கனிமொழி வர்றாங்க.. அத்தையின் அந்த அமைதி.. ஸ்டாலினுக்கு போன விஷயம்.. நொறுங்கிய பிணக்கு.. மலர்ந்த பாசம்
சென்னை: சேலத்தில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள, இளைஞரணி மாநாட்டுக்கு திமுக தயாராகி வரும்நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. என்ன நடந்தது?
கலைஞர் மறைவுக்கு பிறகு, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக, உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்ததற்கு பிறகு, கனிமொழிக்கான முக்கியத்துவம் திமுகவில் குறைந்துவிட்டதாகவே கருதப்பட்டது. சில முக்கிய பொறுப்புகளை கனிமொழிக்கு ஒதுக்காமல் போன வருத்தம், அவரது ஆதரவாளர்களிடம் இருக்கவே செய்கிறது.

திமுக பலம்: அதாவது, தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு தரும்படி 3 வருடங்களுக்கு முன்பேயே அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி கேட்டார்கள்.. சட்டசபை தேர்தலுக்கு முன்பே கனிமொழிக்கு இந்த பதவியை தந்தால், அது திமுகவுக்கு கூடுதல் பலத்தை உருவாக்கும், அதன்மூலம் அமமுக, அதிமுகவின் செல்வாக்கை எளிதாக குறைத்து விடலாம் என்றும் வலியுறுத்தினார்கள்..
அதுமட்டுமல்ல, அன்று மறைந்த தலைவர் கருணாநிதி இருந்தபோது, மு.க.அழகிரி எப்படி செயல்பட்டாரோ, அதுபோலவே தென்மண்டலத்தை தன் வசம் கனிமொழி கொண்டுவந்துவிடுவார் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியபடியே இருந்தனர்.. திமுக மேலிடம் இதனை அந்த சமயத்தில் பரிசீலிக்கவில்லை என்றாலும், இதற்கு பிறகு, கனிமொழிக்கான முக்கியத்துவத்தை தர மறுத்ததில்லை.
கனிமொழி: இதோ இப்போதும் கனிமொழிக்கான "கிரேஸ்" திமுகவில் உயர்ந்தபடியே உள்ளது.. திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 5 லட்சம் இளைஞர்களை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதால் பம்பரமாய் சுழன்றுகொண்டிருக்கிறார்கள் இளைஞர் அணியினர்.
இந்த மாநாட்டில், திமுக கொடியை ஏற்றும் பொறுப்பு கனிமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இளைஞர் அணி மாநாட்டில் அந்த அணியின் மாநில செயலாளர் தான் கொடியேற்றுவார்... காரணம், மாநாட்டில் கழக கொடி ஏற்றுவது என்பது மிகமிக பெருமைக்கரிய விஷயமாகும்..
திமுக கொடி: திமுகவை பொறுத்தவரை, கட்சியின் கொடியை தங்களின் உயிராக நினைப்பவர்கள். ... அப்படித்தான் கட்சியை வளர்த்தும் வார்த்தும் வைத்துவிட்டு சென்றுள்ளார் கலைஞர்.
அந்த வகையில், உயரிய மரியாதைக்குரிய கொடியை மாநாட்டில் தானது கையால் ஏற்றுவதை உதயநிதி ஏற்காமல், தன்னுடைய அத்தையும் கட்சியின் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழிக்கு வழங்கியுள்ளார்.. இதற்கு ஒரு பின்னணி காரணமும் இருக்கிறது.
அதாவது இளைஞரணி மாநாடு என்றாலும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். முக்கிய பொறுப்பில் உள்ள சீனியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டபோது கனிமொழியை, கன்சிடர் பண்ணவில்லையாம் இளைஞரணி. இதைப்பற்றி கனிமொழியிடமே அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.
அதற்கு கனிமொழி, "மிகப்பெரிய கட்சியில் இதெல்லாம் இயல்பான விஷயம். இதற்காகவெல்லாம் அப்-செட்டாகக்கூடாது. தொடர்ந்து கட்சி பணி செய்யுங்கள். உழைப்புக்கேற்ற உயர்வுகள் கிடைத்தே தீரும்" என்று அவர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார் கனிமொழி.
உதயநிதி: இந்த தகவல், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் கவனத்துக்கு சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே, 5 லட்சம் பேரை இலக்கு வைத்து ஏற்பாடுகள்நடந்து வரும் நிலையில் அந்த இலக்கை அடைவது கடினம்..
காரணம் இளைஞரணியினருக்கு, மாவட்ட செயலாளர்கள் பலரும் ஒத்துழைப்பதில்லை என்கிற புகார்கள் உதயநிதிக்கு சென்றிருந்த நிலையில், கனிமொழியின் ஆதரவாளர்களும் அதிருப்தியடைவதை உதயநிதி விரும்பவில்லையாம்.
மேலும், கனிமொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருந்தால் அதுவும் சர்ச்சையாகலாம் என்றும் நினைத்துள்ளார்.. அதனால்தான், உதயநிதிக்கான ஆளுமையை நிரூபிக்கும் ஒரு மாநாட்டு நிகழ்வு குறித்து தேவையற்ற ஆரோக்கியமற்ற "காண்ட்ராவெர்சி" உருவாகக்கூடாது என ஸ்டாலினும் நினைத்தார். அதனால்தான், உடனே உதயநிதியிடம் ஆலோசித்த ஸ்டாலின், மாநாட்டில் கொடியேற்றும் பொறுப்பை கனிமொழிக்க் கொடுக்க டிக் அடித்தார்.
அதிரடி பின்னணி: கனிமொழிக்கு கொடியேற்றும் வாய்ப்பு தரப்பட்டதன் பின்னணி இதுதான் என்கிறார்கள் திமுகவின் சீனியர் மாவட்ட செயலாளர்கள்... கனிமொழிக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மாவட்டத்துக்கு 5 பஸ்களில் சேலத்துக்கு செல்ல கனிமொழி ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. அடுத்து என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications