Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சுதீஷ்ஷூமா".. அங்கேயா.. சிதறுதா எடப்பாடி ஓட்டு.. "அடிமடியில்" கைவைத்த திமுக.. இதென்ன புது ட்விஸ்ட்?

எடப்பாடிக்கு பெரும் ஆதரவை கண்டு ஜெர்க் ஆகியுள்ள திமுக, புது வியூகத்தை செயல்படுத்த போகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதேசமயம், அதிமுகவுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு, சற்று ஜெர்க் ஆகி உள்ள திமுக கூட்டணி, புது வியூக ரூட்டுக்கு திட்டமிட்டு வருகிறதாம்.

திமுக ஆட்சிக்கு வந்து, சந்திக்கக்கூடிய முதல் இடைத்தேர்தல் என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

"இடைக்கால பொதுச்செயலாளராக" உருவெடுத்து, நீதிமன்றம் வரை போராடி, இரட்டை இலையையும் பெற்றுக் கொண்டு, கூட்டணிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் களமிறங்குவதால், எடப்பாடி பழனிசாமிக்கும் இது மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது..

 நால்முனை போட்டி

நால்முனை போட்டி

எப்படியும் 5 முனைப்போட்டி அல்லது 6 முனைப்போட்டி உருவாகலாம் என்று கணித்து வந்த நேரத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது... வழக்கமாக தேர்தல் என்றாலே உதயசூரியன் + இரட்டை இலை சின்னம்தான் பிரதானமாக நேருக்கு நேர் மோதும்.. ஆனால் இந்த முறை இரட்டை இலையும் , கை சின்னமும் மோதுவதால், புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இதில், ஆச்சரியம் என்னவென்றால், கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கும் முன்பேயே, திமுக சார்பில் கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கினர்..

 எடப்பாடிக்கு பெருகும் ஆதரவு

எடப்பாடிக்கு பெருகும் ஆதரவு

முதலில் தனிச்சின்னத்தில்தான் அதிமுக போட்டியிட நேரிடும் என்று யூகிக்கப்பட்டது. ஆனால், இலை கிடைத்துவிடும் என்பது பலரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இருந்தது.. பாஜக ஆதரவு தந்ததும், அதை பார்த்து உடனே ஓபிஎஸ் ஆதரவும், அதை பார்த்து, டிடிவி தினகரன் வேட்பாளரை வாபஸ் வாங்குவதும் என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து களத்தையே அதிர வைத்தது.. மேலும் பல்வேறு கட்சிகளும், இந்து ஆதரவாளர்களும், எடப்பாடியின் சேலம் வீட்டுக்கே சென்று ஆதரவை தந்திருந்தனர்..

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

அதுமட்டுமல்ல, திடீரென திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுக்கவும், அதிருப்திடைந்த சில மய்ய நிர்வாகிகள் மூலம், மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகளையும் அதிமுக பக்கம் கொண்டுவர, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கு பெரிய அசைன்மென்ட்டை செங்கோட்டையன் தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. இதையெல்லாம் பார்த்து திமுக கூட்டணி அதிர்ந்தே போனது.. எடப்பாடிக்கான ஆதரவு திடீரென பெருகி கொண்டு வருவதால் கலங்குவதாக தெரிகிறது. இந்தநிலையில்தான், ஒரு புது முயற்சியை திமுக கூட்டணி கையில் எடுத்துள்ளதாம்... அதன்படி, தேமுதிக வேட்பாளரை வாபஸ் பெற வைக்க முயற்சித்துகொண்டிருக்கிறதாம்..

 சுதீஷ்ஷா?

சுதீஷ்ஷா?

ஏற்கனவே, இப்படி ஒரு முயற்சியை எடப்பாடி டீம் செய்ததாகவும், இது குறித்து சுதீஷிடமும் பேசினாராம் எடப்பாடி பழனிசாமி என்றும் செய்திகள் வெளியாகின.. ஆனால், இதை உடனடியாக அறிக்கை வெளியிட்டு மறுத்திருந்தார் சுதீஷ்.. "இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். எனவே, அதற்கு பிறகு அந்த தகவல் அப்படியே அமுங்கிப்போய்விட்டது..இப்போது மீண்டும் அந்த முயற்சியை திமுககூட்டணி, குறிப்பாக காங்கிரஸ் கையில் எடுப்பதாக தெரிகிறது.. இதற்காக, தேமுதிக வேட்பாளரை வாபஸ் பெற வைக்க, பிரேமலதா, சுதீஷிடமும் பேசி வருகிறார்களாம்..

 ஹெல்ப் விஜயகாந்த்

ஹெல்ப் விஜயகாந்த்

திமுக கூட்டணிக்கு வலிமையாக இருப்பது சிறுபான்மையினர் வாக்குகள் ஆகும்.. அதனை அதிமுக பக்கம் கொண்டுவர, கேபி முனுசாமியிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.. இந்த தகவல் உண்மை என்றால், அதற்கு தேமுதிக எப்படி ரியாக்ட் செய்யும் என்று தெரியவில்லை.. இந்த முறை எம்பி தேர்தலுக்கு மிகப்பெரிய பிளான்களுடன் உள்ளது தேமுதிக.. குறிப்பாக, அதிமுகவை தேமுதிக வெளிப்படையாகவே விமர்சித்து வரும்நிலையில், திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. அந்தவகையில், தேமுதிக தன்னுடைய வேட்பாளரை வாபஸ் வாங்குமா? களமிறங்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+