பாதி

பாதிக்கு பாதி

2 நாட்களுக்கு முன்பு லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பும் எடப்பாடிக்கு உற்சாகத்தை தந்துள்ளதாம்.. யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது என்ற அவர்களது கேள்விக்கு 53 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியே சிறப்பாக இருந்ததாகவும், 42 சதவீதம் பேர் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும் கணிப்பில் வெளிப்பட்டு உள்ளது.. இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதையே பிரதானமாக முன்வைத்து தன்னுடைய 2ம் கட்ட பிரச்சாரத்தை எடப்பாடி மேற்கொள்ளப்போவதாக அதிமுக தரப்பில் கூறுகிறார்கள்..

 ஸ்பெஷல் கவனிப்பு

ஸ்பெஷல் கவனிப்பு

திமுகவுக்கு நெருங்கியே வாக்குசதவீதம் வந்துள்ள நிலையில், கொங்கு அல்லாத சமுதாய ஓட்டுக்களையும் அள்ள ஈரோடு கிழக்கு அதிமுக மும்முரமாகி வருகிறதாம்.. இதற்கு நடுவில் வேறு ஒரு தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது.. இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால், அல்லது வலுவான வாக்கு வங்கியை தக்க வைத்துவிட்டால், நிரந்தர பொதுச் செயலாளராக தான் மாறுவதோடு டெல்லியின் ஆதரவையும் முழுமையாக பெற்று விடலாம் என்று கணித்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. அதற்காகவே, சிறப்பு கவனிப்புகளை எந்த குறையும் இல்லாமல் தொகுதிக்குள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+