Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டாப் 1".. சிதறுதா திமுக ஓட்டு.. "அடிமடியில்" கைவைத்த எடப்பாடி.. சுதீஷ்ஷை பார்த்தீங்களா.. முனுசாமி வேற

செங்கோட்டையன், முனுசாமி இருவருக்கும் முக்கிய அசைன்மென்ட் தந்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதற்காக 3 விதமான வியூகங்களையும் கையில் எடுத்துள்ள நிலையில், அதுகுறித்த பரபரப்புகள்தான் கசிந்து கொண்டிருக்கின்றன.

ஈரோடு இடைத்தேர்தல் களம் படுசூடாகி வருகிறது.. ஒட்டுமொத்த கட்சிகளும், அதாவது, பாஜக, எடப்பாடி, ஓபிஎஸ், சீமான், தினகரன், என அனைவருமே திமுகவையே தற்போது குறி வைத்து பிரச்சாரம் செய்ய மும்முரமாகிவிட்டனர்.

இதற்கெல்லாம் பதிலடிகளை தரவேண்டிய நெருக்கடியும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கூட்டணி என்றும் பாராமல், திமுகவே நேரடியாக களத்தில் குதித்து, தன் வெற்றியை பறிக்க மும்முரம் காட்ட தயாராகி உள்ளது..

 சைலண்ட் உத்தரவு

சைலண்ட் உத்தரவு

அதுமட்டுமல்ல, "இடைத்தேர்தலின் வெற்றி காங்கிரசுக்கான வெற்றியாக யாரும் பார்க்க போவதில்லை. அது நம் கட்சிக்கான வெற்றியாகவும், நம் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையாகவும் தான் பார்க்கப்படும். தொகுதியில் நாம் வெற்றிப்பெறுவோம் என்பதில் சந்தேகம் எனக்கில்லை. ஆனால், அது போதாது... எதிர்த்து நிற்கிற அதிமுக அணியும், மற்ற கட்சிகளும் டெபாசிட் போக வேண்டும். டெபாசிட் இழந்தால் தான் நான் சந்தோஷப்படுவேன்.. திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கிற எல்லோருக்கும் டெபாசிட் போக வேண்டும். அதற்கேற்ப தேர்தல் பணி செய்யுங்கள்" சீனியர்கள் கேஎன் நேரு மற்றும் செந்தில்பாலாஜியை போனில் அழைத்து முதல்வர் ஸ்டாலினே உத்தரவிட்டதாக செய்திகளும் கசிந்தன.

 சீனியர் புள்ளி

சீனியர் புள்ளி

அதேபோல, இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டி உள்ளது.. இந்த இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துவிட்டது.. காரணம், இந்த தொகுதியை பொறுத்தவரை, சுமார் 3 சதவீதம் வன்னியர் வாக்குகள் இருக்கின்றன.. இந்த திமுக பக்கம் திருப்பவே பாமகவை 'யாருக்கும் ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தார்களாம்.. திமுகவின் வன்னியர் சமூகத்தை சேர்ந்த அந்த சீனியர் அமைச்சர்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க பின்னணியாக இருப்பதாகவும் தகவல்கள் வெடித்தன.. கிட்டத்தட்ட இதே போல ஒரு செய்திதான் அதிமுக தரப்பில் இருந்தும் தற்போது வெடித்து கிளம்பி உள்ளது.

 அச்சாரம்

அச்சாரம்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்க அனைத்து பகீரத முயற்சிகளையும் எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முதலாவதாக, இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கும் பதிலடி தர வேண்டி தந்து தன்னை பிரதான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.. இரண்டாவதாக, அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்று, பாஜகவையும் கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவதற்கான அச்சாரமாகவும் இந்த இடைத்தேர்தலை அணுக வேண்டி உள்ளது.. மூன்றாவதாக, ஓபிஎஸ்ஸின் அரசியலுக்கும் ஒரு பதிலடியை தந்து, அதிமுகவின் ஒற்றை தலைமையாக தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியும் உள்ளதாம்.. அதனாலேயே இந்த இடைத்தேர்தலை மிக சீரியஸாக கையில் எடுத்து வருகிறாராம் எடப்பாடி.

 + பாயிண்ட்கள்

+ பாயிண்ட்கள்

அந்தவகையில், திமுக கூட்டணிக்கு எதிராக, மெகா வியூகம் ஒன்றை எடப்பாடி அமைத்து வருகிறாராம்.. அதாவது திமுக கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருப்பவைகளை எல்லாம் கண்டறிந்து அதை தடுப்பதுதான் அந்த வியூகமாம்.. தேமுதிக, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் போட்டுயிடுவதால் வாக்குகள் நிச்சயம் பிரிய வாய்ப்புள்ளது.. இது திமுக கூட்டணிக்கு ஆகச்சிறந்த பலமும்கூட.. அதை முறியடிக்கவே, முதலில் தேமுதிகவை வாபஸ் பெற வைப்பதுடன் அதனை தங்களுக்கு ஆதரவாக மாற்றவும் நினைக்கிறார்... இது குறித்து சுதீஷிடமும் பேசியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி..

 விஜயகாந்த்தா

விஜயகாந்த்தா

விரைவில் தங்கள் வேட்பாளரை தேமுதிக வாபஸ் பெற்றாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். இதற்கடுத்தபடியாக, திமுக கூட்டணிக்கு வலிமையாக இருப்பது சிறுபான்மையினர் வாக்குகள் ஆகும்.. அதனை அதிமுக பக்கம் கொண்டுவர, கேபி முனுசாமியிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.. கேபி முனுசாமியும் தொகுதியில் உள்ள முஸ்லீம் பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்... இதற்கடுத்தபடியாக, திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்துள்ளார். இது மய்யத்தின் நிர்வாகிகளை அதிருப்தியடைய வைத்துள்ளதாக தெரிகிறது..

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

அதனால், அந்த நிர்வாகிகளையும் அவர்கள் மூலம் மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகளையும் அதிமுக பக்கம் கொண்டுவர, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கு பெரிய அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் செங்கோட்டையன். இப்படிப்பட்ட வியூகங்களை ரகசியமாக செயல்படுத்தி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. ஆக மொத்தம் சுதீஷ் + செங்கோட்டையன் + முனுசாமியின் அதிரடிகளால், ஈரோடு அதிமுக களம் தகித்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+