Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெண்டா உடைகிறதா அதிமுக? மீண்டும் எடப்பாடிக்கு தலைவலி.. "இவங்க" ஒன்னு சேர போறாங்களாமே.. போச்சு போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சி தோல்வி கிடைத்திருக்கிறது.. இதையடுத்து, கட்சிக்குள் ஏகப்பட்ட புகைச்சல் புகைந்து கொண்டிருக்கிறதாம். இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

அதிமுகவுக்குள்ளேயே எப்போதும் இரண்டு விதமான டீம் செயல்படுவதாக கூறப்படுவதுண்டு.. அதாவது, எடப்பாடிக்கு ஆதரவான டீம், மற்றொன்று பாஜகவுக்கு விசுவாசமான டீம்.

Edappadi Palanisamy AIADMK lok sabha election result BJP alliance AIADMK Alliance

மூத்த தலைவர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், போன்றவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களாக கருதப்படும் நிலையில், எஸ்பி வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எல்லாம் பாஜகவுக்கு விசுவாசிகளாக இருப்பதாக எப்போதுமே ஒரு மறைமுகபேச்சு உண்டு.

எடப்பாடி பழனிசாமி: அதனால்தான், கூட்டணியிலிருந்து பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்ட நிலையில், வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பாஜக பக்கம் தாவ இருப்பதாக, கடந்த ஒரு வருட காலமாகவே செய்திகள் கசிந்தவாறேயிருந்தது.. லோக்சபா தேர்தலுக்கு முன்புகூட இவர்களை தங்கள் பக்கம் கொண்டுவர, கொங்கு மண்டல பாஜக பிரமுகர் முயற்சித்ததாகவும் சொன்னார்கள்..

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விட்டு, இதுவரை யாருமே அதிமுகவை விட்டு பாஜகவுக்கு செல்லவில்லை. மாறாக, பாஜகவை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்திருந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வியிருக்கிறது.. இதையடுத்து, அதிமுகவுக்குள் புகைச்சல் அதிகமாகி இருக்கிறதாம். இதுகுறித்து நமக்கு பிரத்யேகமாக செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது.

கூட்டணி பலம்: தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், கூட்டணி பலம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிப்பதாக எடப்பாடிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்களாம்..

கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், செல்லூர் ராஜு, கே.சி.வீரமணி ஆகியோர், பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டிருக்கக்கூடாது என தேர்தல் ரிசல்ட் நமக்கு உணர்த்துகிறது என்று வெளிப்படையாகவே எடப்பாடியிடம் கூறியிருக்கிறார்கள். அதிமுக தலைவர்கள், தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு பேச்சும் பேசுவதாக எடப்பாடி புலம்பியிருக்கிறார்.

கடுப்பான எடப்பாடி: எல்லோரிடமும் கேட்டுத் தானே பாஜக கூட்டணியை முறித்தோம் ; இன்றைக்கு நான் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுத்தது போல பேசுவது என்னை சங்கடப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதில், தங்கமணியும் வேலுமணியும் தான் கொஞ்சம் ஓவராகவே எடப்பாடியை காயப்படுத்துவது போல பேசிவிட்டனராம்.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் அணித் தலைவர்கள், பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தைக் கூட்டுமாறு எடப்பாடிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது... எனவே, உடனடியாக இந்த கூட்டத்தைக் கூட்டும் முடிவில் இருக்கிறாராம். கூட்டம் கூட்டப்படும் போது எடப்பாடிக்கு எதிரான குரல்கள் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று ஒரு க்ரூப் திட்டமிட்டிருக்கிறதாம்.

வலிமை: அதேபோல, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்பட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அல்லது பிரிந்து சென்ற ஜாம்பவான்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து அதிமுகவின் வலிமையை கூடுதலாக்க வேண்டும் என்று குரல் கொடுக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இனிமேல் எடப்பாடி தலைமையிலான ஒற்றை தலைமை என்பதை பரிசீலனை செய்து, கட்சியை வழி நடத்தவும், தேர்தல் கால முடிவுகளை மேற்கொள்ளவும் உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து, அதற்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து கட்சியை பாதுகாக்கும் புதிய நடைமுறையை முழுமையாக செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுக்க வைக்கும் நெருக்கடியை எடப்பாடிக்கு கொடுக்கும் ஒரு திட்டமும் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.

வெடிக்குமா சர்ச்சை: அதாவது, இனி எடப்பாடி மட்டும் தன்னிசையாக முடிவுகளை எடுக்கவும், செயல்படவும் செக் வைக்கும் விதத்தில் இந்த திட்டம் ஆராயப்படுகிறது. ஆக, அதிமுக கூட்டும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரும் ரகளை வெடிக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+